நாயகன், தளபதி, ரோஜா, போன்ற
தரமான
படைப்புகளை
தந்த மணிரத்னத்தின்
இயற்பெயர்
பெயர்
கோபால
ரத்னம்
சுப்ரமணியம்.
1956 ஆம்
ஆண்டு
ஜூன்
இரண்டாம்
தேதி
மதுரையில்
பிறந்த இவர்
சென்னை
விவேகானந்தா
கல்லூரியில்
படித்தவர்.
இவரது
தந்தை
ரத்னம்,
உத்தம புத்திரன் போன்ற எண்ணற்ற வெற்றிப்
படங்களைத் தயாரித்த வீனஸ் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின்
பங்குதாரர். தந்தை சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கு
சினிமா
மீது ஆர்வம்
பிறந்தது
எம்பிஏ
பட்டதாரியான இவர். இயக்கிய முதல் படம் பல்லவி அனுபல்லவி என்ற கன்னடப்படம். . வயதான ஒரு பெண்மணிக்கும்
ஒரு
வாலிப
இளைஞனுக்கும் இடையே இருந்த உறவை
அடிப்படையாகக் கொண்ட அந்தக் கதையில் அனில்
கபூரும் லட்சுமியும் ஜோடியாக நடித்தனர். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த
திரைக்கதைக்காக கர்நாடக அரசின் விருதினைப் பெற்றது. இப் படத்தை
ஒளிப்பதிவு செய்தவர் பிரபல காமிரா கவிஞரான பாலுமகேந்திரா.
இவர் இயக்கிய
இரண்டாவது படம் உணரு. இந்தப் படம் மலையாள மொழித் திரைப்படமாகும்.
1985ல் தமிழில் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கினாலும் மணிரத்தினத்திற்கு ஒரு தனி அடையாளத்தைத் தந்த . படம் என்றால் அது 1986ல் இவர் இயக்கிய மௌனராகம்தான் அப் படம்
பெரும்
வெற்றி
படமாக
அமைந்தது மட்டுமின்றி சிறந்த
படத்துக்கான
தேசிய
விருதையும் பெற்றது.
1987ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த
நாயகன்
என்கிற
படத்தை
இயக்கியதன் மூலம் மொத்தத் தமிழ்த்
திரையுலகையும் தன பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்குண்டு. இப்படம் சிறந்தப் படத்துக்கான தேசிய விருது, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது, சிறந்த கலை இயக்குனருக்கன தேசிய விருது என மூன்று விருதுகளை ஒரு சேரப் பெற்றது.
உலகின் சிறந்த
1௦௦ திரைப்படங்களை டைம் பத்திரிகை பட்டியலிட்ட போது அதில்
இடம்பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம்
மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான நாயகன்.
கார்த்திக்
பிரபு
இருவரையும்
இணைத்து
அக்னி
நட்சத்திரம்
என்கிற
படத்தை
இயக்கிய இவர் இயக்கிய முதல்
தெலுங்குப்படம் கீதாஞ்சலி நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்த இப்படம் சிறந்தப் படத்துக்கான தேசிய
விருதையும்,
சிறந்த
கதைக்கான
ஆந்திர அரசின் நந்தி
விருதையும்
பெற்றது.
அடுத்து அஞ்சலி
என்ற படத்திற்காக தேசிய விருது
பெற்ற இவர்.
சூப்பர்
ஸ்டார்
ரஜினிகாந்தை இயக்கிய முதல் படம் தளபதி. மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த இப் படத்தில் .மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்
தளபதி
படத்தில்
கலெக்டராக
நடித்த
அரவிந்தசாமி
கதாநாயகனாக
நடிக்க
இவர் இயக்கிய ரோஜா படத்தில்தான் இன்று உலகம்
போற்றும்
இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர்.ரகுமானை இவர் இசையமைப்பாளராக
அறிமுகப்
படுத்தினார். ரகுமானின் சிறந்த
இசையிலும், மணிரத்தினத்தின் மிகச் சிறப்பான இயக்கத்திலும் உருவான இப்படம் சிறந்த
இயக்குனருக்கான தேசிய விருதையும் தமிழக
அரசின் விருதையும் இவருக்கு
பெற்றுத் தந்தது.
ரோஜா
திரைப்படத்திற்கு முன்பு பல படங்களில் இளையராஜாவோடு பணியாற்றியுள்ள இவர் ரோஜா படத்திற்குப் பிறகு இன்று வரை இயக்கியுள்ள படங்கள் எல்லாவற்றிற்கும் இசை ஏஆர்
ரகுமான்தான்
மும்பை
மதக்
கலவரத்தை
மையமாக
வைத்து
பம்பாய்
படத்தை இவர் உருவாகியதைத் தொடர்ந்து இவரது வீட்டில்
வெடிகுண்டு வீசப்பட அதைத் தொடர்ந்து இன்றுவரை போலீஸ் பாதுகாப்போடு
வலைய வருகிறார் இவர்
இரு
அரசியல்
நண்பர்களின்
கதையைத் தழுவி இருவர்
என்கிற
பெயரில்
இவர் உருவாக்கிய படத்தால் தமிழகத்தில்
பெரும் சர்ச்சை ஏற்பட்டது . இந்தப் படத்தில்தான் உலக அழகியான ஐஸ்வர்யாராய்
தமிழுக்கு அறிமுகமானார் .
இவர் இயக்கிய
ரோஜா பம்பாய் போன்ற படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மாபெரும்
வெற்றியைத் தழுவிய படங்கள் என்றாலும் இவர் நேரடியாக இயக்கிய முதல் இந்திப்படம்
ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த தில்’சே,
திரைப்படம்தான் இப்படம் தமிழில்
மொழிமாற்றம் செய்யப்பட்டு உயிரே
என்ற
பெயரில் வெளிவந்தது
தமிழ்த்
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சாக்லட் பாய் இமேஜுடன் பல திரைப்படங்களில் நடித்த மாதவனை
திரையில் அலைபாயுதே திரைப்படத்தின்
மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்
.அதன் பிறகு இலங்கை பிரச்சனையை தொட்டு கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற படத்தை தந்தார். இப்படம் தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது, உட்பட பல விருதுகளை பெற்றது
பாரதிராஜாவை
தனது ஆயுத எழுத்து படத்தில் நடிக்க வைத்த
இவர்தான் நடிகர் விக்ரமை தனது ராவணன் படத்தின் மூலம் இந்திப்பட உலகிற்கு அறிமுகம்
செய்தவர்
கடல் படத்தின்
மூலம் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்கையும் ராதாவின் மகள் துளசியையும்
அறிமுகப்படுத்தியவர் இவர் .
ஆறுமுறை தேசிய
விருதையும் எண்ணற்ற முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு 2002 ஆம்
ஆண்டு
இந்திய
அரசு
பத்மஸ்ரீ
விருது
வழங்கி
கௌரவித்தது.
கமல்ஹாசனின்
அண்ணன்
சாருஹாசன்
மகளும்
நடிகையுமான
சுகாசினியை
2 0 0 2 ஆம் ஆண்டில் திருமணம்
செய்து
கொண்டார் இவர் இவர்களுக்கு
நந்தன்
என்கிற
ஒரு
மகன்
இருக்கிறார்.
தனது
உதவியாளர்கள்
கே.சுபாஷ் இயக்கத்தில் சத்ரியன், அழகம்பெருமாள் இயக்கத்தில் டும்டும்டும், சுசி.கணேசன் இயக்கத்தில் பைவ் ஸ்டார், போன்ற படங்களையும், தனது மனைவி சுகாசினி இயக்கத்தில் இந்திரா படத்தையும் வசந்த்
இயக்கத்தில்
ஆசை,
நேருக்கு
நேர்
பொன்ற
படங்களையும் இவர் தயாரித்திருக்கிறார்.
நேர்த்தியான தொழில் நுட்பத்திற்கு
பெயர்
பெற்ற
இவருக்கு தான் இயக்கிய
படங்களில் மிகவும் பிடித்த
படம் ‘இருவர்’.
இளம் இயக்குனர்களின் படைப்புகளைப் பார்த்துவிட்டு அவர்களைப்
பாராட்டத் தயங்காத இவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படாத இந்திய நடிகர்களே இல்லை இன்று
என்பது இவரது தனிச் சிறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக