ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தமி‌ழ்‌த்‌ தி‌ரை‌யு‌லகி‌ன்‌ இரா‌மே‌ஸ்‌வரம்‌ பே‌ரணி‌

கே‌.பா‌லசந்‌தர்‌ கொ‌டி‌யசை‌த்‌து ரயி‌லை‌ அனுப்‌பு‌கி‌றா‌ர்‌
திரைப்பட PRO சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பிலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்கு அழைப்பு வந்தது

பெப்ஸியைச் சேர்ந்த 24 சங்கத்திலிருந்து அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு சுமார் 2000 பேர் வரை தேர்வு செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி என்று அனைத்துத் தரப்பினரும் க‌லந்து கொ‌ண்டனர். எங்க‌ள் யுனி‌யன் ச‌ார்பில்‌ எனது தலை‌மை‌யில்‌ நான்‌, வெ‌ட்டுவா‌னம் சி‌வகுமார்‌, ச‌நதுரு, மே‌ஜர்தா‌ச‌ன், க‌ணேஷ‌குமார்‌, வெங்‌க‌ட் ஆகி‌யோ‌ர் க‌லநதுகொண்‌டோம்‌. எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் எழும்பூரிலிருந்து 18ஆம் தேதி மாலை நான்கு மணிக்குக் கிளம்பியது. முன்னதா‌க‌ இயக்குநர் கே‌.பா‌லச‌நதர் கொ‌டி‌யசை‌த்து ரயி‌லை‌ தொ‌டங்கி‌ வை‌த்தார்.‌


ரயிலில் இரவு உணவாக சப்பாத்தி, சிக்கன், தயிர்சாதம் ஆகியவை பரிமாறப்பட்டன. நளபாக சங்க உதவியாளர்களே இதைக் கவனித்துக் கொண்டார்கள். ஒரு அவுட்டோர் சூட்டிங் போனால் எந்த மாதிரியெல்லாம் கலைஞர்களைக் கவனித்துக் கொள்வார்களோ அப்படி இருந்தது இந்தப் பயணம்.

இராமேஸ்வரத்தில் எங்களுக்காகக் கிட்டத்தட்ட அனைத்து லாட்ஜ்களிலுமாக சேர்த்து சுமார் 450 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. காலை ஆறு மணிக்கு ராமேஸ்வரம் செ‌ன்ற எங்களைச் சங்க வாரியாகப் பிரித்துத் தனித்தனி வேன்களில் அழைத்துப் போய், அறைகளில் சேர்ந்தார்கள். காலை உணவும் அவரவர் அறைகளுக்கே வந்து சேர்ந்தது. ஒரு சிலர் அருகிலேயே இருந்த இராமேஸ்வரம் கோயிலுக்குப் போய் வந்தார்கள்.

எமது யூ‌னி‌யன்‌ உறுப்‌பி‌னர்‌களுடன்‌ நா‌ன்‌

பின்னர் மதிய உணவு தமிழ்நாடு ஓட்டலில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தே பேரணி தொடங்கியது. ஊர்மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் இருந்து கவனிக்க, சுமார் போலீஸாரின் துணையோடு அந்தப் பேரணி பொதுக் கூட்டம் நடைபெறும் கி‌ழக‌ாடு இடத்தை அடைந்தது.சுமார் பத்து ஏக்கர் அளவிலான இடத்தில் அந்த பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து சென்ற 2000 பேரோடு அந்தப் பகுதி மக்களின் கூட்டமும் சேர்ந்துகொள்ள இராமேஸ்வரமே திருவிழா கோலம் பூண்டது. திரையுலக பிரமுகர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துப் பேசினார்கள்.


க‌வி‌யரசு வை‌ரமுத்து; இலங்கை நமது மண். நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிக பாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானவைதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22ம் தேதி நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

எங்கள் தமிழ் குலப் பெண்களை சிவகாசி பட்டாசுபோல வெடிவைத்து கொல்கிறது சிங்கள ராணுவம். அங்கு சிறுவர்கள், சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அனாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் ராஜபக்சே. அதற்காக உங்கள் ஓட்டுபெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ராடார் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில் நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது ராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். இதனை உடனே நிறுத்துங்கள். தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும். தனது ஒட்டுமொத்த பொது வாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதல்வரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

பே‌ரணி‌யி‌ல்‌ தி‌ரண்‌ட கூட்‌டம்‌


இராம.நாராயணன்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்சு வசதிகேட்டு பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு கொடுத்துள்ளார்.அனைத்து சங்கங்களின் ஒப்புதலுடன் அதனை நிறைவேற்றுவோம். அகதிகளாக வந்தவர்களுக்கு ரூ.6 லட்சம் செலவில் வேட்டி-சேலைகளை வழங்கினோம். தொடர்ந்து இதுபோலவே அவர்களுடன் இணைந்திருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்-தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமைகாக்கும் போராட்டம். நல்லவன் போல் நடிக்கும் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை பொறுக்கமாட்டோம், பொங்கி எழுவோம்.


சீமான்: இந்த கூட்டத்தை ராமேசுவரத்தில் ஏன் நடத்துகிறோம் என்றால், இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கைக்கு நாம் செல்வது பெரிய விஷயமல்ல என்று சிங்கள வெறியர் ராஜபக்சேவுக்கு தெரியப்படுத்தவே. இங்குள்ள 6 கோடி தமிழர்களும் கடல்தாண்டி வருவார்கள். பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் . அதை எப்படி நாம் வன்முறை என்று சொல்ல முடியும்? இந்தியாவில் தமிதமிழர்களை அடித்தார்கள். ஆனால் நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழ் ஈழ மண்தான்.


இநதி‌யா‌வி‌ல் தமி‌ழர்களோ, கன்னடர்களோ பிரதமராகலாம் என அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர் ஒருபோதும் அதிபர் ஆக முடியாது. ஏனெனில் ஈழத் தமிழர் அதிபராவதற்கு அந்த நாட்டு சட்டத்தில் இடம் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை. ஈழத் தமிழனை வேரோடு அழித்து விடலாம் என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் அது நடக்காது. தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. அங்கு போக்குவரத்து துறை, தொழில் துறை, மருத்துவத் துறை என அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு எல்லை விரிவாக்கமும், சர்வதேச அங்கீகாரம்தான் கிடைக்க வேண்டும். சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். புரட்சி வெல்லும். தமிழ் ஈழம் வெல்லும்.


ஆர்.கே.செல்வமணி: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காக நமது நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை பற்றி இந்திய அரசு கேட்க மறுக்கிறது.நமக்கு துரோகம் செய்பவர்கள் வெளியில் இல்லை. நம்முடன் இருந்து கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள்.


அமீர்: இந்த மேடையில் ஒலிக்கும் குரல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும். அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதி அளிக்கட்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்து வெடிசத்தம் கேட்கிறது. அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாக செல்கிறார்கள்.இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை, கிறிஸ்தவர்களின் பிரச்சினை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் இதற்கு ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 4 எம்.பி.க்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? நம்மிடம் குரல் கொடுத்து பேசும் தலைவர்களே இல்லை. வாருங்கள் என்றால் யாரும் வருவதும் இல்லை. ஒரு பிரச்சினை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்தில் கூட சிலர் அழைத்தாலும் வருவதில்லை. ஒரு மாநில முதல்வர் அழைத்தாலும்கூட அவர்கள் அதனை ஏற்பது இல்லை. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்ற முடியும்? அவர்களை திட்டி பிரயோஜனம் இல்லை.எங்களை ஆளும் நீங்கள் அதனை சரி செய்யுங்கள். உங்களால்தான் கேட்க முடியும். இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால் உலகம் இந்த பிரச்சினையில் தலையிடும்... அதன்பின் உரிய தீர்வு கிடைக்கும்.... என்றார்

கூட்டம் முடிய ஒன்பதரையானது. அதன் பிறகு அனைவரையும் அவரவர் வேன்களில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள். எங்களுக்காக அந்தச் சிறப்பு ரயில் காத்திருந்தது. இரவு பத்தரைக்கு ரயில் கிளம்பியதும் இரவு உணவு வழங்கப்பட்டது. மறுநாள் 20ஆம் தேதி காலை சென்னையை வந்தடைந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக