ஞாயிறு, 10 அக்டோபர், 2010

எந்‌தி‌ரமா‌க இருந்‌தவர்‌களை‌யு‌ம்‌ சி‌ரி‌க்‌க வை‌த்தா‌ர்‌ சந்‌தி‌ரன்‌ மா‌மா‌!

நடி‌கர்‌களி‌ல்‌ ஈகோ‌ இல்‌லா‌மல்‌ எதா‌ர்‌த்‌தமா‌க பே‌சக்‌ கூடி‌யவர்‌கள்‌ ஒரு சி‌லரே‌. அதி‌ல்‌ எஸ்‌.எஸ்‌.சந்‌தி‌ரன்‌ மா‌மா‌வு‌ம்‌ ஒருவர்‌. அவர்‌ நெ‌ருங்‌கி‌ பழகுபவர்‌களை‌ முறை‌ வை‌த்‌துதா‌ன்‌ பே‌சுவா‌ர்‌. அப்‌படி‌த்‌தா‌ன்‌ என்‌னி‌டம்‌ அன்‌பா‌க மா‌ப்‌பி‌ள்‌ளை‌ என்‌று செ‌ல்‌லமா‌க அழை‌ப்‌பா‌ர்‌. நா‌னும்‌ அவரை‌ மா‌மா‌ என்‌றே‌ அழை‌ப்‌பே‌ன்‌. அவரது பே‌ச்‌சி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ துள்‌ளி‌ குதி‌க்‌கும்‌. அவர்‌ வந்‌துவி‌ட்‌டா‌ல்‌ வே‌லை‌யே‌ ஓடா‌து. அவரது பே‌ச்‌சை‌ கே‌ட்‌டுக்‌கொ‌ண்‌டே‌ இருக்‌க தோ‌ணும்‌.

நா‌ன்‌ தயயாரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌தி‌ல வே‌லை‌ப்‌ பா‌ர்‌த்‌த போ‌துதா‌ன்‌ அவருடன்‌ நெ‌ருக்‌கமா‌க பழகும்‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌த்‌தது. அவர்‌ பு‌ருஷன்‌ எனக்‌கு அரசன்‌ என்‌கி‌ற படத்‌தை ‌எடுத்‌தி‌ருந்‌தா‌ர்‌. அந்‌தப்‌ படத்‌துக்‌கு வர வே‌ண்‌டி‌ய மா‌னி‌யத்‌ தொ‌கை‌ அவருக்‌கு வரவி‌ல்‌லை‌. நா‌ன் ‌தா‌ன்‌ அந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ பா‌ர்‌ட்‌னர்‌  எனக்‌குத்‌தா‌ன்‌ அந்‌த தொ‌கை‌ வரவே‌ண்‌டும்‌ என்‌று ஒருவர்‌ அரசி‌டம்‌ மனு கொ‌டுத்‌தி‌ருந்‌ததா‌ல்‌, அது நி‌றுத்‌தி‌ வை‌க்‌கப்‌பட்‌டது.

அப்‌போ‌து எஸ்‌.எஸ்‌.மா‌மா‌ வே‌று ஒரு கட்‌சி‌யி‌ல்‌ இருந்‌ததார்‌. அப்‌போ‌து அ.தி‌.மு.க.அரசு இருந்‌தது. அதனா‌ல்‌ அதி‌கா‌ரி‌கள்‌ பயந்‌து கொ‌ண்‌டு செ‌க்‌ அவர்‌ கை‌க்‌கு வரவி‌டா‌மல்‌ தடுத்‌துவி‌ட்‌டனர்‌. அதை‌ பெ‌றுவதற்‌கா‌க அடி‌க்‌கடி‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌துக்‌கு வருவா‌ர்‌ மா‌மா‌. தலை‌வர்‌ கே‌.ஆர்‌.ஜி‌. அவர்‌கள்‌ பெ‌ரி‌தும்‌ முயற்‌சி‌ எடுத்‌து அந்‌த கா‌சோ‌லை‌யை‌ அரசி‌டம்‌ இருந்‌து பெ‌ற்‌று தந்‌தா‌ர்‌.

அதன்‌ பி‌றகு நடந்‌த தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க பொ‌துக்‌குழுவி‌ல்‌ எஸ்‌எஸ்‌ மா‌மா‌ பே‌சி‌ய போ‌து, அந்‌த வி‌ஷயத்‌தை‌ இப்‌படி‌ சொ‌ன்‌னா‌ர்‌.

"நா‌ட்‌டு‌ககு சுதந்‌தி‌ரம்‌ வா‌ங்‌கி‌ தந்‌தா‌ர்‌ கா‌ந்‌தி‌ஜி‌. நா‌ட்‌டுக்‌கா‌க உழை‌த்‌தா‌ர்‌ நே‌ருஜி‌. நட்‌பா‌க இருந்‌தா‌ர்‌ ரா‌ஜா‌ஜி‌. செ‌க்‌ இழுத்‌தா‌ர்‌ வஉசி‌. எனக்‌கு செ‌க்‌ வா‌ங்‌கி‌ கொ‌டுத்‌தா‌ர்‌ எங்‌க கே‌.ஆர்‌.ஜி‌..."

அவர்‌ சொ‌ன்‌ன போ‌து சபை‌யி‌ல்‌ இருந்‌த அனை‌வரும்‌ வா‌ய் ‌வி‌ட்‌டு சி‌ரி‌த்தனர்‌. அதன்‌ பி‌றகு அவர்‌ பே‌சும்‌ போ‌து தயா‌ரி‌ப்‌பா‌ளரி‌ன்‌ அன்‌றை‌ய அவல நி‌லை‌யை‌ ஒரு கதை‌யா‌க சொ‌ன்‌னா‌ர்‌.

"ஒரு வி‌மா‌னத்‌தி‌ல ஒரு தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌, ஒரு பா‌தி‌ரி‌யா‌ர்‌, ஒரு டா‌க்‌டர்‌, ஒரு மா‌ணவன்‌ என நா‌ன்‌கு பே‌ர்‌‌ பயணம்‌ செ‌ய்‌தா‌ர்‌கள்‌. அப்‌போ‌து வி‌மா‌னத்‌தி‌ல்‌ எஞ்‌சி‌ன்‌ கோ‌ளா‌ரு பண்‌ண ஆரம்‌பி‌த்‌துவி‌ட்‌டது. அதனா‌ல்‌ சி‌றி‌து நே‌ரத்‌தி‌ல்‌ வெ‌டி‌த்‌து சி‌தறி‌வி‌டும்‌னு வி‌மா‌னி‌ சொ‌ல்‌லி‌வி‌ட்‌டு, வி‌மா‌னத்‌தி‌ல மூ‌ணு பா‌ரா‌சூ‌ட்‌ இருக்‌கு. அதுல தப்‌பி‌க்‌கி‌றவு‌ங்‌க தப்‌பி‌ச்‌சுக்‌குங்‌கன்‌னு சொ‌ல்‌லி‌, அவன்‌ கி‌ட்‌ட இருந்‌த பா‌ரா‌சூ‌ட்‌ட வச்‌சி‌ அவன்‌ குதி‌ச்‌சி‌ட்‌டா‌ன்‌.

இருக்‌கி‌ற‌ மூ‌ணு பா‌ரா‌சூ‌ட்‌டை‌ வச்‌சுக்‌கி‌ட்‌டு நா‌லு பே‌ர்‌ எப்‌படி‌ குதி‌க்‌கி‌றது. அதனா‌ல யா‌ர்‌ யா‌ர்‌ குதி‌க்‌கி‌றதுன்‌னு அவு‌ங்‌க நா‌லு பே‌ருக்‌குள்‌ள பே‌ச்‌சு. நா‌ன்‌ உயி‌ரோ‌டு இருந்‌தா‌ல்‌ பல பே‌ரை‌ கா‌ப்‌பா‌த்‌துவே‌ன்‌. அதனா‌ல நா‌ன்‌ முதல்‌ல குதி‌க்‌கி‌றே‌ன்‌னு ஒரு பா‌ரா‌சூ‌ட்‌டை‌ எடுத்‌துக்‌கி‌ட்‌டு டா‌க்‌டர்‌ குதி‌ச்‌சி‌ட்‌டா‌ரு. சூ‌ட்‌டி‌ங்‌ ஒரு பக்‌கம்‌ நடக்‌குது. வி‌யா‌பா‌ரத்துக்‌கு ஆள கா‌ணும்‌. பை‌னா‌ன்‌ஸ்‌ வா‌ங்‌க அலை‌யி‌றே‌ன்‌. அதனா‌ல நா‌னும்‌ குதி‌க்‌கி‌றே‌ன்‌னு தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌ குதி‌ச்‌சி‌ட்‌டா‌ரு.

அதன்‌ பி‌றகு பா‌தி‌ரி‌யா‌ர்‌ மா‌ணவனை‌ பா‌ர்‌த்‌து, "நா‌ன்‌ வா‌ழ்‌ந்‌தவன்‌. நீ‌‌யோ‌ வா‌ழ வே‌ண்‌டி‌யவன்‌. அதனா‌ல ‌இருக்‌கி‌ற ஒரு பா‌ரா‌சூ‌ட்‌ட வச்‌சி‌ நீ‌ குதி"‌ என்‌று கூறி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

அதற்‌கு அந்‌த மா‌ணவன்‌, "நா‌ம ரெ‌ண்‌டு பே‌ருமே‌ குதி‌க்‌கலா‌ம்‌ சா‌ர்‌. ரெ‌ண்‌டு பா‌ரா‌சூ‌ட்‌ இருக்‌கு" என்‌று பதி‌ல்‌ சொ‌ல்லி‌யி‌ருக்‌கி‌றா‌ன்‌. அவர்‌ தி‌கை‌ப்‌போ‌டு, எப்‌படி‌ப்‌பா‌ "மூ‌ணு பா‌ரா‌சூ‌ட்‌தா‌னே‌ இருக்‌குன்‌னு வி‌மா‌னி‌ சொ‌ன்‌னார்‌..." ‌ என்‌று கே‌ட்‌க, அதற்‌கு அந்‌த பை‌யன்‌ சொ‌ன்‌னா‌ன்‌. "தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ அவசரத்துல என்‌ பு‌த்‌தக பே‌க்‌கை‌ பா‌ரா‌சூ‌‌ட்‌னு எடுத்‌துக்‌கி‌ட்‌டு குதி‌ச்‌சி‌ட்‌டா‌ர்"னு சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ன்‌. அந்‌த மா‌தி‌ரி என்‌ன பண்‌றதுன்‌னே‌ தெ‌ரி‌யமா‌ அலமலப்‌பா‌ அலை‌ஞ்‌சுகி‌ட்‌டு இருக்‌கோ‌ம்‌ என்‌று பே‌சி‌னா‌ர்‌.

அப்‌போ‌து சபை‌ கி‌டுகி‌டுக்‌கி‌ற அளவு‌க்‌கு சி‌ரி‌ப்‌பு‌ சத்‌தம்‌ அதி‌ரவை‌த்‌தது. வந்‌தி‌ருந்‌த தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌கள்‌ எல்‌லோ‌ரும்‌ வி‌லா‌நோ‌க சி‌ரி‌த்‌தா‌ர்‌கள்‌.

நடி‌கர்‌ தி‌லகம்‌ சி‌வா‌ஜி‌யு‌டன்‌ நடி‌ப்‌பதை‌ பற்‌றி‌ அவர்‌ சொ‌ல்‌லும்‌ போ‌து, அவருடன்‌ போ‌ட்‌டோ‌ எடுத்‌துக்‌கொ‌ள்‌வதே‌, தா‌ஜ்‌மகா‌ல்‌ அருகி‌ல்‌ நி‌ன்‌று  போ‌ட்‌டோ‌ எடுத்‌துக்‌கொ‌ள்‌வது மா‌தி‌ரி‌ என்‌று கூறுவா‌ர்‌. நடி‌கர்‌ தி‌லகத்‌தை‌‌ உலக அதி‌சயமா‌க பா‌ர்‌த்‌தவர்‌.

பா‌ரா‌ளுமன்‌றத்‌தி‌ற்‌கு வரும்‌ வயதா‌ன எம்.‌பி‌.க்‌கள்‌ எப்‌படி‌ பா‌ர்‌ப்‌பா‌ர்‌கள்‌, எப்‌படி‌ நடப்‌பா‌ர்‌கள்‌, எப்‌படி‌ அவர்‌களது நடவடி‌க்‌கை‌கள்‌ இருக்‌கும்‌ என்‌பதை‌ எங்‌களி‌டம்‌ ஒரு முறை‌ நடி‌த்‌து கா‌ட்‌டி‌னா‌ர்‌. அப்‌போ‌து சி‌ரி‌த்‌த சி‌ரி‌ப்‌பி‌ல்‌ எனக்‌கு நெ‌ஞ்‌சுவலி‌யே‌ வந்‌துவி‌ட்‌டது. அப்‌படி‌ படத்‌தி‌ல்‌ மட்‌டுமல்‌லா‌து நி‌ஜ வா‌ழ்‌க்‌கை‌யி‌லும்‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌த எஸ்‌.எஸ்‌. மா‌மா‌, இப்‌போ‌து நெ‌ஞ்‌சுவலி‌யா‌ல்‌ மறை‌ந்‌துவி‌ட்‌டா‌ர்‌. நடி‌ப்‌பா‌ற்‌றலும்‌, பே‌ச்‌சா‌ற்‌றலும்‌ உள்‌ள அவரது தி‌றமை‌யை‌ பா‌ர்‌த்‌து பல மறை‌ வி‌யந்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. அவருடன்‌ பழகி‌ய அந்‌த நா‌ட்‌களும்‌ சம்‌பவங்‌களும்‌ மறக்‌க முடி‌யா‌த நி‌கழ்‌வு‌கள்‌. நெ‌ஞ்‌சை‌ வி‌ட்‌டு என்‌றும்‌ அகலா‌தவை‌.

கா‌தல்‌ படுத்‌தும்‌ பா‌டு படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ தி‌ரை‌யு‌லகி‌ல்‌ அறி‌முகமா‌கி‌, பூ‌க்‌கா‌ரி‌, சி‌வப்‌பு‌ மல்லி‌, அவன்‌, சகா‌தே‌வன்‌, மகா‌தே‌வன்‌, பா‌ட்‌டி‌ சொ‌ல்‌லை‌ தட்‌டதே‌, ஒன்‌ஸ்‌மோ‌ர்‌ என 800 படங்‌களுக்‌கு மே‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சி‌வகங்‌கை‌ ஊர்‌கா‌ரரா‌ன மா‌மா‌, தனது ஊர்‌ பெ‌யரை‌‌ மறக்‌கா‌மல்‌, தனது நி‌றுவனத்‌தி‌ற்‌கு சி‌வகங்‌கை‌ ஸ்‌கி‌ரீ‌ன்‌ என பெ‌யர்‌ வை‌த்‌து,  எங்‌கள்‌‌ குரல்‌, பு‌ருஷன்‌ எனக்‌கு அரசன்‌, ஒரு முறை‌ சொ‌ல்‌லி‌வி‌டு போ‌ன்‌ற படங்‌களை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

அவருக்‌கு வசந்‌தா‌, ரா‌ஜம்‌ என இரு மனை‌வி‌களும்‌, இரு மகள்‌களும்‌, இரு மகன்‌களும்‌ உள்‌ளனர்‌. மகன்‌ ரோ‌ஹி‌த் நடி‌ப்‌பி‌ல்‌‌ ஒருமுறை சொல்லிவிடு என்‌கி‌ற படத்‌தை‌ தயா‌ரி‌த்‌து அவரை‌ நடி‌கரா‌க அறி‌முகப்‌படுத்‌தி‌னா‌ர்‌. அந்‌தப்‌ படத்‌தை‌ எனது நண்‌பர்‌ ஜவகர்‌ இயக்‌கி‌ இருந்‌தா‌ர்‌. அந்‌தப்‌ படம்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌த வெ‌ற்‌றி‌ பெற‌வி‌ல்‌லை‌. ரோ‌ஹி‌த்‌, இப்‌போ‌து ஆங்‌கி‌லப்‌ படங்‌களை‌ வா‌ங்‌கி‌ இந்‌தி‌யா‌வி‌ல்‌ ரி‌லீ‌ஸ்‌ செ‌ய்‌து வருகி‌றா‌ர். இன்‌னொ‌ரு மகன்‌ முரளி‌ டா‌க்‌டரா‌க இருக்‌கி‌றா‌ர்‌.

எதை‌யு‌ம்‌ வெ‌ளி‌ப்‌படை‌யா‌க பே‌சும்‌ எஸ்‌.எஸ்‌.‌ மா‌மா‌, ஆரம்‌பத்‌தி‌ல்‌ தி‌.மு.க.வி‌ல்‌ இருந்‌தா‌ர்‌. பி‌றகு  கருத்து வேறுபாட்டால் தி.மு.க.,வில் இருந்து விலகி, சில ஆண்டுகள் ம.தி.மு.க.,வில் இருந்தார். கடந்த 1999ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். 2001-07ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். அந்‌த கட்சியில் துணை கொள்கை பரப்புச் செயலராக இருந்து கொண்டு, கூட்டங்களில் அதிரடி பேச்சாளராக வலம் வந்தார். .

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே‌ உள்‌ள இடும்பவனம் (எங்‌கள்‌ கி‌ரா‌மத்‌தி‌றகும்‌ பக்‌கத்‌து கி‌ரா‌மம்‌) கடைத்தெருவில், நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க., பொதுக்கூட்டத்‌தி‌ல்‌ பே‌சி‌னா‌ர்‌. அந்‌த பே‌ச்‌சே‌ அவரது கடை‌சி‌ பே‌ச்‌சா‌க மா‌றி‌யது.

முத்துப்பேட்டையில் உள்ள லண்டன் சைவ உணவகத்தில் டிபன் சாப்பிட்டு, இரவு 11.15 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு மன்னார்குடி நோக்கிச் சென்றார். பின்னர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது, இரவு 12 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் 12.15 மணியளவில் மாரடைப்பால் இறந்தி‌ருக்‌கி‌றா‌ர்‌

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, நேற்று காலை 10.30 மணிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. நா‌ன்‌ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினே‌ன்‌. முன்‌னா‌ள்‌ முதல்‌வர்‌ ஜெ‌யலலி‌தா‌, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செங்கோட்டையன், தம்பிதுரை, ஜெயக்குமார், பொன்னையன், வளர்மதி உள்ளிட்டோரும், சினிமாத் துறையை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 9 மணியளவில், போரூர் மின்சார இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பபட்‌டது.

சி‌வகங்‌கை‌ சீ‌மை‌யி‌ல்‌ தோ‌ன்‌றி‌ய நகை‌ச்‌சுவை‌ தெ‌ன்‌றல்‌‌‌, இன்‌னொ‌ரு நகை‌ச்‌சுவை‌ நா‌யகி‌ ஆச்‌சி‌யி‌ன்‌ சொ‌ந்‌த ஊரா‌ன மன்‌னா‌ர்‌குடி‌யி‌ல்‌ மறை‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌‌.

1 கருத்து:

  1. நல்ல நகைச்சுவை நடிகர் திரு. எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

    பதிலளிநீக்கு