ஞாயிறு, 10 மே, 2026

தகவல் : 1


புக் ஆப் ஆப்டிக்ஸ்


ஈராக்கை சேர்ந்த இப்னு அல்-ஹைதம் என்கிற மருத்துவர்கணித மேதையாகவும்விஞ்ஞானியாகவும் புகழ் பெற்றவர். அதீத ஆராய்ச்சியால் மன நலம் பாதிக்கப்பட்ட அவரை சில காலம் வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்துவிட்டனர்


அவர் அடைபட்டு கிடந்த அறைக்குள் ஒரு சிறிய ஓட்டையின் வழியே சூரிய ஒளி வட்டமாக விழுந்துள்ளது.  அதைப் பார்த்துக் கொண்டே இருந்தவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சூரிய வெளிச்சம் ஒரு பொருளின் மீது படுவதால்தான் நம் கண்கள் அதைப் பார்க்க முடிகிறது என்றும்சூரிய வெளிச்சம் எந்த தடங்கலுமின்றி நேர் கோட்டில் பயணிக்கிறது என்றும் சிந்தித்த அவர்ஒரு குவியை அந்த ஓட்டையில் பொருத்தினார்.


அவருடைய வீட்டின் எதிரே உள்ள வீட்டின் உருவம் தலைகீழாக இவர் அறையின் சுவற்றில் தெரிந்தது. பார்க்க அதிச்சயமாகவும்ஆச்சர்யமாகவும் அவருக்கு இருந்தது.


இதை விளக்கி நான்கு பேரிடம் சொன்னார். அது உலகின் முதல்பின்ஹோல் கேமிராமுறை என்று கூறிய அவர்அதை விளக்கி புத்தகம் ஒன்றை எழுதினர். அந்த புத்தகத்தின் பெயர், ‘புக் ஆப் ஆப்டிக்ஸ்’.



தகவல் : 2 


புகைப்பட்ட கருவி  


இப்னு அல்-ஹைதம் எழுதியபுக் ஆப் ஆப்டிக்ஸ்என்கிற புத்தகத்தை கொண்டு பல விஞ்ஞானிகள் புகைப்பட கருவியை கண்டுபிடிக்க முயன்றார்கள். இதில் ஜோசப் நைஸ்போர் நீப்ஸ், லூயிஸ் டாகுரே இருவரும் இணைந்து முயற்சி செய்தார்கள்ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் மறைவுக்கு பிறகு 1850 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு  புகைப்பட கருவியை லூயிஸ் டாகுரே கொண்டு வந்தார்அந்த ஆண்டில் மட்டும்  நியூயார்க்கில் 70 டாகுரே போட்டோ ஸ்டுடியோ உருவானது.



தகவல் : 3 


பிலிம் ரோல் 


1841 ஆம் ஆண்டில் நெகெட்டிவ் டூ பாசிடிவ் பிராசஸ் முறையை ஹென்றி ஃபாக்ஸ் டால்போட் என்கிற ஆங்கிலேயரும், 1889 ஆம் ஆண்டில் 'செல்லுலோஸ் நைட்ரேட்ரசாயனம் பூசப்பட்ட பிலிம் ரோலை ஜார்ஜ் ஈஸ்ட்மெண்டும் கண்டு பிடித்தனர்.



தகவல் : 4 


முதல் சலனப்படம் 


வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக விளங்கிய எட்வர்டு மைபிரிட்ஜ்,  மோஷன் புகைப்படங்கள் எடுக்கத் திட்டமிட்டார். தொடர் முயற்சியின் விளைவாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கேமராக்களில்ஓடும் குதிரையை புகைப்படமாக எடுத்த எட்வர்டு மைபிரிட்ஜ்அவற்றை தான் கண்டுபிடித்த Zoopraxiscope என்னும் இயந்திரத்தின் மூலம் இணைத்து நகரும் படமாக மாற்றியுள்ளார். சவால் நிறைந்த நகரும் அல்லது சலனம் கொள்ளும் படத்தை 1878 ஆம் ஆண்டுஜூன் மாதம் 15 ஆம் தேதி  பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காட்டியுள்ளார். ஓடும் குதுரையை அறிமுகம் செய்த எட்வர்டு மைபிரிட்ஜின் திறமையை பலரும் போற்றினார்கள்.



தகவல் :  5 


முதல் சூட்டிங் 


ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானி வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கி அதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தி, அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் இயங்கும் ஒளிபுகாத இருட்டறையாக அமைத்து படம் பதியும் தகட்டுச்சுருள்பல்சக்கரங்கள் உதவியுடன் ஒரு வினாடியில் பலமுறை நகர்வதற்கான ஒரு பொறியையும் உள்ளே அமைத்து துப்பாக்கியின் குதிரைப் பகுதியின் விசையில் இணைத்தார். குதிரையை விரலால் இழுத்தால்தகட்டுச் சுருள் அடுத்தடுத்து நகர்ந்துவரிசையாக படம் பதியுமாறு உருவாக்கினார். அந்த துப்பாக்கி கேமிராவால் வினாடிக்கு பதினாறு படங்கள் பிடிக்க முடியவில்லை. வெறும் 12 படங்கள் மட்டும் பதிவானது.  1889 ஆம் ஆண்டு அவர் துப்பாக்கி கேமிராவால் பதிவு செய்த படத்தை போட்டுக் காட்டினார். ‘ஷுட்டிங்-கன்’  என்ற வேட்டைத் துப்பாக்கியைக் கேமராவாக உருவாக்கிப் படம் பிடித்ததை நினைவு கூர்வதாகத்தான் இன்றைக்கும் சினிமாப் படபிடிப்பைஷுட்டிங்என்று அழைக்கிறோம்.




தகவல் : 6 


முதல் குறும்படம் 


‘Father of Cinematography’ என்றழைக்கப்படும் Louis Le Prince என்ற பிரஞ்சுக்காரர்முதல் பேப்பர் பிலிமை பயன்படுத்தி இருக்கிறார். Single Lens camera மற்றும் Eastman பேப்பர் மூலம் இவர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த Roundhay Garden Scene தான் உலகின் முதல் குறும்படம் என பதிவாகி உள்ளது. ஆனால், 1890ஆம் ஆண்டு ஒரு ரயிலில் ஏறிய Louis Le Prince பின் இறங்கவே இல்லையாம். அதாவது காணாமல் போய்விட்டார்! இவர் காணாமல் போனதாலேயே முதல் கேமராவைநகரும் படத்தைக் கண்டுபிடித்த பெருமை அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது.



தகவல் : 7 


எடிசனின் முயற்சி 


அமொக்க நியுயார்க் நகரில் ஒளி விளக்குஒளிப்படம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். தன் உதவியாளரான கே.எல்.டிக்ஸனுடன் சேர்ந்து சலனப்படக் கேமராவைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றார். எட்வர்டு மைபிரிட்ஜின் சாதனைகளும்டாக்டர் மாரே கண்டுபிடித்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவும் அவருள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. சலனப்படம் இயல்பானதாகத் தோன்ற வேண்டுமானால் ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதிவது முக்கியம் என்பதை தாமஸ் ஆல்வா எடிசன் உணர்ந்திருந்தார்ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதியும் கேமராவை உருவாக்குவது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இருந்தாலும் எடிசன் தன் முயற்சியில் பின்வாங்கிவிடவில்லை.




தகவல் : 8  


சினிமா கேமிரா 


ஜார்ஜ் ஈஸ்ட்மென் மற்றும் டாக்டர் ஹன்னி பால்குட்வின் இருவரும் சேர்ந்து 1888 ஆம் ஆண்டு செல்லுலாய்டு பிலிம் சுருளைக் கண்டுபிடித்து விற்பனைக்கு விட்டனர். அந்தப்படச்சுருள் இப்போதுள்ள மாதிரியில்லை. பிலிமின் அகலம் நமது சுட்டு விரல் நீளத்திற்கு இருந்தது. எடிசன் அந்த செல்லுலாய்டு படச்சுருள்களை வாங்கி படச்சுருளுக்கு ஏற்பக் கேமராவைத் திருத்தி வடிவமைத்து வினாடிக்கு 16 படம் பிடிக்கும் கேமராவை 1891ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் நாள் அறிமுகம் செய்தார்



தகவல் : 9 


படம் பார்க்கும் கினிட்டோஸ்கோப்


தாமஸ் ஆல்வா எடிசன் தம் கேமராவில் சுவையான நகர்வுக் காட்சிகளைப் படமாக்கினாலும்  அந்தப்படங்களை பொதுமக்கள் முன் திரையில் போட்டுக்காட்டும் புரஜெக்டரை அவரால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெட்டிக்குள் படச்சுருளை ஓடவிட்டுஒரு லென்ஸ் வழியாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதற்குகினிட்டோஸ்கோப்என்று பெயரிட்டார்.



தகவல் : 10  


வட்டமாக சினிமா 


அந்த காலத்தில் உலகின் பலநாடுகளில்செல்லுலாய்டு பிலிமில் பதிந்த ஒளிப்படத்தைமாஜிக் லேண்டர்ன்எனப்படும் விளக்கின் மிகு ஒளியில் திரையில் அசையாத படங்களைக் காட்டிப் பொழுது போக்கி வந்தனர். அதில் வட்டவடிவ அளவில் படம் தெரியும். அதே மாஜிக் லேண்டர்ன் விளக்கைப் பயன்படுத்தி... தான் கண்டுபிடித்த கேமிராவில் பதிவான சலனப்படத்தை ஜென்கின்ஸ் சி.ஃபிரான்சிஸ் திரையிட்டு காட்டினார்



தகவல் : 11  


உலகின் முதல் திரைப்படம் 


லூமியர் சகோதரர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை படம் பிடித்து அதை மற்றவர்களுக்கு இருட்டறையில் படம் போட்டு காட்டினர். சில வினாடிகளே ஓடினாலும் அதுதான் உலகின் முதல் திரைப்படம் என்கிற பெயரை பெற்றது. 1895_ல் லூமியர் சகோதரர்கள்ஒரு ரெயில் ஓடுவதையும்அது ரெயில் நிலையத்தில் வந்து நிற்பதையும் படமாக்கிரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள்.



தகவல் : 12   


இந்தியாவில் சினிமா 


உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து 1895, டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள 'ஈடன் சினிமாஸ்என்ற திரையரங்கில் திரையிட்ட லூமியர் சகோதரர்கள்அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவேஇந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் விடுதியில் திரையிட்டு இந்தியாவில் சினிமாவை அறிமுகம் செய்தனர். 1896 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த அந்த நிகழ்வில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டனர்



தகவல் : 13   


தமிழர் கையில் சினிமா 


சினிமா காட்டுவதற்கு பயிற்சி கொடுத்து உலகம் முழுவதும் பலரை அனுப்பி திரைப்படங்களை காட்ட வைத்த லூமியர் சகோதரர்கள் தொடர்ந்து ஊமைப் படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் டியூபான்ட் என்பவர் திருச்சியில் முகாமிட்டு படங்களைக் காட்டிக் கொண்டிருந்த போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் தான் கொண்டுவந்த சினிமா காட்டும் கருவிபடச்சுருள்கள் ஆகியவற்றை விற்றுவிட்டு தனது தாயகம் செல்ல முடிவு செய்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்கிற ரயில்வே பணியாளர், ரூபாய் 2,250/- கொடுத்து 1905-ம் ஆண்டு வாங்கினார். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கு சென்று படங்களை காண்பித்தார்.



தகவல் : 14  


இந்தியாவில் உருவான முதல் குறும்படம் 


இந்தியாவின் முதல் குறும்படத்தை இயக்கியவர்ஹிராலால் சென். 1898 ஆம் ஆண்டு உருவான அந்தப் படத்தின் பெயர் A Dancing Scene. இந்தியாவின் முதல் விளம்பரப் படத்தை எடுத்தவரும் ஹிராலால் சென். 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 குறும் படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தை முன்னிட்டே பல படங்களை எடுத்துள்ளார். இவர் ஆங்கிலேயேரிடம்  இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே குறும்படங்கள் எடுத்துள்ளார்.



தகவல் : 15  


இந்தியாவில் உருவான முதல் கதை படம் 


இந்தியாவின் முதல் முழு நீளக்கதைப் படமான புந்தலிக்ஒரு பிரபலமான மராத்தி நாடகத்தை அப்படியே ஐரோப்பிய ஒளிப்பதிவாளர் ஜான்சன் என்பவரை கொண்டு படமாக்கிய  தாதாசாஹேப் டோர்னே லண்டனில் இறுதிகட்ட வேலைகள் செய்து 1912 ஆம் ஆண்டு மே 18, அன்று வெளியிட்டார்.  22 நிமிடங்கள் ஓடக் கூடிய புந்தலிக் படம் இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட துண்டு படமாகும். இந்தப் படத்தின் வேலை வெளிநாட்டிலும்வேலை செய்தவர்கள் வெளிநாட்டவர் என்கிற காரணத்தினாலும்இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை பெற இந்தப் படம் தவறிவிட்டது.



தகவல் : 16 


இந்தியாவில் உருவான முதல் திரைப்படம் 


1896 முதல் 1913 வரை மௌனப்பட உருவாக்கத்தில் சாவேதாதா, F.B. தானாவாலாஹரிலால் சென்ஸ்டீவன்சன் என பலர் மௌனப்பட உருவாக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அதில் வென்றவர் தாதா சாகேப் பால்கே. 


துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்கிற பால்கே லண்டன் சென்று படம் எடுப்பதுபிலிம் ரசாயனப் படுத்துவதுஎடிட்டிங் செய்து ரீல்களாக்குவதுதிரையிடுவது உள்ளிட்ட அனைத்துத் தொழில் நுட்பங்களையும் அறிந்துகொண்டு.... வில்லியம்சன் கேமிராஅச்சிடும் கருவிபடப்பிடிப்புக்கு தேவையான கச்சா பிலிம் ஆகியவற்றை வாங்கி வந்துராஜா ஹரிச்சந்திராஎன்கிற முழு நீள படத்தை ஆறு மாதத்தில் உருவாக்கினார். இந்தியாவில் உருவான முதல் திரைப்படமானராஜா ஹரிச்சந்திரா’ 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி பம்பாய் ஒலிம்பியா சினிமா அரங்கில் திரையிட்டுக் காட்டப்பட்டது



தகவல் : 17  


மூட்டைகளில் பணம் வண்டியில் பயணம் 


முதல்படமானராஜா ஹரிச்சந்திராபடத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக 'மோகினி பஸ்மாசூர்படத்தை எடுத்து 1914 ஆம் ஆண்டு பால்கே  வெளியிட்டார். மூன்றாவதாக 'சத்தியவான் சாவித்திரிஎடுத்த போது சொந்த ஊரான நாசிக்கில் ஸ்டுடியோ ஒன்றையும் கட்டினார். பால்கே இயக்கியலங்கா தகனம்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ‘வெஸ்ட் என்ட் சினிமாவில் காலை ஏழு மணி முதல் நள்ளிரவு வரை ஒவ்வொரு மணிக்கும் ஒரு காட்சி வீதம் திரையிட்டார்கள். அந்த திரையரங்கில் மட்டும் பத்து நாள் வசூல் 32 ஆயிரம் ஆனதாம். படத்தின் வருமானத்தை மூட்டைகளில் கட்டி கட்டை வண்டியில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு சென்றாராம்பால்கே. தொடர்ந்து நாற்பது படங்களை இயக்கிய பால்கேதொன்னூற்று ஏழு படங்களை தயாரித்திருக்கிறார்.



தகவல் : 18  


தமிழில் குறும்படம் எடுத்த மூப்பனார் 


தஞ்சையை சேர்ந்த ஆபிரஹாம் பண்டிதர் புகைப்பட கலையில் தேர்ச்சி பெற்றவர். அவர், தனது மகன் ஜோதிபாண்டியனை ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பினார். அவரிடம் புகைப்பட கலைஞராக இருந்த மருதப்ப மூப்பனார் இங்கிலாந்திற்கு சென்று சில மாதங்கள் தங்கி மௌன பட தயாரிப்பின் நுணுக்கங்களைக் கற்றார்அங்கு சில துண்டுப் படங்களை இயக்கியத்துடன், அங்கிருந்து 35 எம்.எம்.‘வில்லியம்சன்பிராண்ட் சைலண்ட் மூவி கேமராவையும்அதில் பதிவாகும் பிலிம் சுருள்கள்பதனிடும் கருவியையும் வாங்கி வந்தார். விமான நிலையத்தில் விமானம் வந்திறங்குவது, மற்றும் 1911இல் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவையும் படமெடுத்தார்



தகவல் : 19 


பண்டமாற்று முறையில் கேமிரா 


வேலூரை சேர்ந்த நடராஜ முதலியார் சென்னையில் கார் கம்பெனி வைத்திருந்தார். புகைப்படம் எடுப்பதும், மௌனப்படங்களை பார்ப்பதும் அவரது பொழுது போக்கு. ஒரு நாள் அவரிடம் கார் வாங்க வந்த மருதப்ப முப்பனார், கூடவே சினிமா எடுக்கும் கேமிராவையும் கொண்டு வந்ததிருப்பதை அறிந்து, ஆச்சர்யத்துடன் சினிமா கேமிராவை பார்த்தார். அவரிடம் பேசி இரண்டு காரை கொடுத்து பண்டமாற்று முறையில் அந்த கேமிராவை வாங்கினார். கேமிராவை எப்படி இயக்குவது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பூனா சென்று ஆங்கிலேயர்களின் ஆவணப் படங்களை எடுக்கும் ஸ்டூவார்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேரிடம் சினிமா ஒளிப்பதிவு நுணுக்கங்களை தெரிந்து கொண்டார். இவர்தான் தமிழின் முதல் மௌனப்படத்தை இயக்கியவர்.  




தகவல் : 20  


தமிழின் முதல் சினிமா 


எஸ்.எம்.தர்மலிங்க முதலியார் என்பவருடன் இணைந்து 'தி இன்டியா பிலிம் கம்பெனி லிமிட்டெட்என்கிற பட நிறுவனத்தை தொடங்கிய நடராஜ முதலியார், மகாபாரத்தின் கிளைக் கதையானதிரௌபதிகீசகன்கதையைப் படமாக்க முடிவு செய்து படத்திற்கு கீசகவதம் என்று பெயர் வைத்து இயக்கினார். சுகுணவிலாச நாடக சபாவில் பெண் வேடமிட்டு நடித்து வந்த ரங்கவடிவேலு என்பவரை நடிக்க ஒப்பந்தம் செய்துமில்லர்ஸ் சாலையில் இருந்த தனது 'டவர் ஹவுஸ்என்ற பங்களாவை சினிமா ஸ்டூடியோவாக மாற்றி படம் எடுத்தார். 35 நாட்களில் 35 ஆயிரம் ரூபாய் செலவில் ஆறாயிரம் அடி நீளம் கொண்ட படமாககீசக வதம்உருவாகி 1916-ல்  வெளியானது



தகவல் : 21  


க்ரோனோமெகாபோன் ஒலியில் சினிமா 


சென்னையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த ஆர்.வெங்கய்யா நாயுடுஅப்போதுக்ரோனோமெகாபோன்' (Chronomegaphone) என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள் போல் காட்டலாம் என்கிற தகவல் கிடைக்க ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் (John Dickinson and Company) அந்த ஒலிக் கருவியை முப்பதாயிரம் கொடுத்து வாங்கி. அந்த க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய  ‘அன்டர் தி பனாமா’ (Under the Panama), ‘ஸ்விங் சாங்’ (Swing Song), ‘சீ சர்பென்ட்’ (Sea Serpent), ‘ஃபயர்மேன் சாங்’ (Fireman Song), ‘மெகாடோ’ (Micado) போன்ற 12 துண்டுப் படங்களை வாங்கி சென்னை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். பார்வையாளர்கள் இந்த க்ரோனோ மெகாபோனின் புதிய அனுபவத்தால் சொக்கிப்போனார்கள். பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைபேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றார்கள்.




தகவல் : 22  


தியேட்டர் கட்டிய வெங்கையா 


இலங்கைபர்மா உட்பட சில நாடுகளுக்குச் சென்று துண்டு படங்களை திரையிட்ட ரகுபதி வெங்கையா நாயுடு, சிந்தாரிப்பேட்டையில் கெயிட்டி சினிமா ஹாலை 1913ல் திறந்தார். அடுத்த ஆண்டே கிரவுன் திரையரங்கையும்புரசைவாக்கத்தில் குளோப் திரையரங்கையும்அதாவது இப்போது ராக்சி என்கிற பெயரில் அழைக்கப்பட்ட திரையரங்கையும் கட்டினார். தனது மகன் ஆர்.பிரகாஷை லண்டனுக்கு அனுப்பி சினிமா தொழிலை கற்று வர வைத்தவர், ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்என்கிற ஸ்டுடியோவை திறந்துஅந்த ஸ்டுடியோவில் மகன் ஆர்.பிரகாஷ் இயக்கத்தில்பீஷ்ம பிரதிக்ஞைஎன்கிற மௌனப் படத்தை 1921 ஆம் ஆண்டு தயாரித்துவெளியிட்டார். இந்தப் படம் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட முதல் படம் என்றும்இதனால் இவரைதெலுங்கு சினிமாவின் தந்தைஎன்றும் அழைக்கின்றனர்.



தகவல் : 23  


கேரளாவின் முதல் படம் இயக்கிய தமிழர் 


குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிறந்த ஜே.சி.டேனியல் நாடார் என்பவர் சினிமா ஆர்வத்தால் பம்பாய்க்கு சென்று மௌனப்பட உருவாக்கத்தை தெரிந்து கொண்டவர், 1926-ல் தனது பூர்வீக சொத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்று திருவனந்தபுரத்தில் தற்போது கேரளா பப்ளிக் சர்விஸ் கமிஷன் இருக்குமிடத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி தி திருவிதாங்கூர் பிக்சர்ஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி 'விகதகுமாரன்' படத்தை இயக்கினார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று வெளியான அந்தப் படம் கேரளாவில் உருவான முதல் மௌனப் படம் என்கிற பெயரை பெற்றது



தகவல் : 24  


முதல் கன்னட சினிமா 


மைசூர் அருகே உள்ள ஹோல்கெரேவில் பிறந்தவர், நாகேந்திர ராவ். எட்டு வயதில் நாடக நடிகராக அறிமுகமானவர், 1932 ஆம் ஆண்டு வெளியான பி.கே.ராஜா சாண்டோவின் பாரிஜாத புஷ்பஹரணம் மௌனப் படத்தின் மூலம் சினிமா நடிகராக தமிழில் நடித்தவர், தெலுங்கு மொழியில் உருவான ராமதாசு படத்திலும் நடித்தார். அந்த அனுபவங்களை கொண்டு கன்னடத்தில் முதல் படமான சதி சுலோச்சனா படத்தை தயாரித்து, இசை அமைத்தார். ஒய்.வி.ராவ் இயக்கிய அந்தப் படம் 1934 ஆம் ஆண்டு வெளியானது



தகவல் : 25  


தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் 


அமெரிக்காவில் உள்ள, பிட்ஸ்பர்க்கில் 1895 ஆம் ஆண்டு உலகின் முதல் திரையரங்கு  நிகெலோடியான் உருவானது. இந்தியாவின் முதல் திரையரங்கை 1907-ல் கொல்கத்தாவில்எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்என்ற பெயரில் ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் தொடங்கினார்தமிழ்நாட்டில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்' என்ற ஆங்கிலேயர் சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப் படங்களை போட்டுக்காட்டினார். முதல் திரையரங்கம் என்றால், அது வார்விக் மேஜர் உருவாக்கிய 'எலெக்ட்ரிக் தியேட்டர்'.  அண்ணாசாலை அஞ்சல் நிலையத்திற்கும் துன் பில்டிங்கிற்கும் இடையே இருக்கும் பழைய கட்டிடத்தில் இயங்கிய அதுதான் தென்னிந்தியாவின் முதல்திரையரங்கு ஆகும். மின்சார ஒளியின் மூலம் திரையிடும் புரொஜக்டர் வசதியுடன் இருந்ததால், இந்த அரங்கிற்கு 'எலெக்ட்ரிக்' என்று பெயர் வைக்கப்பட்டது



தகவல் : 26 


பிரேக் எடுத்துக் கொண்ட சினிமா 


தமிழ்நாட்டில் நடராஜ முதலியாரும்ரகுபதி வெங்கையா நாயுடுவும் படத்தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டத்தில் இருந்தனர். இருவருமே படத் தயாரிப்பைவிட்டே விலகி இருந்தனர். ஆங்கிலேயர்கள் ஹெட்டேகார் ஒரு படமும்ஹப்டன் நான்கு படமும் இயக்கி இருந்தனர். 1924 முதல் 1929 வரை வேறு எந்த மௌனப் பட தயாரிப்பு நிறுவனமும் சென்னையில் தோன்றவில்லை. மௌனப் படத் தொழிலே மறைந்து போய் விடக்கூடிய நிலை இருந்தது. 1927-ல் சென்னையில் நிரந்தர சினிமா கொட்டகைகள் 9, சென்னை மாகாணம் முழுவதும் 34, டூரிங் சினிமாக்கள் 26 என இயங்கிக் கொண்டிருந்தன. அதில் அமெரிக்க ஆங்கில படங்கள்தான் பெருவாரியாக திரையிடப்பட்டன



தகவல் : 27  


முதல் பிரமாண்ட படம் 


முதல் பிரமாண்ட படத்தை தயாரித்தவர், சிவகங்கை .நாராயணன்நலிவுற்றிருந்த தென்னிந்திய சினிமா உலகை தூக்கி நிறுத்தி ஓரளவு தலை நிமிரச் செய்த மாமனிதராக வந்தார். தர்மபத்தினி படத்தை தயாரித்துஇயக்கிய .நாராயணன்தொடர்ந்து ஆர்.பிரகாஷா உட்பட பல இயக்குனர்கள் இயக்கத்தில் பல படங்களை தயாரித்து வெளியிட்டார். அதில் அவர் தயாரித்த 'மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா' என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம் அந்த காலத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டதுஒரு முழு நீள மௌன படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவுஅதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் .நாராயணன் தயாரித்த மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா திரைப்படம் தயாரிக்க ரூ.75,000/- செலவழித்தார். இந்தியாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட மௌனப் படம் என்கிற பெயரை பெற்றது



தகவல் : 28  


சமூக படம் இயக்கிய ராஜா சாண்டோ 


சிறந்த விளையாட்டு வீரராகவும்குஸ்தி சாம்பியனாகவும் விளங்கிய ராஜா சாண்டோஒரு ஸ்டண்ட் நடிகராக 'பக்தபோதனா" என்ற மௌனப் படத்தில் நடித்தார். மும்பையில் தங்கி 1922 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை 50 மௌனப் படங்களில் நடித்த ராஜா சாண்டோபதினோரு மௌனப் படங்களை இயக்கி இருக்கிறார். அவரை தமிழுக்கு பத்மநாபன் அசோசியேட் நிறுவனம் அழைத்து வந்தது. அதுவரை தமிழில் புராண படங்கள் மட்டுமே உருவாகின. இவர்தான் முதலில்பேயும் பெண்ணும்என்கிற சமூக படத்தை இயக்கினார்



தகவல் : 29 


மௌனப்படத்திற்கு இசை வாசிப்பு 


திரையரங்குகளில் மௌனப் படம் ஒலியின்றி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தாலும் ஆர்மோனியம், தபேலா போன்ற வாத்தியக் கருவிகளை கொண்டு ஒவ்வொரு முறையும் திரைப்பட காட்சிக்கு ஏற்றவாறு வாசிக்க இசைக்கலைஞர்கள் அமர்த்தப்பட்டனர். கெயிட்டி போன்ற சினிமா அரங்குகளில் ஒரு இசைக் குழு செயல்பட்டது. திரைக்கு முன் அமர்ந்து மௌனப் பட காட்சிக்கு ஏற்ப இசையை இந்த குழு வாசிக்கும். குழுவிற்கு துண்டுச்சீட்டு அனுப்பும் வழக்கமும் அன்றைய ரசிகர்களிடம் இருந்துள்ளதுசில திரையரங்குகளில் கிராமஃபோன் இசைத் தட்டுகளை வைத்து ஓசை எழுப்பினார்



தகவல் : 30 


வசனம் பேசும் வர்ணனையாளர் 


அந்த காலத்தில் திரையரங்குகளில் மௌன படத்தில் வரும் உரையாடல்களை அத்தியாவசியமான பகுதிகளை மட்டும் எழுத்து ரூபத்தில் திரையில் விவரண அட்டை மூலம் காட்டுவார்கள். ஓரிரு காட்சிகளுக்கு பின்வரும் இந்த வாசகங்களை படிக்கத் தெரிந்தவர்கள் படித்து ரசிப்பார்கள். படிக்கத் தெரியாதவர்கள் அதிகம் இருக்கும் கிராமப் புறங்களில் இந்த அட்டைகளை சத்தமாக படிப்பதற்கு என ஒவ்வொரு தியேட்டரிலும் ஒருவர் திரை அருகே நின்று கொண்டு திரையில் காட்டப்படும் வசனங்களை படிப்பதோடுபின்னணி வர்ணனையும் செய்வதுண்டு. இவர்களுக்கு மாதம் ஐம்பது ரூபாய் ஐம்பதும் வழங்கப்பட்டது.



தகவல் : 31 


நட்சத்திர நடிகரின் சம்பளம் 


அந்த காலத்தில் சாதாரண நடிகருக்கு மாதம் 30 ரூபாய், நட்சத்திர நிலையிலுள்ள நடிகருக்கு மாதம் 300 ரூபாய் வரை வழங்கப்பட்டது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நடிப்பு தொழிலோடு உதவியாளர்கள் வேலைகளையும் அவர்கள் செய்யவேண்டியிருந்தது. ஒரு படம் தயாரிக்க வடநாட்டில் 20,000 ரூபாயும், தென்னாட்டில் பத்தாயிரம் ரூபாயும் செலவிடப்பட்டது. விநியோகஸ்தர்கள் படங்களையும் முன்கூட்டியே பார்க்காமலேயே வாங்க வேண்டி இருந்தது. ஒரு படம் அதிகபட்சம் மூன்று பிரதிகள் எடுக்கப்பட்டன. ஒரு பிரதியை வாங்குபவர் அந்த படம் கிழியும் வரை ஓட்டுவார். அதுவரை அந்த பிரதிக்கு உரிமையாளராக அவர் இருப்பார். எல்லா திரையரங்குகளிலும் தரை வகுப்பு இருந்தது. கட்டணம் 4 அணா அதாவது 25 பைசா வசூலிக்கப்பட்டது.



தகவல் : 32 


கடைசி மௌனப்படம் 


எனக்கு கிடைத்த தகவலின் படி தென்னிந்தியாவில் 1916 முதல் 1932 வரை 110  மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மைசூரில் தயாரிக்கப்பட்டபாக்கிய சக்கராதென்னகத்தின் கடைசி மௌனப் படமாக அமைந்தது. கால ஓட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தியேட்டர்களில் ஒலியமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டன. எல்லா தியேட்டர்களிலும் ஒலியமைப்பு கருவிகள் பொருத்தப்படும் வரை மௌனப் படங்கள் திரையிடப்பட்டன



தகவல் : 33   


உலகின் முதல் பேசும்படம் 


1926 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், 'டான்டுவான்' என்கிற சிறிய படத்தை முதல்பேசும் படமாக தயாரித்தது. பயிற்சியின் முயற்சியாக விளைந்த அந்த குறும் படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டே 'தி ஜாஸ் சிங்கர்' என்ற படத்தை தயாரிக்க வைத்தது. முதல் முழு நீளப் பேசும் படமான 'தி ஜாஸ் சிங்கர்' 1927 அக்டோபர் 5 ஆம் தேதி திரையிடப்பட்டது. திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்



தகவல் : 34  


இந்தியாவின் முதல் பேசும் படம் 

இந்தியில் 130 மௌனப் படங்களை தயாரித்தவர், அர்த்ஷிர் எம்.இரானி. இவர் 1929 ஆம் ஆண்டில் பம்பாய் திரையரங்கு ஒன்றில்ஷோ போட்என்கிற பேசும் படத்தை கண்டார். உடனே அவருக்கு பேசும் படம் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது. அவரே உரையாடல் எழுதி, பாடலுக்கு மெட்டு அமைத்தார். ஆர்மோனியம், தபேலா, வயலின் இந்த மூன்று இசைக் கருவிகள் மட்டுமே வாசிக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது இந்த இசைக் குழுவினர் ஒவ்வொரு ஷாட்டிற்கும் வாசித்தனர். படம் பிடிக்க 6 விளக்குகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன.


நடிகர்கள் உருது மற்றும் இந்தி மொழிகளில் பேசினார்கள். 40 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான அந்தப் படத்திற்குஆலம் ஆராஎன்று பெயர் வைத்து இந்தியாவின் முதல் பேசும் திரைப்படமாக 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி தனது சொந்த திரையரங்கமான மெஜஸ்டிக் சினிமாவில் திரையிட்டார். 



தகவல் : 35  


தமிழின் முதல் பேசும் படம் 


தமிழில் முதல் பேசும் படம் தயாரிக்கும் முதல் முயற்சி பம்பாயில் இருக்கும் சாகர் மூவிடோன் என்கிற கம்பெனி 1931 ஆம் ஆண்டில் இறங்கியது. ஜான்சிபாய் என்கிற பெண் நடித்தகுறத்தி பாட்டும் டான்சும்என்கிற நான்கு ரீல்கள் கொண்ட அந்த குறும்படம் தமிழில் முதல் முதலாக தயாரிக்கப்பட்டது. ஆனால்முழுநீள தமிழ்ப் படமாககாளிதாஸ்படம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது 



தகவல் : 36    


தமிழின் முதல் பேசும் பட இயக்குநர்  


இந்தியில் முதல் பேசும் படத்தை தயாரித்து வெளியிட்ட ஆர்தேஷிர் எம்.இரானிதமிழ்தெலுங்கு இரு மொழிகளிலும் பேசும் படங்களை தயாரிக்க முடிவு செய்து இயக்குனராக எச்.எம்.ரெட்டி. என்பவரை பயன்படுத்தினார். தென்னிந்தியரான எச்.எம். ரெட்டிபல மௌனப் படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். ஆர்தேஷிர் எம்.இரானி இயக்கியஆலம் ஆராபேசும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்தமிழ் நாடக மேடைகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த டி.பிராஜலட்சுமிதெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட பி.ஜி.வெங்கடேஷ் இருவரையும் ஒப்பந்தம் செய்துஆலம் ஆராஇந்தி பேசும் படம் உருவான அரங்கிலேயே தமிழின் முதல் பேசும் படமானகாளிதாஸ்படத்தையும் எடுத்தார்கள்.  



தகவல் : 37 


ஜெர்மன் தொழில் நுட்பத்தில் படப்பிடிப்பு 


'காளிதாஸ்' பேசும் படம் உருவான போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் 'விடாபோன்முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுஇதன்படி முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும்பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுனர்களால் ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஒலி பதிவு செய்யப்பட்டதாக தகவல்.




தகவல் : 38 


முதல் பேசும் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு 


முதல் பேசும் படமான காளிதாஸ் படபிடிப்பு முடிந்து 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கபட்டது. அதுவரை ஊமைப் படங்களைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் முதல் தெனிந்திய பேசும் படத்தை காண கூட்டம் கூட்டமாக கூடினார்கள். பம்மாயில் இருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள்படப்பெட்டிக்கு ரோஜா மாலைகள் சூட்டப்பட்டனதேங்காய்கள் உடைக்கப்பட்டனபத்தி கொளுத்தல்சூடம் காட்டல் என்று அமர்க்களப்பட்டதுவால்டாக்ஸ் சாலையில் படப்பெட்டியுடன் பெரிய பேரணிபோல கூட்டம் கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை வந்தது. முதல் தமிழ் பேசும் என்பதால் ரசிகர்கள் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடினார்கள்.  8 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான காளிதாஸ் 75 ஆயிரம் வசூலித்தது



தகவல் : 39  


முழுமையான தமிழ் படம் 


முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியான போது அந்தப் படம் முழுமையான பேசும்படமாக அமையவில்லை என்று பலர் விமர்சனம் செய்தனர்தமிழ்தெலுங்குஇந்தி என பல மொழிகள் பேசி நடித்திருந்தார்கள் என்று  கூறினார்கள். ஆனால், அதன் பிறகு வெளியான 'அரிச்சந்திரா', 'கலாவா' இரண்டு படங்களும் தமிழ் பேசும் படங்களாக வெளிவந்தன. இந்த இரு படங்களையும் டி.சி.வடிவேலு நாயக்கர் இயக்கி இருந்தார்அரிச்சந்திரா படம் இயக்கும் போது  ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை தொழில் நுட்பத்தில் உதவியாக படநிறுவனம்  ஏற்பாடு செய்திருந்ததுஆனால்அவர் பாதியிலேயே கருத்து முரண்பாடு கொண்டு வேலை செய்வதை நிறுத்தியதால்அப்போது அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த சர்வோத்தம் பதாமி என்பவர் டெக்னீக்கல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டார்



தகவல் : 40 


தமிழின் முதல் கதாநாயகி


பேசும் படம் வந்த காலத்தில் நாடக நடிகர்களுக்குத்தான் முன்னுரிமை கிடைத்தன. அவர்கள் பாடுவதிலும், நடிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த காரணத்தினால், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் முதல் பேசும்பட நாயகி என்கிற பெருமையை பெற்றவர் டி.பி.ராஜலட்சுமி. இவர்தமிழ் சினிமாவின் முதல் நடிகை என்பதோடு அல்லாமல் முதல் பெண் இயக்குநர்முதல் பெண் தயாரிப்பாளர்முதல் பெண் பாடலாசிரியர்நாவலாசிரியர் என்ற பெருமைக்கும் உடையவர். ராஜலட்சுமியின் பூர்வீகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைந்த சாலியமங்கலம்.



தகவல் : 41  


தமிழின் முதல் கதாநாயகன் 


தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர்  பி.ஜி.வெங்கடேசன். சேலத்தில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடித்தவர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும், தமிழ் வசனங்ளை  பேசுவதிலும்,  பாடுவதிலும் பெரிய திறமைசாலி. தனது குரல்வளத்தால்  எல்லோரையும் கவனிக்க வைத்தவர். பின்னாளில் இவரை தென்னிந்திய சைக்கால் என பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு நடிப்போடு பாட்டு பாடுவதிலும் தன் குரல் வளத்தால் புகழின் உச்சியை அடைந்தவர்




தகவல் : 42 


தமிழின் முதல் பாடல் ஆசிரியர்  


தமிழ் சினிமாவின் முதல் பாடல் ஆசிரியர் என்கிற பெருமைக்கு சொந்தகாரர் மதுரகவி பாஸ்கரதாஸ்.  தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்த  இவரது இயற் பெயர் வெள்ளைச்சாமி. பதினாறு வயதில் பாடல் எழுத ஆரம்பித்தார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரதாசு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பாடல்களை எழுதி மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாசுகாதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.



தகவல் : 43 


தமிழின் முதல் ஆக்சன் ஹீரோயினி 


கடலூரை சேர்ந்த ருக்மணி நாடகத்தில் நடிக்கும் போது வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி ரசிகர்களை கவர்ந்தார். ருக்மணியின்  திறமையைப் பார்த்த இயக்குநர் ராஜா சாண்டோ தனது 'பேயும் பெண்ணும்',  'பாரிஜாத புஷ்பகரணம்', 'மேனகா' போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 'மின்னல்கொடி' படம் மூலம் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுத்தார். முதல் முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு நடித்தவரும் இவர்தான். ஆக்சன் காட்சியில் பங்களாவில் இருந்து குத்தித்து சண்டைப் போட்டார். 1939ல் ‘வீர  ரமணி’ படம் வெளியானபோது பெண் ஒருவர்ஆண் உடையில் வாயில் புகையும்  சிகரெட்டுடன் தோன்றும் போஸ்டரா என்று  பெரும் பேச்சாக அன்றைக்கு மாறியதுகுதிரை சவாரி... பைக் சவாரி.... பாய்ந்து அடிப்பது.... துள்ளி குதிப்பது... ஓங்கி  உதைப்பது என ஆக்ஷனில் வேறலெவல் காட்டினார் ருக்மணி 



தகவல் : 44 


பாடலுக்காக நடந்த போராட்டம் 


தமிழ்த் திரையிசையின் தொடக்கம் என்பது கர்நாடக சங்கீதம் தழைத்து வளர்ந்த காலம். அன்றைய நடிகர்கள், நடிகைகள் பலர் முறையாக சங்கீதம் கற்றிருந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பி.எஸ்.சிவபாக்கியம் நாடக உலகில் பெரும் புகழ் பெற்றவர். நாடகங்களில் பி.எஸ்.சிவபாக்கியம் பாடிய பாடல்களை ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர் மூலம் இசைத்தட்டுகளாக வெளியிட்டு வந்தார்இவர் 1936 ஆம் ஆண்டு பாடிய "வண்ணான் வந்தானே" மக்கள் இசை பாடல் கர்நாடக இசைவிற்பன்னர்கள் மட்டுமின்றி சலவைத் தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சலவைத்தொழிலாளர்கள், துணிகளை வெளுக்க மாட்டோம் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு அவரது பாடல் புரட்சிகரமாக இருந்தது. இன்றுவரை இரட்டை வேடம் என்றவுடன் பி.யூ.சின்னப்பா நடித்தஉத்தமபுத்திரன்படம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் முன்பாக 1934ம் ஆண்டு பி.வி.ராவ் இயக்கத்தில் வெளியானபக்த துருவன்படத்தில் அரசகுமாரியாகவும், குறத்தியாகவும் நடித்திருந்தார். 80 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நவீன வசதியும் இல்லாதபோதே ஒரே காட்சியில் இருவேடத்தில் அவர் திரையில் தோன்றிய காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பத்திரிகைகள் ஆச்சரியப்பட்டு எழுதின



தகவல் : 45   


திரைப்பட விசாரணைக்குழு நடவடிக்கை 


முதல் உலப்போரின் முடிவில் அமெரிக்க படங்கள் உலகமெங்கும் பெரும் புகழ்பெற்றன. இந்த போரினால் பிரிட்டிஷ் அரசு தனது நாட்டில் மட்டுமல்லாது தனது காலனியாதிக்க நாடுகளிலும் தங்களது படங்கள் பெரிய வரவேற்பை பெறமுடியாமல்  போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததுஅதனால் அமெரிக்க படங்களில் ஆபாசம், வன்முறை அதிகம் இருப்பதாக கூறி அந்தப் படங்களை தடை செய்ய வழக்கறிஞர் திவான்பகதூர் ரங்காச்சாரி தலைமையில் 'திரைப்பட விசாரணைக்குழுஎன்று ஒன்றை 1927ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி  அமைத்தது. அந்த விசாரணை குழு ஆய்வு செய்து சினிமாவை வளர்க்க பல நல்ல திட்டங்களை பரிந்துரை செய்து, அமெரிக்க படங்கள் மட்டுமல்ல பிரிட்டிஷ் படங்களும் ஆபாசம், வன்முறை உள்ள படங்கள்தான். அவற்றையும் தடை செய்ய வேண்டும்  என்று கூறியது. 



தகவல் : 46   


சென்சார் போர்டு வந்தது  


பத்திரிகைகளை தன் கட்டுக்குள் வைத்திருக்க பிரிட்டிஷ் அரசு பல சட்ட திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வந்ததுபோல நாடகத்தையும், சினிமாவையும் கட்டுப்படுத்த முயற்சி எடுத்தது. இதற்காகஇந்திய சினிமாட்டோகிராப் சட்டம்என்கிற சட்டத்தை 1918 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. 1920 ஆம் ஆண்டு மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் திரைப்பட தணிக்கைக்குழு நிறுவப்பட்டு செயல்பட ஆரம்பித்தன



தகவல் : 47     


முதல் ரெக்காடிங் தியேட்டர் 


1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும்கோலாப்பூருக்கும்கல்கத்தாவுக்கும் நடிக நடிகையர்கள்பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும்பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள். இந்த நிலையைப் போக்க எண்ணிய தயாரிப்பாளர் சிவகங்கை .நாராயணன்ஹாலிவுட் சென்று சினிமா சவுன்ட் தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு திரும்பியவர், 'சீனிவாஸ் ஸினிடோன்என்ற தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தொடங்கினார். அந்த ஒலிப்பதிவு ஸ்டுடியோவுக்கு சவுண்ட் சிட்டி, சப்த நகரம் என்கிற பெயர்களும் பிற்காலத்தில் விளங்கின.



தகவல் : 48    


முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட்

1931-
க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. சிவகங்கை .நாராயணன் தொடங்கிய 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோவில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படம் 'சீனிவாச கல்யாணம்'. இந்தப் படம்  1934 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்திற்கு ஒலிப்பதிவு செய்வர், நாராயணனின் மனைவி மீனாம்பாள். முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட் என்ற பெருமை மீனாம்பாளுக்குக் கிடைத்தது. சினிமா ஆர்வம் கொண்ட தன் மனைவி மீனாம்பாளின் திறமையைக் கண்டு அவரையும் திரைப்படத் துறையில் ஈடுபடச் செய்தார். நாராயணன்தொடர்ந்து பல பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்துள்ளார்



தகவல் : 49 


காக்கா, குருவி ஓட்ட ஆள்?


படப்பிடிப்பின் போதே ஒலிப்பதிவும் இணைந்து நடந்ததால் மௌனப் படங்களில் நடித்த ஆங்கிலோ இந்தியப் பெண்களும், மொழி தெரியாத நடிகர்களும் வாய்ப்புகளை இழந்தனர். சொந்த குரலில் வசனம் பேசவும், பாடல் பாடவும் தெரிந்த நடிகர், நடிகையே தேவைப்பட்டனர். எனவே, நாடக மேடை நடிகர்கள் திரையில் தோன்றினார்கள். படம்பிடிக்கும் போது இயற்கையில் எழும் ஒலியைத் தடுக்க வேண்டியதாயிற்று. காக்கா, குருவி ஓட்டவும், அமைதி ஏற்படுத்தவும் ஸ்டுடியோவிற்கு இருவர் வீதம் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆர்மோனியம், தபேலா, வயலின் இந்த மூன்று இசைக் கருவிகள் மட்டுமே வாசிக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது இந்த இசைக் குழுவினர் ஒவ்வொரு ஷாட்டிற்கும் வாசித்தனர். படம் பிடிக்க 6 விளக்குகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன.




தகவல் : 50 


சென்னைக்கு  வெளியே ஒலிப்பதிவு கூடங்கள் 


சிவகங்கை .நாராயணன் 'சீனிவாஸ் ஸினிடோன்என்ற தென்னகத்தின் முதல் ஒலிப்பதிவு ஸ்டுடியோவை அமைத்ததைக் கண்ட தென்னகப் பட முதலாளிகள்வேல் பிக்ஸர்ஸ்நேஷனல் மூவி ஸ்டோன்மீனாட்சி மூவிடோன்மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆகிய ஸ்டுடியோக்கள் சென்னையிலும், வேலூரில் சத்துவாச்சாரி சுந்தரபாரதி ஸ்டுடியோசேலத்தில் மார்டன் தியேட்டர்கோம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோ ஆகியவை சென்னைக்கு வெளியேவும் தொடங்கினார்கள். தென்னிந்திய சினிமா உலகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டதுடன்லாபம் கொழிக்கும் பொழுதுபோக்கு வர்த்தகத் தொழிலாகத் திரைப்படத் தயாரிப்பு ஏற்றம் பெற்றது



தகவல் : 51   


முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்த்து 


திரையரங்குகளில் மௌன படங்கள் மறைந்து பேசும் படம் தொடங்கிய போது, திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கலைஞர்களை நாடினார்கள். தியாகராஜா பாகவதர் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் தேர்ச்சி பெற்றவர். அவர் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்ததை பார்த்த தொழிலதிபர் லட்சுமணன் செட்டியார், அழகப்ப செட்டியார் இருவரும் கே.சுப்ரமணியம் இயக்கத்தில் அந்த நாடகத்தைப் படமாக எடுதார்கள்.  1934ம் ஆண்டு பவளக்கொடி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் 22 பாடல்களை தியாகராஜா பாகவதர் பாடியிருந்தார். இந்தப் படம் 9 மாதங்கள் ஓடியது. முதல் படத்திலேயே பாகவதர் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.




தகவல் : 52   


மூன்று ஆண்டுகள் ஓடிய படம் 


தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்தாமணி படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலிலும் சாதனைப் படைத்தது. சிந்தாமணி படத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு படத் தயாரிப்பாளர்கள் நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன் இருவரும் மதுரையில் ஒரு தியேட்டர் கட்டி அதற்கு  சிந்தாமணி என்று பெயரும் வைத்தனர். அதற்கு பிறகு அவர் நடித்த  சிவகவி படம் ஒரு ஆண்டுக்குமேல் ஒடி சாதனைப் படைத்தது.  1944-ஆம் ஆண்டு பாகவதர் நடிப்பில் வெளிவந்தஹரிதாஸ்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்என்ற சாதனையைப் படைத்தது. ஆனால், இந்த மூன்று ஆண்டுகளையும் அவரால் நிம்மதியாக கொண்டாட முடியவில்லை. பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் கைதாகி சிறையில் இருந்தார்



தகவல் : 53   


அந்த கால ரசிகர்களின் பாகவதர் கட்டிங் 


தமிழ்த் திரையுலகின் முதல்சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட தியாகராஜ பாகவதர் 1934 முதல் 1959 வரை 14 படங்களில் நடித்துள்ளார்திருச்சி தியாகராஜா பிலிம்ஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி சத்தியசீலன், திருநீலகண்டர், ராஜமுக்தி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். திரையுலகம், நாடக உலகம், இசை உலகம் என மூன்று உலகையும் ஆண்ட மகா கலைஞன் தியாகராஜா பாகவதர். பாகவதர் கட்டிங்தான் எனக்கு வெட்டனும் என்று முடிவெட்டும் நிலை அப்போது இருந்தது. அந்தளவுக்கு அவரது சிகையலங்காரம்பாகவதர் கிராப்என்று புகழ்பெற்றிருந்தது.



தகவல் : 54 


திறமையானவர்களை திரைக்கு கொண்டு வந்தவர் 


இயக்குனரும் நடிகருமான ராஜா சாண்டோவிடம் பல படங்களில் உதவியாளராக பயணித்த கே.சுப்பிரமணியன், முதல் முறையாக தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' நாடகத்தை  திரைப்படமாக இயக்கினார். அதன் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். ராஜா சாண்டோவைப் போலவே இவரது படங்கள் சாதி எதிர்ப்பு, விதவை திருமணம் என்று முற்போக்கு படங்களாக இருந்தன. பல நடிகர் நடிகைளை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உருவாக இவர் காரணமாக இருந்துள்ளார்




தகவல் : 55  


அமெரிக்கர்களை அழைத்து வந்தவர் 

கலிபோர்னியா சென்று திரைப்படம் தொடர்பான படிப்பை முடித்து திரும்பிய மாணிக்லால் தாண்டன் தமிழ், தெலுங்கு மொழிகளில் யதார்த்தமான படங்களை இயக்கியவர். அவர் 1934 ஆம் ஆண்டு இயக்கிய பாமா விஜயம் படமும், 1935 ஆண்டு இயக்கிய பக்த நந்தனார் படமும் பெரிய அளவில் பேசப்பட்டத்து. பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மாணிக்லால் தாண்டன், கலிபோர்னியாவில் அவருடன் படித்த மைக்கேல் ஓமலோவ், எல்லிஸ் ஆர்.டங்கன் இருவரையும் இங்கு அழைத்து வந்தார்



தகவல் : 56 


ஓராண்டுக்குமேல் ஓடி சாதனை படைத்த படம் 


மௌனப் படங்களில் .நாராயணன், பிரகாஷா போன்றவர்களிடம் உதவியாளராக இருந்து சில படங்களில் உதவி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த ஒய்.வி.ராவ், ஐந்து மௌனப் படங்களை இயக்கி இயக்குனராகவும் உயர்ந்தார். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த போது அவர் இயக்கிய 'சிந்தாமணி' படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சில படங்களை தயாரித்துள்ள ஒய்.வி.ராவ், அவர் இயக்கிய ஏவி.எம்மின் ஸ்ரீவள்ளி படத்தில் நாயகியாக நடித்த குமாரி ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் நடிகை லட்சுமி.


தகவல் : 57  


எம்.ஜி.ஆரை அறிமுகம் செய்தவர் 


அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து திரைப்படம் சம்பந்தமான படிப்பை முடித்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் எல்லீஸ் ஆர்.டங்கன். கே.பி.சுந்தராம்பாள் நடித்த பக்த நந்தனார் படத்தில் மாணிக்லால் தாண்டனுடன் இணைந்து பணியாற்றியவர், கந்தசாமி முதலியார் தயாரிப்பில் உருவான சதிலீலாவதி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். எம்.ஜி.ஆரை சிறு வேடத்தில் அந்தப் படத்தில் நடிக்க வைத்தவர், அதன் பிறகு எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த மந்திரி குமாரி படத்தையும் இயக்கினார். 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள டங்கன், ஏராளமான ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். இவர்தான் முதலில் டிராலியை பயன்படுத்தி படம் எடுத்தார். அதனால், இன்றும் டங்கன் டிராலி என்றே அழைக்கிறார்கள். அதே போல சிம்பாலிக் ஷாட்டையும் இவர்தான் முதலில் அறிமுகம் செய்தார்




தகவல் : 58 


நாயகியை மணந்த இயக்குநர் 


1935 ஆம் ஆண்டில் ஞானசௌந்தரி படத்தில் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய டி.ஆர்.ரகுநாத், 1936 ஆம் ஆண்டு வெளியான கிழட்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எம்.ஜி.ஆர். நடித்த ராஜாதேசிங்கு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள டி.ஆர்.ரகுநாத்அந்தப் படத்தில் நாயகியாக நடித்த எம்.எஸ். சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்குநர் ராஜா சந்திரசேகரின் தம்பி என்பது குறிப்பிட்டத்தக்கது.  



தகவல் : 59 


சினிமாவுக்கு வந்த ராஜபார்ட் 


மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் ராஜபார்ட்டாக சிறந்து விளங்கிய கே.பி.கேசவன், நாடகங்கள் படமான போது இவரும் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இரு சகோதர்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். நாடகங்களில் இவரது அடியாளாக நடித்தவர், எம்.ஜி.ஆர். இந்த தகவலை எம்.ஜி.ஆர். ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார் 

  


தகவல் : 60 


மகனை நாயகனாக்கிய முதலியார் 


நாடக கம்பெனியை வெற்றிகரமான நடத்தி வந்த கந்தசாமி முதலியார் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதையில் சதி லீலாவதி என்கிற படத்தை தயாரித்தார். அதில் தனது மகன் எம்.கே.ராதாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்அந்தப் படத்தில் மேலும் தனது நாடக குழுவில் இருந்த டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். போன்ற பல நடிகர்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தை தொடர்ந்து எம்.கே.ராதா பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்




தகவல் : 61 


பத்து வேடங்களில் நடித்த சின்னப்பா 


ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்தவர் பி.யூ.சின்னப்பா. சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை சந்திரகாந்தா படத்தின்  மூலம் திரையுலகில் அறிமுகமாக காரணமாக இருந்தார்கள். 1936 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை தொடர்ந்து 1951 வரை 15 ஆண்டுகளில் 26 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவரது கடைசி படம் சுதர்சன். ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகிய ஏழு படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது. ஆர்யமாலா படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா.




தகவல் : 61  


மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த நடிகர் 


சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். 13 ஆவது வயதிலேயே ஏவிஎம் தயாரித்த நந்தகுமார் படத்தில் கண்ணனாக நடித்து 1938 ஆம் ஆண்டு அறிமுகமானார். முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சொந்தமாக படத்தயாரிப்பில் இறங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்தார். தொடர் தோல்விகள் சொத்துக்களை இழக்க வைத்ததுடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து சொந்த ஊருக்கே போக வேண்டிய நிலைக்கு ஆளானார். மறுபடியும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை கவிஞர் கண்ணதாசன் மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தது மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் வெற்றிப் பயணம் தொடர காரணமாக இருந்தார்




தகவல் : 62  


வலுவான திரைப்பட நிறுவனங்கள் 


1935க்கும் - 1942க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில், மிக வலுவான ஐந்து திரைப்பட நிறுவனங்கள் உதயமானதுஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ்.வாசன், .வி.எம். ஸ்டுடியோ ஏவி.மெய்யப்ப செட்டியார், மார்டர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், பட்சிராஜா ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு, ஜூபிடர்  பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம், எஸ்.கே.முகைதீன் ஆகிய ஐந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் படத் தயாரிப்பில் இறங்கி பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டனர்




தகவல் : 63 


ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடம்


லட்சுமி வரபிரசாத் என்கிற எல்.வி.பிரசாத் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். நாடகங்களில் நடித்தவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்து பம்பாய்க்கு புறப்பட்டு சென்றார். மௌனப் படங்களில் நடித்து, உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு 'கிரஹ பிரவேசம்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்து, தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய  மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கியும், தயாரித்தும்  வந்தார்.  'மிஸ்ஸியம்மா' படத்தின் வெற்றியில் பிரசாத் ஸ்டுடியோவை காட்டியவர், ஏக் தூஜே கேலியே படத்தின் வெற்றியால் பிரசாத் 70 எம்.எம் என்கிற ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றைக் கட்டினார்.



தகவல் : 64 


இயக்குநரை சுமந்த  எம்.ஜி.ஆர். - சிவாஜி 


கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் பகுதியை சேர்ந்த கே.சுப்பிரமணியனம்  சட்டம் படித்தவர். ராஜா சாண்டோ இயக்கிய அநாதைப் பெண், பேயும் பெண்ணும், உஷா சுந்தரி போன்ற மௌனப் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர், பவளக்கொடி என்கிற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இதில் நாயகனாக எம்.கே. தியாகராஜ பாகவதரும், நாயகியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும் அறிமுகமானார்கள். கே.சுப்பிரமணியம் 22 படங்களை தயாரித்தார். அதில் அவர் இயக்கியது 20 படங்கள். அவர் இறந்த போது சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர்




தகவல் : 65 


ஜெமினி ஸ்டுடியோ உருவானது 


திருத்துறைப்பூண்டியில் பிறந்த எஸ்.சீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் சேகரித்து வழங்கும் பணியை செய்து வந்தார். பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையை விலைக்கு வாங்கி அதை  பிரபலமான பத்திரிகையாக மாற்றியவர், பேசும் படங்கள் தொடங்கிய போது 'சதி லீலாவதி' படத்திற்கு கதை எழுதினார். பிறகு கே.சுப்பிரமணியம் இயக்கிய 'தியாக பூமி' படத்தை வெளியிட ஜெமினி என்கிற பட வெளியீடு நிறுவனம் தொடங்கிய வாசன், கே.சுப்பிரமணியத்தின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்து ஜெமினி ஸ்டிடுயோ என்று பெயர் வைத்து 1941 முதல் 1969-ல் வரை நடத்தினார். அதில் பல மொழிகளில் 78 புகழ்பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்டார்



தகவல் : 66 


தந்தையின் ஏவி அண்ட் சன்ஸ் கடையில் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்த  மெய்யப்ப செட்டியார். `சரஸ்வதி ஸ்டோர்  ரெக்கார்டிங்  கம்பெனிஎன்ற நிறுவனத்தைத்  தொடங்கிகர்நாடக சங்கீத  உரிமைகளைப்  பெற்று இசைத் தட்டுகளை வெளியிட்டார்கல்கத்தா சென்று அல்லி அர்ஜுனா படத்தை தயாரித்துஇயக்கினார்அடுத்து ரத்னாவளி என்கிற படத்தை தயாரித்தார். இரண்டு படங்களும் நஷ்டத்தை கொடுத்தது. இரு நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு பிரகதி ஸ்டுடியோவைத் தொடங்கி சபாபதி உட்பட சில படங்களை தயாரித்தவர், பிறகு ஏவி.எம். நிறுவனத்தய் தொடங்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தார்தென்னிந்திய சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார்தான் தயாரித்த படங்கள் மூலமாக ஏழு முறை ஜனாதிபதி விருது  பெற்றிருக்கிறார்அவருக்கு பிறகு அவரது மகன்கள் முருகன்குமரன்சரவணன்பாலசுப்பிரமணியம் ஆகிய நால்வரும் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டனர்இப்போது அவரது பேரன்கள்கொள்ளு பேத்திகள் என அவர் போட்டு கொடுத்த அந்த பாதையில் நீண்ட பயணமாக தொடர்கிறார்கள்.... 




தகவல் : 67 


மாற்றம் தந்த 'மார்டர்ன் தியேட்டர்ஸ்'


திருச்செங்கோட்டில் பிறந்து பிரிட்டனுக்கு சென்று பருத்தி நூலின் மீது சாயம் ஏற்றும் புதிய தொழில் நுட்பத்தை பயின்று, பட்டம் பெற்றார் டி.ஆர்.சுந்தரம். ஆனால், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பங்குதாரர் ஆகி ஐந்து பேசும் படங்களை தயாரித்தார். கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதில் நேர்ந்த சங்கடங்களையும், வீண் தாமதத்தையும் மனதிற்கொண்டு சேலத்திலேயே 'மார்டர்ன் தியேட்டர்ஸ்' என்ற ஸ்டுடியோ திறந்து சதி அகல்யா என்கிற படத்தை தயாரித்தவர், தொடர்ந்து 98 படங்களை தயாரித்திருக்கிறார். இதில் அவர் 55 படங்களை இயக்கி இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக