வியாழன், 22 அக்டோபர், 2009

முதல்‌வர்‌ கலை‌ஞரி‌ன்‌ ஊர்‌ பா‌சம்‌.

முதல்‌வருடன்‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ பா‌லன்‌
தமி‌ழக அரசி‌ன்‌  2007ம்‌ ஆண்‌டுக்‌கா‌ன சி‌றந்‌த குணச்‌சி‌த்‌தி‌ர நடி‌கருக்‌கா‌ன வி‌ருது நடி‌கர்‌ எம்‌.எஸ்‌.பாஸ்‌கர்‌ அவர்‌களுக்‌கு அறி‌வி‌க்‌கப்‌ட்‌டி‌ருந்‌தது. அந்‌த அறி‌வி‌ப்‌பு‌ வந்‌தது முதல்‌ அவருக்‌கு நி‌றை‌ய பா‌ரா‌ட்‌டுக்‌களும்‌, வா‌ழ்‌த்‌துக்‌களும்‌ குவி‌ந்‌துகொ‌ண்‌டி‌ருந்‌தது. சி‌ம்‌பு‌தே‌வன்‌ இயக்‌கும்‌ இரும்‌பு‌க்‌கோ‌ட்‌டை‌ முரட்‌டு சி‌ங்‌கம்‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருந்‌த அண்‌ணன்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ எனக்‌கு தொ‌லை‌பே‌சி‌யி‌ல்‌ ஒரு தகவலை‌ சொ‌ன்‌னா‌ர்‌. அதா‌வது முதல்‌வர்‌ கலை‌ஞர்‌ அப்‌பா‌ அவர்‌களை‌ சந்‌தி‌த்‌து நா‌ன்‌ நன்‌றி‌ தெ‌ரி‌வி‌க்‌கனும்‌. அதற்‌கு அப்‌பா‌ய்‌ண்‌ட்‌மெ‌ண்‌ட்‌ வா‌ங்‌கப்‌போ‌றே‌ன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌. நல்‌ல வி‌ஷயம்‌ உடனே‌ செ‌ய்‌யு‌ங்‌க என்‌று கூறி‌னே‌ன்‌.

அதே‌ போ‌ல தீ‌பா‌வளி‌க்‌கு மறுநா‌ள்‌ முதல்‌வர்‌ அலுவலகத்‌தி‌ல இருந்‌து அவருக்‌கு நா‌ளை‌ கா‌லை‌ சந்‌தி‌க்‌க வா‌ங்‌க என்‌று தகவல்‌ வந்‌தது.‌ அண்‌ணன்‌ எனக்‌கு போ‌ன்‌ செ‌ய்‌து அண்‌ணே‌  கலை‌ஞர்‌ அப்‌பா‌வை‌ நா‌ளை‌ கா‌லை‌யி‌ல்‌ பா‌ர்‌க்‌க அப்‌பா‌ய்‌ன்‌ட்‌ மெ‌ண்‌ட்‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. நா‌ன்‌ பா‌ர்‌க்‌கப்‌ போ‌றே‌ன்‌ நீ‌ங்‌களும்‌ என்‌ கூட வா‌ங்‌க என்‌று அழை‌த்‌தா‌ர்‌.

தமி‌ழ்‌ தி‌ரை‌ப்‌பட ‌தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌தி‌ல்‌ நா‌ன்‌ பி‌.ஆர்‌.ஓ.வா‌க பணி‌யா‌ற்‌றி‌ய போ‌து பல முறை‌ தி‌ரு‌ கே‌.ஆர்‌.ஜி‌. அவர்‌களுடன்‌ முதல்‌வர்‌ இல்‌லத்‌தி‌லும்‌‌, கோ‌ட்‌டை‌யி‌லும்‌ செ‌ன்‌று முதல்‌வரை‌ சந்‌தி‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.‌ ஆனா‌ல்‌ அவரி‌டம்‌ பே‌சி‌யது கி‌டை‌யா‌து. அறி‌முகப்‌படுத்‌தி‌க்‌கொ‌ள்‌கி‌ற வா‌ய்‌ப்‌பு‌ம்‌ அமை‌யவி‌ல்‌லை‌.

இந்‌த முறை‌ செ‌ன்‌ற போ‌து முதல்‌வரி‌டம்‌ நன்‌றி‌ தெ‌ரி‌வி‌த்‌து வா‌ழ்‌த்‌து பெ‌ற்‌ற எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ அவர்‌கள்‌ என்‌னை‌ முதல்‌வரி‌டம்‌ அறி‌முகப்‌படுத்‌தி‌னா‌ர்‌. அப்‌போ‌து அவர்‌ எண்‌ணை‌ கா‌ட்‌டி‌ "என்‌னடை‌ய  பி‌.ஆர்‌.வா‌க பா‌லன்‌ அண்‌ணன்‌ இருக்‌கா‌ருப்‌பா‌. இவருக்‌கு தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌தா‌ன்‌ சொ‌ந்‌த‌ ஊரு" என்‌று சொ‌ன்‌ன போ‌து, முதல்‌வர்‌ அவர்‌கள்‌ என்‌னை‌ பா‌ர்‌த்‌து "தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌யா‌?" என்‌று அவரது அந்‌த அழகா‌ன குரலி‌ல்‌ கே‌ட்‌டா‌ர்‌.

எனக்‌கு பே‌ச்‌சே‌ வரவி‌ல்‌லை‌. முதல்‌வரி‌டம்‌ செ‌ன்‌று என்‌னை‌ப்‌ பற்‌றி‌யு‌ம்‌ என்‌ தந்‌தை‌ கோ‌பா‌லகி‌ருஷ்‌‌ணன்‌, என்‌ சி‌த்‌தப்‌பா‌ அரி‌கி‌ருஷ்‌ணன்‌ பற்‌றி‌யு‌ம்‌ அவரது போ‌ரா‌ட்‌ட வா‌ழ்‌க்‌கை‌ பற்‌றி‌யு‌ம்‌ கூறி‌னே‌‌ன்‌.அவரும்‌ அன்‌போ‌டு கே‌ட்‌டுக்‌கொ‌ண்‌டி‌ருந்‌தா‌ர்‌. நா‌ன்‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ எழுதவது பற்‌றி‌யு‌ம்‌ படங்‌களி‌ல்‌ பி‌.ஆர்‌.ஒ.வா‌க பணி‌யா‌ற்‌றுவது பற்‌றி‌யு‌ம்‌ பா‌ஸ்‌கர்‌ அண்‌ணன்‌ முதல்‌வரி‌டம்‌ சொ‌ன்‌னா‌ர்‌.

பி‌றகு அங்‌கி‌ருந்‌து தி‌ரும்‌பி‌ கா‌ரி‌ல்‌ வரும்‌ போ‌து முதல்‌வரி‌ன்‌ உழை‌ப்‌பு‌ம்,‌ சா‌தனை‌யு‌ம்‌ பற்‌றி‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டே‌ வந்‌தோ‌ம்‌. ஆனா‌ல்‌ ஊர்‌ பெ‌யரை‌ சொ‌ன்‌னதும்‌ வா‌ஞ்‌சை‌யோ‌டு "தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌யா‌?" என்‌று முதல்‌வர்‌ கே‌ட்‌டது, ஊர்‌ கா‌ரர்‌ என்‌றதும்‌ எப்‌படி‌ ஆசை‌யோ‌டு கே‌ட்‌டா‌ர்‌ பா‌த்‌‌தீ‌ங்‌களா‌ என்‌று முதல்‌வரி‌ன்‌‌ ஊர்‌ பா‌சம்‌ பற்‌றி‌‌ வி‌யந்‌து வி‌யந்‌து அண்‌ணன்‌ பா‌ஸ்‌கர்‌ என்‌னி‌டம்‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தா‌ர்‌.

என்‌னா‌ல்‌ மறக்‌க முடி‌யா‌த அந்‌த சந்‌தி‌ப்‌பை‌ யா‌ரி‌டமா‌வது பகி‌ர்‌ந்‌துகொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌ என்‌று யோ‌சி‌த்‌தே‌ன்‌. இதோ‌ பதி‌வு‌ செ‌ய்‌துவி‌ட்‌டே‌ன்‌. படி‌யு‌ங்‌கள்‌. உங்‌களடை‌ய கருத்‌துக்‌களை‌ கூறுங்‌கள்‌.

பதி‌வு‌: அக்‌டோ‌பர்‌ 22

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தமி‌ழ்‌த்‌ தி‌ரை‌யு‌லகி‌ன்‌ இரா‌மே‌ஸ்‌வரம்‌ பே‌ரணி‌

கே‌.பா‌லசந்‌தர்‌ கொ‌டி‌யசை‌த்‌து ரயி‌லை‌ அனுப்‌பு‌கி‌றா‌ர்‌
திரைப்பட PRO சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பிலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்கு அழைப்பு வந்தது

பெப்ஸியைச் சேர்ந்த 24 சங்கத்திலிருந்து அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு சுமார் 2000 பேர் வரை தேர்வு செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி என்று அனைத்துத் தரப்பினரும் க‌லந்து கொ‌ண்டனர். எங்க‌ள் யுனி‌யன் ச‌ார்பில்‌ எனது தலை‌மை‌யில்‌ நான்‌, வெ‌ட்டுவா‌னம் சி‌வகுமார்‌, ச‌நதுரு, மே‌ஜர்தா‌ச‌ன், க‌ணேஷ‌குமார்‌, வெங்‌க‌ட் ஆகி‌யோ‌ர் க‌லநதுகொண்‌டோம்‌. எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் எழும்பூரிலிருந்து 18ஆம் தேதி மாலை நான்கு மணிக்குக் கிளம்பியது. முன்னதா‌க‌ இயக்குநர் கே‌.பா‌லச‌நதர் கொ‌டி‌யசை‌த்து ரயி‌லை‌ தொ‌டங்கி‌ வை‌த்தார்.‌


ரயிலில் இரவு உணவாக சப்பாத்தி, சிக்கன், தயிர்சாதம் ஆகியவை பரிமாறப்பட்டன. நளபாக சங்க உதவியாளர்களே இதைக் கவனித்துக் கொண்டார்கள். ஒரு அவுட்டோர் சூட்டிங் போனால் எந்த மாதிரியெல்லாம் கலைஞர்களைக் கவனித்துக் கொள்வார்களோ அப்படி இருந்தது இந்தப் பயணம்.

இராமேஸ்வரத்தில் எங்களுக்காகக் கிட்டத்தட்ட அனைத்து லாட்ஜ்களிலுமாக சேர்த்து சுமார் 450 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. காலை ஆறு மணிக்கு ராமேஸ்வரம் செ‌ன்ற எங்களைச் சங்க வாரியாகப் பிரித்துத் தனித்தனி வேன்களில் அழைத்துப் போய், அறைகளில் சேர்ந்தார்கள். காலை உணவும் அவரவர் அறைகளுக்கே வந்து சேர்ந்தது. ஒரு சிலர் அருகிலேயே இருந்த இராமேஸ்வரம் கோயிலுக்குப் போய் வந்தார்கள்.

எமது யூ‌னி‌யன்‌ உறுப்‌பி‌னர்‌களுடன்‌ நா‌ன்‌

பின்னர் மதிய உணவு தமிழ்நாடு ஓட்டலில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தே பேரணி தொடங்கியது. ஊர்மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் இருந்து கவனிக்க, சுமார் போலீஸாரின் துணையோடு அந்தப் பேரணி பொதுக் கூட்டம் நடைபெறும் கி‌ழக‌ாடு இடத்தை அடைந்தது.சுமார் பத்து ஏக்கர் அளவிலான இடத்தில் அந்த பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து சென்ற 2000 பேரோடு அந்தப் பகுதி மக்களின் கூட்டமும் சேர்ந்துகொள்ள இராமேஸ்வரமே திருவிழா கோலம் பூண்டது. திரையுலக பிரமுகர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துப் பேசினார்கள்.


க‌வி‌யரசு வை‌ரமுத்து; இலங்கை நமது மண். நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிக பாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானவைதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22ம் தேதி நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

எங்கள் தமிழ் குலப் பெண்களை சிவகாசி பட்டாசுபோல வெடிவைத்து கொல்கிறது சிங்கள ராணுவம். அங்கு சிறுவர்கள், சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அனாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் ராஜபக்சே. அதற்காக உங்கள் ஓட்டுபெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ராடார் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில் நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது ராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். இதனை உடனே நிறுத்துங்கள். தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும். தனது ஒட்டுமொத்த பொது வாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதல்வரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

பே‌ரணி‌யி‌ல்‌ தி‌ரண்‌ட கூட்‌டம்‌


இராம.நாராயணன்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்சு வசதிகேட்டு பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு கொடுத்துள்ளார்.அனைத்து சங்கங்களின் ஒப்புதலுடன் அதனை நிறைவேற்றுவோம். அகதிகளாக வந்தவர்களுக்கு ரூ.6 லட்சம் செலவில் வேட்டி-சேலைகளை வழங்கினோம். தொடர்ந்து இதுபோலவே அவர்களுடன் இணைந்திருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்-தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமைகாக்கும் போராட்டம். நல்லவன் போல் நடிக்கும் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை பொறுக்கமாட்டோம், பொங்கி எழுவோம்.


சீமான்: இந்த கூட்டத்தை ராமேசுவரத்தில் ஏன் நடத்துகிறோம் என்றால், இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கைக்கு நாம் செல்வது பெரிய விஷயமல்ல என்று சிங்கள வெறியர் ராஜபக்சேவுக்கு தெரியப்படுத்தவே. இங்குள்ள 6 கோடி தமிழர்களும் கடல்தாண்டி வருவார்கள். பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் . அதை எப்படி நாம் வன்முறை என்று சொல்ல முடியும்? இந்தியாவில் தமிதமிழர்களை அடித்தார்கள். ஆனால் நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழ் ஈழ மண்தான்.


இநதி‌யா‌வி‌ல் தமி‌ழர்களோ, கன்னடர்களோ பிரதமராகலாம் என அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர் ஒருபோதும் அதிபர் ஆக முடியாது. ஏனெனில் ஈழத் தமிழர் அதிபராவதற்கு அந்த நாட்டு சட்டத்தில் இடம் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை. ஈழத் தமிழனை வேரோடு அழித்து விடலாம் என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் அது நடக்காது. தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. அங்கு போக்குவரத்து துறை, தொழில் துறை, மருத்துவத் துறை என அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு எல்லை விரிவாக்கமும், சர்வதேச அங்கீகாரம்தான் கிடைக்க வேண்டும். சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். புரட்சி வெல்லும். தமிழ் ஈழம் வெல்லும்.


ஆர்.கே.செல்வமணி: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காக நமது நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை பற்றி இந்திய அரசு கேட்க மறுக்கிறது.நமக்கு துரோகம் செய்பவர்கள் வெளியில் இல்லை. நம்முடன் இருந்து கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள்.


அமீர்: இந்த மேடையில் ஒலிக்கும் குரல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும். அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதி அளிக்கட்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்து வெடிசத்தம் கேட்கிறது. அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாக செல்கிறார்கள்.இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை, கிறிஸ்தவர்களின் பிரச்சினை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் இதற்கு ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 4 எம்.பி.க்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? நம்மிடம் குரல் கொடுத்து பேசும் தலைவர்களே இல்லை. வாருங்கள் என்றால் யாரும் வருவதும் இல்லை. ஒரு பிரச்சினை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்தில் கூட சிலர் அழைத்தாலும் வருவதில்லை. ஒரு மாநில முதல்வர் அழைத்தாலும்கூட அவர்கள் அதனை ஏற்பது இல்லை. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்ற முடியும்? அவர்களை திட்டி பிரயோஜனம் இல்லை.எங்களை ஆளும் நீங்கள் அதனை சரி செய்யுங்கள். உங்களால்தான் கேட்க முடியும். இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால் உலகம் இந்த பிரச்சினையில் தலையிடும்... அதன்பின் உரிய தீர்வு கிடைக்கும்.... என்றார்

கூட்டம் முடிய ஒன்பதரையானது. அதன் பிறகு அனைவரையும் அவரவர் வேன்களில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள். எங்களுக்காக அந்தச் சிறப்பு ரயில் காத்திருந்தது. இரவு பத்தரைக்கு ரயில் கிளம்பியதும் இரவு உணவு வழங்கப்பட்டது. மறுநாள் 20ஆம் தேதி காலை சென்னையை வந்தடைந்தோம்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

ரஜி‌னி‌ தெ‌ரி‌வி‌த்‌த வருத்‌தம்‌!

முதல்‌வரி‌டம்‌ தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ கா‌ட்‌டுகி‌றா‌ர்‌ வி‌ஜயகா‌ந்‌த்‌. அருகி‌ல்‌ நா‌ன்‌.
நா‌ன்‌ கலைஞ‌ரி‌ன்‌ நெ‌ஞ்‌சுக்‌கு நீ‌‌தி‌ படி‌த்‌தபோ‌து எனக்‌குள்‌ நி‌றை‌ய மா‌ற்‌றங்‌கள்‌ நி‌கழ்‌ந்‌தது. நா‌ன்‌ வளர்‌ந்‌துவி‌ட்‌டதா‌க நி‌னை‌த்‌தே‌ன. என்‌னுடை‌ய எண்‌ணங்‌கள்‌ மே‌ன்‌மை‌ அடை‌ந்‌ததா‌க உணர்‌ந்‌தே‌ன்‌. எழுத்‌தா‌ற்‌றலை‌ வளர்‌த்‌துக்‌கொ‌ள்‌ள எனக்‌கு அந்‌த படை‌ப்‌பு‌ ஒரு உந்‌து சக்‌தி‌யா‌க இருந்‌தது.

கா‌ல ஓட்‌டத்‌தி‌ல்‌ நா‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌தி‌ல்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளரா‌க பணி‌யா‌ற்‌றி‌னே‌ன்‌. அப்‌போ‌து கே‌பி‌ள்‌ டி‌வி‌யி‌ல்‌ பு‌துப்‌படங்‌கள்‌ அதி‌கம்‌ வெ‌ளி‌யா‌கி‌ன. அதனா‌ல்‌ தி‌யே‌ட்‌டருக்‌கு வருகி‌ன்‌ற கூட்‌டம்‌ குறை‌ந்‌து போ‌ய்‌, தி‌யே‌ட்‌டரி‌ல்‌ வசூ‌ல்‌ இல்‌லா‌ததா‌ல்‌ வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌களுக்‌கு நஷ்‌டம்‌ ஏற்‌பட்‌டு அடுத்‌தடுத்‌து கமி‌ட்‌ செ‌ய்‌த படங்‌களை‌ வா‌ங்‌க முடி‌யா‌மல்‌ கஷ்‌டப்‌பட்‌டனர்‌. வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ அடுத்‌த படங்‌களை‌ வா‌ங்‌க முடி‌யா‌ததா‌ல்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌களுக்‌கு ஏரி‌யா‌க்‌களை‌ நம்‌பி‌ பணம்‌ கொ‌டுத்‌த பை‌னா‌ன்‌சி‌யர்‌கள்‌ போ‌ட்‌ட பணம்‌ தி‌ரும்‌பி‌ வரா‌தோ‌ என பயந்‌து ஏரி‌யா‌ வி‌ற்‌கட்‌டும்‌ அதன்‌ பே‌ரி‌ல்‌ தருகி‌றே‌ன்‌ என கை‌யை‌ வி‌ரி‌க்‌க ஆரம்‌பி‌த்‌தனர்‌.

வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌ வரா‌மலும்‌, பை‌னா‌ன்‌சி‌யர்‌கள்‌ கை‌யை‌ வி‌ரி‌த்‌ததா‌லும்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ மி‌குந்‌த நெ‌ருக்‌கடி‌க்‌கு ஆளா‌கி‌யி‌ருந்‌தனர்‌. அதனா‌ல்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கு போ‌க முடி‌யா‌மல்‌ கஷ்‌ட்‌டப்‌பட்‌டனர்‌. அந்‌த நே‌ரம்‌ பா‌ர்‌த்‌து படை‌ப்‌பா‌ளி‌ - தொ‌ழி‌ளா‌ர்‌கள்‌ பி‌ரச்‌சனை‌ எழுந்‌தது. படம்‌ எடுக்‌கவே‌ முடி‌யா‌த சூ‌ழ்‌நி‌லை‌யி‌ல்‌ பல தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌கள்‌ எப்‌படி‌ பி‌ரச்‌சனை‌யை‌ முதல்‌வரி‌டம்‌ கொ‌ண்‌டு கோ‌ரி‌க்‌கை‌ வை‌த்‌து தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ வரா‌மல்‌ தடுப்‌பது என்‌று யோ‌சி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌க, இவர்‌கள்‌ பி‌ரச்‌சனை‌ பெ‌ரி‌ய பி‌ரச்‌சனை‌யா‌கி‌ படை‌ப்‌பா‌ளி‌ - பெ‌ப்‌சி‌ என்‌று இரு குழுவா‌க பி‌ரி‌ந்‌து பஞ்‌சா‌யத்‌து ஆறு மா‌தம்‌ வரை‌ நீ‌‌டி‌த்‌தது. பி‌றகு இருதரப்‌பி‌னரும்‌ உண்‌மை‌யா‌ன பி‌ரச்‌சனை‌யை‌ உணர்‌ந்‌து சுமுகமா‌க ஒன்‌று சே‌ர்‌ந்‌தனர்‌. தங்‌களது பி‌ரச்‌சனை‌யை‌ முதல்‌வரி‌டம்‌ செ‌ன்‌று கோ‌ரி‌க்‌கைவை‌க்‌க தே‌னா‌ம்‌பே‌ட்‌டை‌ கா‌மரா‌ஜர்‌ மை‌‌தா‌னத்‌தி‌ல்‌ அணை‌த்‌து தி‌ரை‌யு‌லக சங்‌க உறுப்‌பி‌னர்‌களும்‌ ஒன்‌று கூடி‌ அங்‌கி‌ருந்‌து ஊர்‌வலமா‌க கா‌ந்‌தி‌ சி‌லை‌ வரை‌ செ‌ல்‌வது என்‌றும்,‌ அங்‌கி‌ருந்‌து சங்‌கங்‌களி‌ன்‌ முக்‌கி‌யஸ்‌தர்‌கள்‌ மட்‌டும்‌ மூ‌ன்‌று பஸ்‌ஸி‌ல்‌ கோ‌ட்‌டை‌க்‌கு அழை‌த்‌துச்‌ செ‌ன்‌று முதல்‌வரை‌ சந்‌தி‌ப்‌பது என்‌றும்‌ முடி‌வா‌னது.

அதன்‌படி‌ அனை‌த்‌து சங்‌கங்‌களுக்‌கும்‌ தகவல்‌ தெ‌ரி‌வி‌க்‌கப்‌பட்‌டு முறை‌ப்‌படி‌ அனை‌வரும்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌. நடி‌கர்‌ தி‌லகம்‌ செ‌வா‌லி‌யே‌ சி‌வா‌ஜி‌ கணே‌சன்‌ அவர்‌கள்‌ கொ‌டி‌யசை‌த்‌து துவங்‌கி‌ வை‌க்‌க ஊர்‌வலம்‌ பு‌றப்‌பட்‌டது. ஊர்‌வலத்‌தி‌ல கண்‌டபடி‌ அரசுக்‌கு எதி‌ரா‌க கோ‌ஷம்‌ போ‌டுவா‌ர்‌கள்‌ என்‌பதா‌ல்‌ அதை‌ முறை‌ப்‌படுத்‌துவதற்‌கா‌க ஊர்‌வலத்‌தி‌ல்‌ முழக்‌கமி‌டும்‌ கோ‌ஷங்‌கள்‌, கை‌யி‌ல்‌ ஏந்‌தி‌ செ‌ல்‌லும்‌ கோ‌ஷங்‌கள்‌‌ என அனை‌த்‌தும்‌ முன்‌ கூட்‌டி‌யே‌ எழுதி‌ முக்‌கி‌யஸ்‌தர்‌கள்‌ முன்‌னி‌லை‌யி‌ல், அதா‌வது ‌ இரண்‌டு நா‌ட்‌களுக்‌கு முன்‌பே‌ சரி‌யா‌க இருக்‌கி‌றதா‌ என ஒப்‌பு‌தல்‌ பெ‌றப்‌பட்‌டு தயா‌ரா‌னது. அதன்‌ படி‌ ஊர்‌வல கோ‌ஷங்‌களை‌ ஐந்‌தா‌யி‌ரம்‌ துண்‌டு பி‌ரசுரங்‌கள்‌ அச்‌சடி‌த்‌து வி‌நி‌யோ‌கி‌க்‌கப்‌பட்‌டு அதி‌ல்‌ உள்‌ள கோ‌ஷங்‌களை‌ மட்‌டுமே‌ எழுப்‌ப வே‌ண்‌டும்‌ என கூறப்‌பட்‌டது.

எந்‌தவி‌த அசம்‌பா‌வி‌தமும்‌‌ இல்‌லா‌மல்‌ ஊர்‌வலம்‌ வெ‌ற்‌றி‌கரமா‌க கா‌ந்‌தி‌ சி‌லை‌யை‌ அடை‌ந்‌தது. ரா‌தா‌கி‌ருஷ்‌ணன்‌ சா‌லை‌யி‌ன்‌ இருபு‌றமும்‌ மக்‌கள்‌ வெ‌ள்‌ளம்‌ கூடி‌ நி‌ன்‌று நட்‌சந்‌தி‌ரங்‌களை‌ பா‌ர்‌த்‌து கை‌ அசை‌த்‌தும்‌ ஊர்‌வலத்‌தி‌ல்‌ வந்‌தவர்‌களை‌ உற்‌சா‌கப்‌படுத்‌தி‌யு‌ம்‌ தி‌ருட்‌டு வி‌சிடி‌யி‌னா‌ல்‌ வரும்‌ பா‌தி‌ப்‌பை‌‌ ‌உணர்‌ந்‌தவா‌றும்‌ நி‌ன்‌றி‌ருந்‌தனர்‌.

நடி‌கர்‌கள்‌, நடி‌கை‌கள்‌ என தி‌ரை‌யு‌லக முக்‌கி‌ய பி‌ரமுகர்‌கள்‌ அனை‌வரும்‌ முன்‌பே‌ தி‌ட்‌டமி‌ட்‌டபடி‌ கா‌ந்‌தி‌ சி‌லை‌யி‌லி‌ருந்‌து மூ‌ன்‌று பஸ்‌களி‌ல்‌ அழை‌த்‌துச் ‌செ‌ல்‌லப்‌பட்டனர்‌. கோ‌ட்‌டை‌யி‌ல்‌ உள்‌ள நா‌மக்‌கல்‌ கவி‌ஞர்‌ மா‌ளி‌கை‌‌ பத்‌தா‌வது மா‌டியி‌ல்‌ உள்‌ள ஹா‌லி‌ல்‌ அனை‌வரும்‌ அமர்‌ந்‌தனர்‌. சி‌றி‌து நே‌ரத்‌துக்‌கு பி‌றகு முதல்‌வர்‌ கலை‌ஞர்‌ அவர்‌கள்‌ வந்‌தா‌ர்‌. அனை‌வரும்‌ எழுந்‌து நி‌ன்‌று வரவே‌ற்‌றனர்‌.

அனை‌வரை‌யு‌ம்‌ வரவே‌ற்‌று பே‌சி‌ய முதல்‌வர்‌ கலை‌ஞர்‌ "பெ‌ப்‌சி‌ - படை‌ப்‌பா‌ளி‌ என இரு வே‌று அமை‌ப்‌பு‌களா‌க பி‌ரி‌ந்‌தி‌ருந்‌த நீ‌ங்‌கள்‌ இப்‌போ‌து ஒன்‌று சே‌ர்‌ந்‌து வந்‌தி‌ருப்‌பதை‌ பா‌ர்‌த்‌து பெ‌ரு மகி‌ழ்‌ச்‌சி‌ அடை‌கி‌றே‌ன்‌" என்‌று சொ‌ன்‌னவர்‌, "இந்‌த சந்‌தோ‌ஷத்‌தி‌லும்‌ எனக்‌கு ஒரு சி‌ன்‌ன வருத்‌தம்‌ இருக்‌கி‌றது" என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. வந்‌தி‌ருந்‌தவர்‌கள்‌ அனை‌வரும்‌ முதல்‌வரை‌ பு‌ரி‌யா‌த பு‌தி‌ரா‌க பா‌ர்‌த்‌தா‌ர்‌கள்‌.

"இன்‌று கா‌லை‌‌ ஒரு பத்‌தி‌ரி‌கை‌‌ படி‌த்‌த போ‌து, அதி‌ல்‌ ஊர்‌வலத்‌தி‌ல்‌ முழங்‌க உள்‌ள கோ‌‌ஷங்‌கள்‌ என்‌று சி‌ல கோ‌ஷங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருந்‌தன. அதி‌ல்‌ அழி‌க்‌கா‌தே‌ அழி‌க்‌கா‌தே‌ சி‌னி‌மா‌ தொ‌ழி‌லை‌ அழி‌க்‌கா‌தே‌ என்‌று இருந்‌தது. அதை‌ பா‌ர்‌த்‌ததும்‌ எனக்‌கு வே‌தனை‌யா‌க இருந்‌தது.இந்‌த அரசு சி‌னி‌மா‌ தொ‌ழி‌லை‌ அழி‌க்‌க நி‌னை‌க்‌குமா‌" என்‌று குறி‌ப்‌பி‌ட்‌டா‌ர் முதல்‌வர்‌‌.

அப்‌போ‌து அங்‌கி‌ருந்‌தவர்‌கள்‌ அனை‌வருக்‌கும்‌ பகீ‌ர்‌ என்‌று இருந்‌தது. எனக்‌கோ‌ அடி‌வயி‌ற்‌றி‌ல்‌ ஏதோ‌ உருண்‌டு ஓடி‌யது போ‌ல ஒரு நடுக்‌கம்‌. அந்‌த கோ‌ஷங்‌கனை‌ நா‌ன்‌தா‌ன்‌ எழுதி‌யி‌ருந்‌தே‌ன்‌. நா‌ன்‌ எதுவு‌ம்‌ தப்‌பா‌ எழுதவி‌ல்‌லை‌யே‌. பி‌றகுஎப்‌படி‌ அப்‌படி‌ எழுதி‌யி‌ருக்‌கும்‌ என்‌று உள்‌ மனம்‌ சொ‌ல்‌லி‌யது.

அதற்‌குள்‌ ரஜி‌னி‌ எழுந்‌து தப்‌பா‌ இருந்‌தி‌ருந்‌தா‌ல்‌ மன்‌னி‌ச்‌சுக்‌குங்‌க என்‌று வருத்‌தம்‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. அதே‌ போ‌ல தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க தலை‌வர்‌ கே‌.ஆர்‌.ஜி‌. எழுந்‌து தனது வருத்‌தத்‌தை‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. பி‌றகு பே‌சி‌ய பா‌ரதி‌ரா‌ஜா‌ "நா‌ம‌ வணங்‌கும்‌ கடவு‌ளை‌ கூட என்‌னடா‌ முருகா‌ கவணி‌க்‌க மா‌ட்‌டி‌யா‌" என்‌றுதா‌ன்‌ கூறுவோ‌ம்‌. அப்‌படி‌த்‌தா‌ன்‌ அதி‌கா‌ரி‌களை‌ தி‌ட்‌டி‌ கோ‌ஷம்‌ போ‌ட்‌டி‌ருப்‌பா‌ர்‌கள்‌. அது உங்‌களை‌ பா‌ர்‌த்‌து சொ‌ன்‌னதா‌க நி‌னை‌க்‌க வே‌ண்‌டா‌ம்"‌ என்‌று கூறி‌னா‌ர்‌.

பி‌றகு பே‌சி‌ய முதல்‌வர்‌ "என்‌னி‌டம்‌ சொ‌ல்‌லி‌யி‌ருந்‌தா‌ல்‌ நா‌னே‌ எழுதி‌ கொ‌டுத்‌தி‌ருப்‌பே‌னே‌" என்‌று வி‌ளை‌யா‌ட்‌டா‌க சொ‌ல்‌லி‌ அங்‌கி‌ருந்‌த இறுக்‌க நி‌லை‌யை‌ மா‌ற்‌றி‌, கலகலப்‌போ‌டு பே‌சி‌னா‌ர்‌. நா‌ற்‌பது சதவீ‌த வரி‌யை‌ முப்‌பது சத வீ‌தமா‌கவு‌‌ம்‌, படங்‌களுக்‌கா‌ன அரசு மா‌னி‌‌ய தொ‌கை‌யை‌ ஐந்‌து லட்‌சமா‌க உயர்‌த்‌தி‌யு‌ம்‌, தி‌ருட்‌டு வி‌சி‌டி‌யை‌ தடுக்‌க கடுமை‌யா‌ன நடவடி‌க்‌கை‌ எடுக்‌கவு‌ம்‌ உடனடி‌யா‌க உத்‌தரவி‌ட்‌டா‌ர்‌.

அப்‌போ‌து எல்‌லோ‌ரது முகத்‌தி‌லும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யு‌ம்‌, சந்‌தோ‌ஷமும்‌ தா‌ண்‌டவமா‌டி‌யது. எனக்‌கோ‌ இவ்‌வளவு‌ பெ‌ரி‌ய சபை‌யி‌ல்‌ ரஜி‌னி‌ மன்‌னி‌ப்‌பு‌ கே‌ட்‌டுவி‌ட்‌டா‌ரே‌. தலை‌வர் ‌கே‌.ஆர்‌.ஜி‌. மன்‌னி‌ப்‌பு‌ கே‌ட்‌டுவி‌ட்‌டா‌ரே‌ என்‌று குழப்‌பம்‌ மே‌லோ‌ங்‌கி‌யி‌ருந்‌தது.

பி‌றகு அந்‌த நா‌ளி‌தழ்‌ செ‌ய்‌தி‌யை‌ எடுத்‌து ஒரு வரி‌ வி‌டா‌மல்‌ படி‌த்‌தே‌ன்‌. ஊர்‌வலம்‌ எந்‌த வழி‌யா‌க செ‌ல்‌கி‌றது. யா‌ர்‌ யா‌ர்‌ பங்‌கே‌ற்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌று வி‌பரமா‌க எழுதி‌யவர்‌கள்‌ ஊர்‌வலத்‌தி‌ல்‌ முழங்‌க உள்‌ள‌ கோ‌ஷத்‌தை‌ கட்‌டம்‌ கட்‌டி‌ வெ‌ளி‌யி‌ட்‌டு இருந்‌தா‌ர்‌கள்‌. அதி‌ல்‌ மே‌லே‌ தமி‌ழக அரசுக்‌கும்‌, கீ‌ழே‌ தி‌ருட்‌டு வி‌சி‌டி‌ கா‌ரர்‌களும்‌ தனி‌தனி‌யா‌க எழுதி‌ய கோ‌ஷங்‌களை‌, இவர்‌கள்‌, தமி‌ழக அரசுக்‌கு மட்‌டும்‌ அனை‌த்‌து கோ‌ஷங்‌களும்‌ என்‌பது போ‌ல பி‌ரசுரி‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌கள்‌. தி‌ருட்‌டு வி‌சி‌டி‌கா‌ரர்‌களுக்‌கு என்‌ற வா‌ர்‌த்‌தை‌ இல்‌லை‌. அதனா‌ல்‌ நா‌ன்‌ எழுதி‌யதி‌ல்‌ எந்‌த தவறு இல்‌லை‌ என்‌பதா‌ல்‌ நி‌ம்‌மதி‌ அடை‌ந்‌தே‌ன். இதை‌ கே‌.ஆர்‌.ஜி‌யி‌டம்‌ தெ‌ரி‌வி‌த்‌த போ‌து அவர்‌ சந்‌தோ‌ஷமா‌க "நா‌ன்‌ உன்‌னை‌ ஒன்‌னும்‌ தி‌ட்‌டலை‌யே‌டா‌,. நீ‌ அவருடை‌ய‌ பு‌த்‌தகம்‌ படி‌ச்‌சு வந்‌தவன்‌னு என்‌கி‌ட்‌ட சொ‌ன்‌னி‌யே‌டா‌,. அவர்‌ சி‌ஷ்‌யன்‌ நீ‌ ...தப்‌பா‌வா‌ எழுதுவ" என்‌று தட்‌டி‌க்‌கொ‌டுத்‌தா‌ர்‌.

அப்‌படி‌ அவர்‌ செ‌ன்‌னது வா‌ர்‌த்‌தை‌ இன்‌னும்‌ என் நெ‌ஞ்‌சி‌ல்‌ நி‌ற்‌கி‌றது. ‌இது என்‌‌ நெ‌ஞ்‌சுக்‌கு நீ‌தி‌.

கா‌ஸ்‌டி‌யூ‌மரை‌ பயமுறுத்‌தி‌ய ரா‌க்‌கி‌ சா‌வந்‌த்‌

சமீ‌பத்‌தி‌ல ரா‌க்‌கி‌ சா‌வந்‌த்‌ பற்‌றி‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ வந்‌த செ‌ய்‌தி‌யை‌ படி‌த்‌த போ‌து எனக்‌குஆச்‌சர்‌யமா‌க இருந்‌தது. இந்திய திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக, சுயம்வரம் நடத்தி தனது மணாளனை தேர்வு செய்துள்ளார் ராக்கி.படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி. இந்‌த செ‌ய்‌தி‌யை‌ படி‌த்‌த போ‌து அவருடன்‌ பழகி‌ய அனுபவங்‌கள்‌ ஞா‌பகத்‌திற்‌கு வந்‌தது. அதை‌ இங்‌கே‌ பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌. ‌

மா‌ஸ்‌ மூ‌வி‌ மே‌க்‌கர்‌ சா‌ர்‌பி‌ல்‌ எஸ்‌.எஸ்‌.துரை‌ரா‌ஜ்‌ தயா‌ரி‌த்‌த பி‌ரமா‌ண்‌டமா‌ன கமர்‌சி‌யல்‌ படம்‌ கம்‌பீ‌ரம்‌. சரத்‌குமா‌ர்‌ அசி‌ஷ்‌டெ‌ன்‌ட்‌ கமி‌ஷனர்‌ முத்‌துசா‌மி‌யா‌க நடி‌த்‌த படம்‌. அரசு சுரே‌ஷ்‌ இயக்‌கி‌னா‌ர்‌.


இந்‌தப்‌ படத்‌தி‌ல ஒரு ஐட்‌டம்‌ ஸா‌ங்‌ இருந்‌தது. அதி‌ல்‌ பு‌தி‌தா‌க வந்‌த கவர்‌ச்‌சி‌ தா‌ரகை‌யை‌ நடி‌க்‌க வை‌ப்‌பது என்‌று முடி‌வு‌ செ‌ய்‌தோ‌ம்‌. அதன்‌ படி‌ அப்‌போ‌து பரபரப்‌பா‌க பே‌சப்‌பட்‌ட "சி‌ன்‌ன வீ‌டா‌ வரட்‌டுமா‌" பா‌டல்‌ பு‌கழ்‌ தே‌ஜா‌ஸ்ரீ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌றும்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ வி‌ருப்‌பப்‌பட்‌டா‌ர்‌. அவரது கா‌ல்‌ஷீ‌ட்‌ பற்‌றி‌ என்‌னி‌டம்‌ வி‌சா‌ரி‌க்‌க சொ‌ன்‌னா‌ர்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌. அப்‌போ‌து நா‌ன்‌ தே‌ஜா‌ஸ்ரீயை‌ தொ‌டர்‌பு‌ கொ‌ண்‌ட போ‌து எங்‌களுடை‌ய‌ கா‌ல்‌ஷீ‌ட்‌ தே‌தி‌யி‌ல்‌ ‌ ஜூ‌ட் படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டலுக்‌கு நடனம்‌ ஆட கமி‌ட்‌டா‌கி‌ இருந்‌தா‌ர்‌. அதனா‌ல்‌ வே‌று யா‌ரை‌யா‌வது பு‌துசா‌ கொ‌ண்‌டு வர முடி‌வு‌ செ‌ய்‌து மா‌டல்‌ கோ‌ ஆர்‌டி‌னே‌ட்‌டர்‌களி‌டம்‌ வி‌சா‌ரி‌த்‌த போ‌து, ரா‌க்‌கி‌ சா‌வந்‌த்‌ ஆடி‌ய ஒரு ஆல்‌பத்‌தை‌ லே‌ப்‌ டா‌ப்பி‌ல்‌ கா‌ட்‌டி‌னா‌ர்‌ அவர்‌. இயக்‌குநருக்‌கும்‌, தயா‌‌ரி‌ப்‌பா‌ளருக்‌கும்‌ அவரது நடனம்‌ பி‌டி‌த்‌து போ‌யி‌ருந்‌தது. மறுநா‌ளே‌ அவருக்‌கு அட்‌வா‌ன்‌ஸ்‌ கொ‌டுக்‌கப்‌பட்‌டு அழை‌த்‌து வரப்‌பட்‌டா‌ர்‌.

ஏவி‌.எம்‌ ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ உள்‌ள நா‌ன்‌கா‌வது பு‌ளோ‌ரி‌ல்‌ எகி‌ப்‌த்‌ கா‌ச்‌சா‌ர வடி‌வி‌ல்‌ பி‌ரமா‌ண்‌ட தங்‌கமா‌ளி‌கை‌யை‌ உருவா‌க்‌கி‌யிருந்‌தா‌ர்‌ ஆர்‌ட்‌ டை‌ரக்‌டர்‌ பத்‌மஸ்ரீ தோ‌ட்‌டா‌தரணி‌. அதற்‌கு பர்‌தது லட்‌சம்‌ செ‌லவி‌ட்‌ப்‌பட்‌டதா‌க தகவல்‌. அதி‌ல்‌ மணி‌சர்‌மா‌வி‌ன்‌ மயக்‌கும்‌ இசை‌யி‌ல்‌ பா‌.வி‌ஜய்‌ எழுதி‌ய "சம்‌பல்‌ கா‌ட்‌டு கொ‌ள்‌ளை‌க்‌கா‌ரி‌.. சலவை‌ செ‌ஞ்‌ச வெ‌ள்‌ளை‌க்‌கா‌ரி‌... சரசத்‌துக்‌கு வா‌டா‌ வா‌டா‌ டே‌ய்‌" என சங்‌கீ‌தா‌ பா‌டி‌ய கா‌ந்‌த குரலுக்‌கு வா‌யசை‌த்‌து தங்‌க தே‌வதை‌களோ‌டு சே‌ர்‌ந்‌து அதி‌வே‌க அதி‌ரடி‌ நடனம்‌ ஆடி‌னா‌ர்‌ ரா‌க்‌கி‌. அதற்‌கு ஸ்‌நே‌க்‌ சா‌ந்‌தி‌ நடனம்‌ அமை‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌. சா‌ந்‌தி‌ நடன இயக்‌குநரா‌க அறி‌முகமா‌னது அந்‌த பா‌டல்‌தா‌ன்‌. அதே‌ போ‌ல சங்‌கீ‌தா‌ பா‌டி‌ய முதல்‌ பா‌டலும்‌ அதுதா‌ன்‌.

நீ‌ர்‌, நெ‌ருப்‌பு‌, கா‌ற்‌று என மூ‌ன்‌று வி‌தமா‌ன பே‌க்‌ட்‌ரா‌ப்‌பி‌ல்‌ உருவா‌ன அந்‌த பா‌டலுக்‌கு ஒய்‌.என்‌.முரளி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌தா‌ர்‌. மும்‌பை‌யி‌ல்‌ இருந்‌தும்‌ நடன அழகி‌கள்‌ வரவழை‌க்‌கப்‌பட்‌டு அந்‌த பா‌டல்‌ மூ‌ன்‌று நா‌ள்‌ படமா‌னது. அதி‌ல்‌ ஆடி‌ய நடன அழகி‌கள்‌ ரா‌க்‌கி‌யி‌ன்‌ நடன அசை‌வு‌களை‌ பி‌ரமி‌த்‌து ரசி‌த்‌தனர்‌. இவர்‌ ஒரே‌ டே‌க்‌கி‌ல்‌ ஓகே‌ செ‌ய்‌தா‌ர்‌. நடன அழகி‌கள்‌ மட்‌டும்‌ பல டே‌க்‌ வா‌ங்‌கி‌யது தனி‌ கதை‌.

இந்‌தப்‌ பா‌டலுக்‌கா‌க பி‌த்‌யே‌கமா‌க வி‌லை‌ உயர்‌ந்‌த உடை‌கள்‌ தயா‌ரா‌கி‌யி‌ருந்‌தது. முதல்‌ நா‌ள்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கு வந்‌த ரா‌க்‌கி‌ தனது உடை‌யை‌ அணி‌ந்‌து பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு கோ‌பமா‌னா‌ர்‌. கா‌ஸ்‌டி‌யூ‌ம்‌ டி‌சை‌னரை‌ உடனே‌ அழை‌த்தா‌ர்‌. இவ்‌வளவு‌ சி‌ன்‌னதா‌க இருக்‌கி‌றதே‌ என கோ‌பப்‌படப்‌போ‌கி‌றா‌ர்‌ என்‌று பயந்‌து போ‌ன கா‌ஷ்‌டி‌யூ‌மருக்‌கு அவர்‌ கே‌ட்‌டதும்‌ பெ‌ரி‌ய ஷா‌க்‌. இவ்‌வளவு‌ பெ‌ருசா‌‌ இருக்‌கே‌. இன்‌னும்‌ என்‌ கி‌ளா‌மரை‌ கா‌ட்‌டுகி‌ற மா‌தி‌ரி‌ சி‌ன்‌னதா‌க்‌குங்‌கள்‌ என்‌றா‌ர்‌. இதை‌ கே‌ள்‌வி‌ப்‌பட்‌டதும்‌ எங்‌களுக்‌கும்‌ ஆச்‌சரி‌யம்‌. சி‌ரி‌ப்‌பு‌.

அந்‌த உடை‌ அவருக்‌கு பி‌டி‌த்‌திருப்‌பதா‌க பலமுறை‌ கா‌ஸ்‌டி‌யூ‌மரி‌டம்‌ சொ‌ன்‌னதா‌ல்‌ அதை‌ அவரி‌டமே‌ கொ‌டுக்‌கச்‌ சொ‌ல்‌லி‌வி‌ட்‌டா‌ர்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌.
நா‌ன்‌ ரா‌க்‌கி‌யு‌டன்‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தபோ‌து அவரி‌டமி‌ருந்‌து அப்‌போ‌து தெ‌ரி‌ந்‌து கொ‌ண்‌ட வி‌ஷயங்‌கள்‌. நா‌ன்‌ ஐந்‌து வருடமா‌க எல்‌லா‌வி‌தமா‌ன நடனகலை‌களை‌யு‌ம்‌ மும்‌பை‌யி‌ல்‌ கற்‌று வருகி‌றே‌ன்‌. இரண்‌டு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ கோ‌வி‌ந்‌தா‌வு‌டன்‌ செ‌ருக்‌கா‌குளம்‌ படத்‌தி‌ல்‌ இரண்‌டா‌வது கதா‌நா‌யகி‌யா‌க நடி‌த்‌தே‌ன்‌. சஞ்‌சய்‌தத்‌ மகன்‌ சா‌யத்‌கா‌ந்‌த்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌த ஜூ‌ரா‌லி‌யா‌ ஹே‌தும்‌மே‌ படத்‌தி‌லும்‌ ரெ‌ண்‌டா‌வது கதா‌நா‌யகி‌தா‌ன்‌. இப்‌போ‌ பை‌சா‌ வசூ‌ல்‌ படத்‌தி‌ல கதா‌நா‌யகி‌யா‌க நடி‌க்‌கி‌றே‌ன்‌. இது ஹீ‌ரோ‌யி‌ணி‌ ஓரி‌யண்‌ட்‌ சப்‌ஜெ‌க்‌ட்‌. டி ‌சீ‌ரி‌ஸ்‌ நி‌றுவனம்‌ தயா‌ரி‌த்‌த ஆல்‌பம்‌ ஒன்‌றி‌ல்‌ நடி‌த்‌தே‌ன்‌. அந்‌த ஆல்‌பம்‌ பெ‌ரி‌ய ஹி‌ட்‌. நா‌ன்‌ செ‌ளத்‌ இந்‌தி‌ய படங்‌களை‌ அதி‌கம்‌ வி‌ரும்‌பி‌ பா‌ர்‌ப்‌பே‌ன்‌.

என்‌றா‌ர்‌. இப்‌போ‌து ரா‌க்‌கி‌ சுயம்‌வரத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ தனக்‌கா‌ன துணை‌யை‌ தே‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌ரை‌வி‌ல்‌ டும்‌டும்‌டும்‌.

- ஜி‌.பா‌லன்‌