வியாழன், 13 அக்டோபர், 2022

இரண்டாவது பேசும்பட இயக்குநர் டி.சி.வடிவேலு நாயக்கர் வரலாறு

1931 ஆம் ஆண்டு முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. ஆனால், அந்தப் படம் முழுமையான பேசும்படமாக அமையவில்லை என்று பலர் விமர்சனம் செய்தனர். தமிழ், தெலுங்குஇந்தி என பல மொழிகள் பேசி நடித்திருந்தார்கள் என்று கூறினார்கள்.


இந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு அரிசந்திரா, கலாவா, பாரிஜாத புஷ்பா ராகம், ராமாயணம் ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இதில் அரிச்சந்திரா, கலாவா இரண்டு படங்களும் முழுநீள தமிழ் பேசும் படங்களாக வெளியாகி உள்ளன.


'அரிச்சந்திராஏப்ரலில் வந்தது என்றும்காலவாசெப்டம்பரில் வெளியானது என்றும் கூறப்பட்டது. உண்மையில்காலவாபற்றியோஅரிச்சந்திராபற்றியோ படமும் கிடைக்காததோடு இவற்றிற்கான ஆதாரங்களும் இல்லாததால்தான் இந்தக் காலக்கட்டங்களில் வந்த பல திரைப்படங்கள் பற்றி நம்மிடையே தப்பான கருத்துக்கள் உலவுகின்றன. 


அரிச்சந்திராபடம் பற்றியும் பல புனைவுகள் எழுதப்பட்டன. அதை ராஜா சந்திரசேகர், சர்வோத்தம் பதாமி, டி.சி. வடிவேலு நாயக்கர் என்று பலபேர் இயக்கினார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், படத்தை டைரக்ட் செய்தது வடிவேலு நாயக்கர்தான் என்று தியோடர் பாஸ்கரன் என்கிற ஆய்வாளர்நம் தமிழர் செய்த படங்கள்என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.


ஆரம்பகால தமிழ்ப் படங்களை பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோதான் படமாக்கினார்கள்கதை, நடிப்பு, மற்ற திறன்கள் நம்மிடையே இருந்தாலும் பேசும் சினிமா டெக்னிக்கல் விஷயங்கள் வடநாட்டில்தான் பெரும்பான்மையாக இருந்தன. 


அதனால், பேசும் சினிமா பற்றி தெரிந்து கொள்ள பம்பாய் சென்று சாகர் பிலிம்ஸ் நிறுவனத்தில் இணைந்த டி.சி.வடிவேலு நாயக்கர். சினிமா தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொண்டார். நேர்மைக்கு பெயர் பெற்ற அரிச்சந்திர மகராஜாவின் கதையை டி.சி.வடிவேலு நாயக்கர் எழுதிசாகர் பிலிம் கம்பெனிக்கு சம்பூர்ண அரிச்சந்திரா என்கிற பெயரில் இயக்க தொடங்கினார். படம் இயக்கும் போது அவருக்கு தொழில் நுட்பத்தில் உதவியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை படநிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அவர் பாதியிலேயே கருத்து முரண்பாடு கொண்டு வேலை செய்வதை நிறுத்தியதால், அப்போது அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த சர்வோத்தம் பதாமி என்பவர் டெக்னீக்கல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். 


அரிச்சந்திரா படத்தில் வி.எஸ்.சுந்தரேச அய்யர், டி.ஆர்.முத்துலட்சுமி, டி.பி.ராஜலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தார்கள். அரிச்சந்திரா படத்தின் படப்பிடிப்பு இருபத்தியோரு நாட்களில் நடந்துள்ளதாக தகவல். 


அரிச்சந்திரா படம் வெளியாவதில் தாமதம் ஆனதும், அடுத்து தனது நண்பர் பம்மல் சம்பந்தம் முதலியாரின் 'கலாவா' நாடகத்தை கலாவா ரிஷி என்கிற பெயரில் எடுக்க முயற்சி செய்துள்ளார். பம்மல் சம்பந்தம் முதலியாரின் நாடகக் குழுவானசுகுண விலாச சபையில் ஓர் உறுப்பினராக, பெரிய ஜாம்பவானாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார், டி.சி. வடிவேலு நாயக்கர். அதனால், உடனடியாக தனது கதை படமாக்க ஒப்புக் கொண்டார், பம்மல் சம்பந்தம் முதலியார்.


புகழ்பெற்ற நாடக்குழுவான கண்ணய்யாவின் நாடக்குழுவில் ராஜபர்ட்டாக நடித்த பி.பி.ரங்காச்சாரி, கலாவா படத்தில் நாயகனாக நடிக்க, அவருடன் வி.எஸ்.சுந்தரேச ஐயர், டி.ஆர்.முத்துலட்சுமி உட்பட பலர் நடித்தனர். புராண படமாக உருவான காலவா படம் முழுமையான முதல் தமிழ் பேசும் படமாக வெளியானது. 


1932ல்அரிச்சந்திராமற்றும் காலவா இரண்டு படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அதன் பிறகு 1933 ஆம் ஆண்டுபிரகலாதன்என்கிற படத்தை இயக்கினார், வடிவேலு நாயக்கர். அதைத் தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு வெளியான சக்குபாய் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதினர்.


1936 ஆம் ஆண்டு எம்.எம்.தண்டாபாணி தேசிகர் நடித்தபட்டினத்தார்படத்தின் கதையை எழுதிய டி.சி. வடிவேலு நாயக்கர், அதே ஆண்டில்மீராபாய்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி நாராயணனுடன் இணைந்து அந்தப் படத்தை இயக்கவும் செய்தார். இதில்பட்டினத்தார்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் 25வாரங்கள் ஓடியது.


மறுபடியும் .நாராயணனுடன் இணைந்துவிராட பருவம்படத்தை இணைந்து இயக்கிய டி.சி.

வடிவேலு நாயக்கர், அதன் பிறகுகவிரத்ன காளிதாஸ்’, ‘விஸ்வாமித்ராபடங்களுக்கு கதை எழுதினர்.


.நாராயணனின் ஸ்ரீனிவாசா சினிடோன் தயாரித்தஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்படத்திற்கு 1937

ஆம் ஆண்டு வசனம் எழுதிய டி.சி. வடிவேலு நாயக்கர், அதன் பிறகு .நாராயணனுடன் இணைந்துவிக்ரம ஸ்ரீ சாகசம்என்கிற படத்தை 1937 இயக்கி தயாரித்தார்.


அதன் பிறகு பி.என்.ராவ் இயக்கியபிரகலாதாபடத்திற்கு 1939ஆம் ஆண்டு திரைக்கதை எழுதியவர், 1939 ஆம் ஆண்டு பி.என்.ராவ் இயக்கியரம்பையின் காதல்படத்திற்கு அவருடன்

இணைந்து வசனம் எழுதியுள்ளார்.


1940 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பில் எம்.கே.ராதா, எம்.ஆர்.சந்தானலட்சுமிடி.ஆர்.மகாலிங்கம் உட்பட பலர் நடித்தசதிமுரளிஎன்கிற படத்தின் கதை - வசனம் எழுதி இயக்கினார். டி.சி. வடிவேலு நாயக்கர்.


1941ஆம் ஆண்டு ஒய்.வி.ராவ் நடித்து இயக்கியசாவித்திரிபடத்துக்கு வசனம் எழுதியவர், அதே ஆண்டில் பி.யூ.சின்னப்பா நடித்தஆர்யமாலாபடத்திற்கும் வசனம் எழுதினர்1944ஆம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடிப்பில் கே.பி.நாகபூசனம் இயக்கியஹரிச்சந்திராபடத்துக்கு வசனம் எழுதிய வடிவேலு நாயக்கர், அதே ஆண்டில் வெளியான பி.யூ.சின்னப்பா நடித்த ஜகதலப்பிரதாபன்படத்திற்கும் வசனம் எழுதினர்.


அதன் பிறகு 1946 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணனுடன் இணைந்துபுலந்திரன்என்கிற படத்தின்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார். அந்தப் படம் முடியவில்லை. பாதியில் நின்றுவிட்டதுஆனால், அவரது கடைசி படமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் கே.பி.நாகபூசனம் இயக்கியதுளசிஜலந்தர்என்கிற படம் பதிவாகியுள்ளது. இந்ததுளசி ஜலந்தர்படத்திற்கு கதை வசனம் எழுதி இருக்கிறார், சி. வடிவேலு நாயக்கர்.


1932ல் ஆரம்பித்த டி.சி.வடிவேலு நாயக்கரின் தமிழ் சினிமா பயணம் 1947 வரை நீடித்திருக்கிறது. இந்தக் காலத்தில் சுமார் 20 படங்களுக்கு திரைப்பட இயக்கம், கதை, வசனகர்த்தா என்று பல பரிமாணங்களில் பிரகாசித்திருகிறார். 

1931 முதல் 36 வரைக்குமான காலக்கட்டத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட படங்களில் பல நம்மிடையே இல்லை. அத்துடன் இவை பற்றி தப்பும் தவறுமான கருத்துக்கள் வேறு நம்மிடையே உலா வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக