ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நடிகர் எஸ்.ராஜம் வாழ்க்கை வரலாறு

1934ல் வெளிவந்த சீதா கல்யாணம், 1935ல் வெளிவந்த ராதா கல்யாணம், 1936 ல் வெளிவந்த ருக்மணி கல்யாணம் ஆகிய மூன்று கல்யாண படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர், எஸ்.ராஜம். இவர் பதிமூன்று வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அப்படின்னா பாத்துக்குங்க... இவரு எப்படி நடிக்க வந்தார்ன்னு சினிமாவுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு இந்த பகுதியில் தெரிஞ்ச்சுக்குவோம். எஸ்.ராஜத்தின் தந்தை பெயர் வி.சுந்தரம் ஐயர். மயிலாப்பூர் ஏரியாவில் புகழ்பெற்ற வழக்கறிஞர். அவரது நண்பர் அன்று உலகம் அறியாத பாடலாசிரியர் பாபநாசம் சிவன். தன்னிடம் சம்ஸ்கிருதத்தை தேடி வந்த சிவனை, தனது இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் இசையை சொல்லிக் கொடுக்க சொன்னார். 

வி.சுந்தரம் ஐயரின் மூத்த மகன் எஸ்.ராஜம், மகள் எஸ்.ஜெயலட்சுமி, இரண்டாவது மகன் எஸ்.பாலசந்தர் ஆகியோருக்கு ஆகியோருக்கு இசை கற்பித்தார், சிவன். இதனால், பாபநாசம் சிவனின் முதல் சீடரானார். ராஜம். மேலும் கர்னாடிக் இசையைக் கற்றுக் கொண்டார், வழக்கறிஞரின் மகனாக இருந்ததால் அவரது கல்வி புறக்கணிக்கப்படவில்லை. புகழ்பெற்ற பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படித்தார். ஓவியம் வரைவதிலும் திறமை இருந்தது. திரைப்பட ஆர்வலராகவும் இருந்தார். 

பி.எஸ்.பள்ளிக்கு பின்புறம் திறந்த வெளியில் அமைந்திருந்த ‘டென்ட் சினிமாவில் 'கலனா' அல்லது 3 'டம்பிடிகளுக்கு' டிக்கெட் வாங்கிக் கொண்டு ஆஜராகிவிடுவார். அங்கு பல மௌனப் படங்களைப் பார்த்திருக்கிறார். இப்படி கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த எஸ்.ராஜம், சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று அப்போது அறியவில்லை. 

திடீர் என ஒரு நாள் "கோலாப்பூர் போறோம். சினிமாவில் நடிக்கிறோம். கிளம்புங்க" என்று சுந்தரம் ஐயர் சொன்னதும், அனைவரும் ஒரு பிகினிக் செல்ல தயாராவைத்து போல உணர்ந்தார்கள். 

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான வி. சாந்தாராம், அப்போது புகழ்பெற்ற பிரபாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தமிழில் சீதா கல்யாணம் படம் தயாரிப்பதாகவும், அவருக்கு உதவும் நோக்கில் நாம் போகிறோம்.  அந்தப் படத்தை பாபுராவ் ஃபெந்தர்கர் என்பவர் டைரக்ட் பண்ணப் போறார். அவருக்கு உதவியாக நம்ம ஊரை சேர்ந்த கே.ராம்நாத் என்கிற பத்திரிக்கையாளர் வேலை பார்க்கப் போகிறார். பாட்டும், இசையும் உங்களுக்கு குருவாக இருந்த பாபநாசம் சிவன் தான். அவரும் நம்முடன் வருகிறார் என்று தெரிவித்து  தனது மனைவி பார்வதி, மகன்கள் எஸ்.ராஜம், எஸ்.பாலசந்தர், மகள் எஸ்.ஜெயலட்சுமி ஆகியோரை அழைத்துக் கொண்டு ரயிலேற சென்றார்,  வி.சுந்தரம் ஐயர். 

அவர்களுகாக அங்கே ஒரு அமெச்சூர் நாடகக் குழு காத்திருந்தது. பாபநாசம் சிவனும் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர கோலாப்பூர் செல்ல சென்னையிலிருந்து மீராஜ் வரை ரயிலில் ஏறினர். எல்லோரும் ஒரே குடும்பமாக மூட்டை முடிச்சுகளுடன் ஆனந்தமாக சென்றார்கள். 

எஸ்.ராஜம் அவர்களுக்கு நாயகன் ராமன் வேடம், அவரின் அக்கா எஸ்.ஜெயலட்சுமிக்கு கதையின் நாயகி சீதா வேடம், அவரின் தம்பி வீணை எஸ்.பாலசந்தருக்கு இராவணன் அரசவையின் பாடகர்,  அப்பா சுந்தரம் ஐயருக்கு ஜனகா பாத்திரம் என எல்லோருக்கும் கதாப்பாத்திரம் கொடுத்து நடிக்க ஒத்திகை பார்க்கப்பட்டது. 

மராட்டி மற்றும் ஹிந்தி படங்களை இயக்கிய பாபுராவ் ஃபெந்தர்கர், கே.ராம்நாத் உதவியுடன் தமிழில் ‘சீதா கல்யாணம்’ படத்தின் இயக்க வேலைகளில் இறங்கினார். படத்தில் நிறைய பாடல்கள் இடம்பெற்றன. அதில் ‘நல் விடை தாரும்…’ (ராக கல்யாணி, தியாகராஜரின் ‘அம்மா ராவமா…’ அடிப்படையில்)…. ‘கானணம் எது சுவாமி…’ (புரந்தரதாசரின் இசையமைப்பில் கானட ராகம், ‘சேவக கான ருச்சிரே…’) , ‘சேவக கான ருச்சிரே…’) பாடல்கள் புகழ் பெற்றன. அப்போ நடிக்கிறவுங்க தானே பாட்டானும். அதனால், ராஜம் பாடிய பாடல்களில் சில பாடல்கள் பிரபலமடைந்த. 

இந்தப் படத்தின் மூலமா இசையமைப்பாளரா பாபநாசம் சிவன் திரைப்பட பாடலாசிரியராக, இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் 1933 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் இருந்து வந்த பெரும்பாலான தமிழ் சினிமா ஹீரோக்கள் ராஜம் போல அழகாகவும் கவர்ச்சியாகவும் இல்லாத காலம் அது. அவரது பிரபுத்துவ தாங்கி, கூர்மையான அம்சங்கள் மற்றும் மெலிதான உருவம் அவரை எல்லா வயதினருக்கும் பிடித்தமானதாக ஆக்கியது. அவரது சகோதரி ஜெயலட்சுமி, சீதையாக நடித்திருந்தது சில ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், இந்த ஜோடிக்கு ஆட்சேபனை எழுந்தது. 

எஸ்.ராஜத்தின் அடுத்த படம் ‘ராதா கல்யாணம்’.  மீனாட்சி மூவிஸ் தயாரித்து, ‘சாச்சி’ என்று அழைக்கப்படும் சி.கே. சதாசிவன் இயக்கியிருந்தார். ராஜம் கிருஷ்ணராக நடித்தார், ராதா முந்தைய நட்சத்திரமான எம்.ஆர்.சந்தானலட்சுமி. கோயில் நகரமான கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், தமிழ் நாடகத்துறையில் நுழைந்து, முத்திரை பதித்தார். திறமைசாலியான சாச்சி, இப்படத்தின் மூலம் அவரை திரைப்படங்களுக்கு அழைத்து வந்தார். சந்தானலட்சுமி ராஜத்தை விட மிகவும் வயதானவர், காதல் காட்சிகளைச் செய்யும்போது அவர் வெட்கப்பட்டதில் ஆச்சரியமில்லை! அதுல ராதையை விட்டு பிரிந்த வருத்தத்தை காட்ட வேண்டும். அந்த பாடல் காட்சிக்கு 15 நாள் ஒத்திகை பார்த்து ஒரே ஷாட்டில் பாட்டை பாடிக் கொண்டே நடித்து அசத்தினாராம் ராஜம். இந்த பாடல் காட்சியில் ராஜத்தின் அப்பா, அம்மா, தங்கை என அனைவருமே அதில் நடித்தனர். அதற்காக அவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ராஜத்திற்கு மட்டும் ஐந்தாயிரம் ரூபாய்மாக சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். அந்த பாடல் காட்சியை சீனிவாசா சவுண்ட் ஸ்டுடியோவில் எடுத்திருக்காங்க... இசையமைத்தவர் பல புதிய ராகங்களை தென்னாட்டில் பிரபலப்படுத்திய முத்தையா பாகவதர். 

பிறகு ‘ருக்மணி கல்யாணம்’ வந்தது, ராஜம் மீண்டும் கிருஷ்ணராக நடித்தார். பிரபல மராட்டி திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பால்ஜி ஃபெந்தர்கர் இதை இயக்கியுள்ளார். இவர் ‘சீதா கல்யாணம்’ படத்தை இயக்கிய பாபுராவின் சகோதரர். அவருக்கு ஜோடியாக ருக்மணியாக எம்.எஸ்.விஜயாள் நடித்தார்.  படம் வெற்றி பெறவில்லை என்றாலும், ராஜம் கிருஷ்ணராகத் தோன்றியதற்கும், பால்ஜி ஃபெண்டர்கரின் காவியக் கதையின் சுவாரஸ்யமான திரை விவரிப்பும் நல்லா இருந்தது என்று பாராட்டினார்கள். 

அதன் பிறகு வாய்ப்புகள் உடனே அமையவில்லை. அதனால், தனக்கு பிடித்த ஓவியம், புகைப்படம் ஆகிய கலைகளில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போரின் போது சென்னை தாக்குதலுக்கு உள்ளாகுமோ என்ற பயத்தில் ராஜத்தின் குடும்பமே கோவையில் தங்கினார்கள். அங்கு கோவை ஸ்ரீராமுலு நாயுடு சிவகவி படத்தை எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் எடுத்த போது, அந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. 

சிவகவி படத்தில் எம்.கே.தியாகராஜரின் பக்தியை சோதிக்க மாறுவேடத்தில் வரும் முருகப்பெருமானாக எஸ்.ராஜம் நடித்தார். சிவகவியின் மனைவி அமிர்தவள்ளியாக ராஜத்தின் தங்கை எஸ்.ஜெயலட்சுமி நடித்தார். பாடசால குருவாக ராஜத்தின் அப்பா சுந்தரம் அய்யர் நடித்தார். 

அந்தப் படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்தது எஸ்.ராஜத்தின் மனைவிக்கு பிடிக்கவில்லை. இசைஞானமும், நல்ல குரல்வளமும், அழகும் நிரம்பிய இளம் நடிகராக வளர்ந்து கொண்டிருந்த நீங்கள் இப்படி துணை நடிகராக நடிப்பது பிடிக்கவில்லை. இனிமேல் நீங்கள் படங்களில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். அதனால், மனைவியின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார், ராஜம். 

அவரது சகோதரி ஜெயலட்சுமியும் அந்தப் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டவர், பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், இளையவர் வீணை எஸ்.பாலசந்தர் திரையுலகில் பல புதுமைகளை செய்த இயக்குநர். அவரைப் பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் தெரிஞ்ச்சுக்குவோம்... 

இரண்டாம் உலக போருக்கு பிறகு ராஜம், பிறகு சென்னை வானொலியில் வேலைக்கு சேர்ந்து மக்களின் இசை ரசனையை உயர்த்த வகுப்புகள் எடுத்தார். அப்படி அவரிடம் இசை பயின்ற அர்ஸ் என்ற கன்னட நடிகர் ராஜா விக்கிரமா என்ற கன்னட படத்தை இயக்கினார். அவரது படத்துக்கு ராஜம் இசையமைத்தார். பிறகு, மானாவதி என்ற படத்தில் ரஜினிகாந்த் ராவ் இசையமைக்க பால சரஸ்வதியுடன் ராஜம் பாடிய பாடல் தான் ''ஓ மலய மாருதமே''. 

1919ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி பிறந்த எஸ்.ராஜம், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தனது 91வைத்து வயதில் காலமானார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக