முதல்வருடன் திருத்துறைப்பூண்டி பாலன் |
தமிழக அரசின் 2007ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு அறிவிக்கப்ட்டிருந்தது. அந்த அறிவிப்பு வந்தது முதல் அவருக்கு நிறைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்துகொண்டிருந்தது. சிம்புதேவன் இயக்கும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் எனக்கு தொலைபேசியில் ஒரு தகவலை சொன்னார். அதாவது முதல்வர் கலைஞர் அப்பா அவர்களை சந்தித்து நான் நன்றி தெரிவிக்கனும். அதற்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கப்போறேன்னு சொன்னார். நல்ல விஷயம் உடனே செய்யுங்க என்று கூறினேன்.
அதே போல தீபாவளிக்கு மறுநாள் முதல்வர் அலுவலகத்தில இருந்து அவருக்கு நாளை காலை சந்திக்க வாங்க என்று தகவல் வந்தது. அண்ணன் எனக்கு போன் செய்து அண்ணே கலைஞர் அப்பாவை நாளை காலையில் பார்க்க அப்பாய்ன்ட் மெண்ட் கிடைத்திருக்கிறது. நான் பார்க்கப் போறேன் நீங்களும் என் கூட வாங்க என்று அழைத்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நான் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிய போது பல முறை திரு கே.ஆர்.ஜி. அவர்களுடன் முதல்வர் இல்லத்திலும், கோட்டையிலும் சென்று முதல்வரை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவரிடம் பேசியது கிடையாது. அறிமுகப்படுத்திக்கொள்கிற வாய்ப்பும் அமையவில்லை.
இந்த முறை சென்ற போது முதல்வரிடம் நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் என்னை முதல்வரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் எண்ணை காட்டி "என்னடைய பி.ஆர்.வாக பாலன் அண்ணன் இருக்காருப்பா. இவருக்கு திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊரு" என்று சொன்ன போது, முதல்வர் அவர்கள் என்னை பார்த்து "திருத்துறைப்பூண்டியா?" என்று அவரது அந்த அழகான குரலில் கேட்டார்.
எனக்கு பேச்சே வரவில்லை. முதல்வரிடம் சென்று என்னைப் பற்றியும் என் தந்தை கோபாலகிருஷ்ணன், என் சித்தப்பா அரிகிருஷ்ணன் பற்றியும் அவரது போராட்ட வாழ்க்கை பற்றியும் கூறினேன்.அவரும் அன்போடு கேட்டுக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைகளில் எழுதவது பற்றியும் படங்களில் பி.ஆர்.ஒ.வாக பணியாற்றுவது பற்றியும் பாஸ்கர் அண்ணன் முதல்வரிடம் சொன்னார்.
பிறகு அங்கிருந்து திரும்பி காரில் வரும் போது முதல்வரின் உழைப்பும், சாதனையும் பற்றி பேசிக்கொண்டே வந்தோம். ஆனால் ஊர் பெயரை சொன்னதும் வாஞ்சையோடு "திருத்துறைப்பூண்டியா?" என்று முதல்வர் கேட்டது, ஊர் காரர் என்றதும் எப்படி ஆசையோடு கேட்டார் பாத்தீங்களா என்று முதல்வரின் ஊர் பாசம் பற்றி வியந்து வியந்து அண்ணன் பாஸ்கர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
என்னால் மறக்க முடியாத அந்த சந்திப்பை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று யோசித்தேன். இதோ பதிவு செய்துவிட்டேன். படியுங்கள். உங்களடைய கருத்துக்களை கூறுங்கள்.
பதிவு: அக்டோபர் 22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக