சமீபத்தில ராக்கி சாவந்த் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்த போது எனக்குஆச்சர்யமாக இருந்தது. இந்திய திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக, சுயம்வரம் நடத்தி தனது மணாளனை தேர்வு செய்துள்ளார் ராக்கி.படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி. இந்த செய்தியை படித்த போது அவருடன் பழகிய அனுபவங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அதை இங்கே பதிவு செய்கிறேன்.
மாஸ் மூவி மேக்கர் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜ் தயாரித்த பிரமாண்டமான கமர்சியல் படம் கம்பீரம். சரத்குமார் அசிஷ்டென்ட் கமிஷனர் முத்துசாமியாக நடித்த படம். அரசு சுரேஷ் இயக்கினார்.
இந்தப் படத்தில ஒரு ஐட்டம் ஸாங் இருந்தது. அதில் புதிதாக வந்த கவர்ச்சி தாரகையை நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம். அதன் படி அப்போது பரபரப்பாக பேசப்பட்ட "சின்ன வீடா வரட்டுமா" பாடல் புகழ் தேஜாஸ்ரீ நடிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் விருப்பப்பட்டார். அவரது கால்ஷீட் பற்றி என்னிடம் விசாரிக்க சொன்னார் தயாரிப்பாளர். அப்போது நான் தேஜாஸ்ரீயை தொடர்பு கொண்ட போது எங்களுடைய கால்ஷீட் தேதியில் ஜூட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கமிட்டாகி இருந்தார். அதனால் வேறு யாரையாவது புதுசா கொண்டு வர முடிவு செய்து மாடல் கோ ஆர்டினேட்டர்களிடம் விசாரித்த போது, ராக்கி சாவந்த் ஆடிய ஒரு ஆல்பத்தை லேப் டாப்பில் காட்டினார் அவர். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் அவரது நடனம் பிடித்து போயிருந்தது. மறுநாளே அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.
ஏவி.எம் ஸ்டுடியோவில் உள்ள நான்காவது புளோரில் எகிப்த் காச்சார வடிவில் பிரமாண்ட தங்கமாளிகையை உருவாக்கியிருந்தார் ஆர்ட் டைரக்டர் பத்மஸ்ரீ தோட்டாதரணி. அதற்கு பர்தது லட்சம் செலவிட்ப்பட்டதாக தகவல். அதில் மணிசர்மாவின் மயக்கும் இசையில் பா.விஜய் எழுதிய "சம்பல் காட்டு கொள்ளைக்காரி.. சலவை செஞ்ச வெள்ளைக்காரி... சரசத்துக்கு வாடா வாடா டேய்" என சங்கீதா பாடிய காந்த குரலுக்கு வாயசைத்து தங்க தேவதைகளோடு சேர்ந்து அதிவேக அதிரடி நடனம் ஆடினார் ராக்கி. அதற்கு ஸ்நேக் சாந்தி நடனம் அமைத்திருந்தார். சாந்தி நடன இயக்குநராக அறிமுகமானது அந்த பாடல்தான். அதே போல சங்கீதா பாடிய முதல் பாடலும் அதுதான்.
நீர், நெருப்பு, காற்று என மூன்று விதமான பேக்ட்ராப்பில் உருவான அந்த பாடலுக்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்தார். மும்பையில் இருந்தும் நடன அழகிகள் வரவழைக்கப்பட்டு அந்த பாடல் மூன்று நாள் படமானது. அதில் ஆடிய நடன அழகிகள் ராக்கியின் நடன அசைவுகளை பிரமித்து ரசித்தனர். இவர் ஒரே டேக்கில் ஓகே செய்தார். நடன அழகிகள் மட்டும் பல டேக் வாங்கியது தனி கதை.
இந்தப் பாடலுக்காக பித்யேகமாக விலை உயர்ந்த உடைகள் தயாராகியிருந்தது. முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்த ராக்கி தனது உடையை அணிந்து பார்த்துவிட்டு கோபமானார். காஸ்டியூம் டிசைனரை உடனே அழைத்தார். இவ்வளவு சின்னதாக இருக்கிறதே என கோபப்படப்போகிறார் என்று பயந்து போன காஷ்டியூமருக்கு அவர் கேட்டதும் பெரிய ஷாக். இவ்வளவு பெருசா இருக்கே. இன்னும் என் கிளாமரை காட்டுகிற மாதிரி சின்னதாக்குங்கள் என்றார். இதை கேள்விப்பட்டதும் எங்களுக்கும் ஆச்சரியம். சிரிப்பு.
அந்த உடை அவருக்கு பிடித்திருப்பதாக பலமுறை காஸ்டியூமரிடம் சொன்னதால் அதை அவரிடமே கொடுக்கச் சொல்லிவிட்டார் தயாரிப்பாளர்.
நான் ராக்கியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடமிருந்து அப்போது தெரிந்து கொண்ட விஷயங்கள். நான் ஐந்து வருடமாக எல்லாவிதமான நடனகலைகளையும் மும்பையில் கற்று வருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு கோவிந்தாவுடன் செருக்காகுளம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தேன். சஞ்சய்தத் மகன் சாயத்காந்த் கதாநாயகனாக நடித்த ஜூராலியா ஹேதும்மே படத்திலும் ரெண்டாவது கதாநாயகிதான். இப்போ பைசா வசூல் படத்தில கதாநாயகியாக நடிக்கிறேன். இது ஹீரோயிணி ஓரியண்ட் சப்ஜெக்ட். டி சீரிஸ் நிறுவனம் தயாரித்த ஆல்பம் ஒன்றில் நடித்தேன். அந்த ஆல்பம் பெரிய ஹிட். நான் செளத் இந்திய படங்களை அதிகம் விரும்பி பார்ப்பேன்.
என்றார். இப்போது ராக்கி சுயம்வரத்தின் மூலம் தனக்கான துணையை தேடியிருக்கிறார். விரைவில் டும்டும்டும்.
- ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக