செவ்வாய், 24 ஜூன், 2014

கே.எஸ்.ரவிகுமார் ஒரு ரவுடி டைரக்டர் - ரஜினி பேட்டி

ராஜ் தொலைக்காட்சி இருபதாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த போது, தமிழ் திரையுலகில் வெள்ளி விழா கொண்டாடும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டி ’என்றென்றும் ரவிக்குமார்’ என்று மிகப் பிரமாண்டமான பாராட்டு விழாவை எடுத்தனர். அவ்விழாவுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பேட்டி எடுக்க என்ன அனுப்பி வைத்தார், இயக்குனர் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள்.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில், அவர் அளித்த பேட்டி இதோ…

கே.எஸ்.ரவிக்குமார் என்னுடைய இயக்குனர் என்பதை விட என்னுடைய மிகப் பெரிய நண்பராகத்தான் தெரிகிறார். அவருடைய நாட்டாமை படம் பார்த்த பிறகு, அவரை சந்தித்தேன். நாட்டாமை எவ்வளவு பெரிய பிரமாண்ட படம். எத்தனை பெரிய நடிகர்கள் நடித்தப் படம். அந்தப் படத்தை நினைத்துப் பார்க்க முடியாத குறுகிய காலத்தில் அளவான பட்ஜெட்ல எடுத்திருந்தாருன்னு கேள்விப்பட்டு நான் அசந்து பொய்ட்டேன்.

சரி, இவர் கூட ஒரு படம் செய்யனும்னு முத்து படம் பண்ணுனேன். அந்தப் படத்துல அவர் கூட சேர்ந்து வேலை பார்க்கும் போது, முதல் நாளே அவருடைய ஒர்க்கிங் ஸ்டைலைப் பார்த்து மிரண்டுப் போய்ட்டேன். அதாவது, அவர் ஒரு ரவுடி டைரக்டர்தான்!..... (சிரிப்பு)

அவரை நான் கூப்பிடுறது மேஸ்திரின்னுதான்!. அந்த மாதிரி கம்ப்ளீட்டா, அந்த யூனீட்டையே கமாண்டிங் பவரோட நடத்துனாரு.  அவருக்கு எல்லா விஷயமும் தெரியும். அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. அவர் ஒரு தயாரிப்பாளரின் இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறைய பேருக்கு தெரியாத விஷயம், அவர் ஒரு பணக்கார வீட்டு பையன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னடியே அவர் பணக்காரராக இருந்தவரு. இருந்தாலும் அதை அவரு வெளியே காட்டிக் கொண்டதில்லை.

அவரோட அலுவலகத்தில் தினமும் இருபது, முப்பது பேரு சப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. அவர் உதவி செய்ற மாதிரி எந்த இயக்குனரும் செய்திருக்க மாட்டாங்க. குறைந்தது தினம் பத்து பேராவது உதவி பெற்று போவாங்க. நான் பார்த்திருக்கிறேன்.

அவருக்கு இருக்கிற சினிமா வட்டத்தைவிட  இன்னொரு பெரிய வட்டம் வெளியே இருக்கு. டாக்டர்ஸ், கான்ராக்டர்ஸ், தொழிலதிபர்கள் என பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கு. அது அவருடைய இன்னொரு முகம்.

முதல் படம் வேலை செய்த பிறகு அவருடன் அட்லிஸ்ட் பத்து படத்திலயாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுவரைக்கும் இரண்டு படம்தான் பண்ணி இருக்கிறேன்.

நான் ஒவ்வொரு படம் பண்ணும் போதும் கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் முதலில் அழைத்து டிஸ்கஸ் பண்ணுவேன். அது  எப்படியோ தெரியாது. மிஸ் ஆகி போகும். அவருக்கும் அதுல கொஞ்சம் வருத்தம் இருந்தது. எனக்கு ரொம்ப ரொம்ப  வருத்தம் இருந்தது.

ஜக்குபாய், ராணா எதுவும் பண்ண முடியாமல் போச்சு. இதையெல்லாம் சரிகட்டுவதற்கு வேறு எதாவது ஒரு படம் அவர் கூட சேர்ந்து செஞ்சாகனும்.

கோச்சடையான் கதை, திரைக்கதை அவர் எழுதினாலும் சவுந்தர்யா இயக்கினாங்க. என் மகள் என்றாலும் அவுங்களுக்கு அவர் கொடுத்த என்கரேஜ், சப்போர்ட்... உதவி, அந்த உதவிக்கு கைமாறாக ரவிக்குமாருக்கு என்ன பண்ணுவேன்னு தெரியால்...” என்று பேட்டியின் கூறி இருந்தார்.

இப்போது... ’லிங்கா’ படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் ரஜினி.





1 கருத்து: