வாணி ஜெயராம் தனது ஐந்தாவது வயதிலேயே இசையின் ராகங்களை அடையாளம் கண்டு கொள்கின்ற
ஆற்றலைப் பெற்றிருந்தார்.
1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வட
ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூரில் பிறந்த அந்த குழந்தையின்
குரல் அகில இந்திய வானொலியில் ஒலி பரப்பப்பட்டபோது அதற்கு வயது என்ன தெரியுமா?
எட்டு
அந்தக் குழந்தைதான் பின்னர் வாணி ஜெயராம்
என்ற பெயரிலே இந்தியா முழுமைக்கும் அறிமுகமான பாடகி வாணி ஜெயராம்
வாணியின் குடும்பம் மிகவும் பெரியது
வாணியின் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் ஐந்து சகோதரிகள் மூன்று
சகோதரர்கள்
இவரது தாயாரான பதமாவதியும் இசையில்
தேர்ச்சி பெற்றவராக இருந்ததால் சிறு வயது முதலே இசை ஆர்வம் இவருக்கும் இருந்தது
இளம் வயது முதலே பாடகியாக வேண்டும் என்பது
அவர் கனவாக இருந்தது என்றாலும அந்தக் கனவு சிதார் இசைக் கலைஞரான ஜெயராம் அவர்களை கைப்பிடித்து இவர் பம்பாய் வந்த
பிறகுதான் நனவானது
பிரபல இசைக்
கலைஞரான உஸ்தாத் அப்துல் ரகுமான் கான் அவர்களிடம் இவரை அறிமுகப்படுத்தினார்
ஜெயராம் இவரைப் பாடச் சொல்லி கேட்ட அவர்
தன்னுடைய மாணவியாக இவரை ஏற்றுக் கொண்டு இவருக்கு
இசைப் பயிற்சி தர இசைந்தார்
அவர் எனக்கு
இசையைக் கற்றுத் தருகிறேன் என்று சொன்ன அந்த தருணம் நான் தரையிலேயே இல்லை வானத்தில்
மிதந்தேன் என்கிறார் இவர்
தினமும்
இசைப்பயிற்சி இவரது வீட்டிலேயே காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது அப்போது
வாணி ஒரு வங்கியிலே பணியாற்றிக் கொண்டிருந்தார் இசைப் பயிற்சிக்கு இடையூறாக
இருந்ததால் வங்கி வேலையை ராஜினாமா செய்தார் இவர்
1969 ஆம் ஆண்டு இவரது முதல் இசைக் கச்சேரி பம்பாய் ரசிகர்களின்
முன்னாலே நடைபெற்றது இவர் பின்னணி பாடகியாவதற்காக திரையுலகின் வாசல் கதவுகளைத்
திறந்து விட்டது பம்பாயில் இவர் நடத்திய அந்தக்
கச்சேரிதான் என்று சொன்னால் அது மிகையாகாது
அந்த இசைக்
கச்சேரியில் இவரது இனிமையான குரலைக் கேட்ட
வசந்த் தேசாய் என்ற இந்தி இசையமைப்பாளர் ஒரு மராத்தி நாடகத்திற்காக இவரது குரலில் பல மராத்திப் பாடல்களை பதிவு
செய்தார்
அதை தொடர்ந்து
அவரே 1970ஆம் ஆண்டில் குட்டி என்ற இந்தி படத்திற்காக மூன்று
பாடல்கள் பாடும் வாய்ப்பை இவருக்குக்
கொடுத்தார்
இந்துஸ்தானி
இசையில் அமைந்திருந்த போலோரே பப்பி
என்று தொடங்கக்கூடிய அந்தப் பாடல்
இந்தியா முழுமைக்கும் இவரது இசைத் திறமையை அறிமுகப் படுத்தியது அது மட்டுமின்றி
எண்ணற்ற விருதுகளையும் அந்தப் பாடல் இவருக்கு பெற்றுத்தந்தது
இவரை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகப் படுத்திய
பெருமை இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களையே சாரும் 1973ஆம் ஆண்டில் நெல்லை பொன்மால் இயக்கிய தாயம் சேயும் என்ற
படத்திற்காக தனது முதல் தமிழ்ப் பாடலைப் பாடினர் இவர்
1975 ஆம் ஆண்டில்
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் அபூர்வ ராகங்கள் படத்திற்காக இவர்
பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்று தொடங்கும் பாடல் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை இவருக்குப்
பெற்றுத் தந்தது
அதையடுத்து கேவி
மகாதேவன் இசையில் உருவான சங்கரா பரணம்
படத்திற்காகவும் சுவாதி கிரணம் படத்திற்காகவும் 1980 ஆம் ஆண்டிலும் 1991ஆம் ஆண்டிலும் சிறந்த
பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றார் இவர்
அதற்குப் பின் எண்ணற்ற பாடல்களைத் தமிழில்
பாடக்கூடிய வாய்ப்ப இவருக்குக் கிடைத்தது
பாலைவனச் சோலை படத்திற்காக இவர் பாடிய
மேகமே மேகமே என்ற பாடலும் தீர்க்க சுமங்கலி படத்திற்காக இவர் பாடிய மல்லிகை என்
மன்னன் மயங்கும் என்ற பாடலும் இசை ரசிகர்கள் மனதை விட்டு என்றும் நீங்காத
பாடல்கள்
இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு
குஜராத்தி மராத்தி பெங்காலி,ஒரியா எனப் பல மொழிகளில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை அந்தந்த மொழிகளில் சிறந்து
விளங்கிய இசையமைப் பாளர்கள் இசையில் பாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர் இவர்
இவரது குரலில் ஒரு கஜல் ஆல்பத்தை உருவாக்க
ஆசைப்பட்ட இந்திப் பட உலகின் பிரபல இசையமைப்பாரான
நவுஷத் வாணியின் உருது உச்சரிப்பு இருக்கிறதே அது அசாத்தியமானது என்று இவரது
உச்சரிப்பைப் பல முறை பாராட்டியுள்ளார்
காவியத் தலைவன் படத்திற்காக ஒரு பாடலை ஏஆர்
ரகுமான் இசையில் பாடிய இவருக்கும் ஆஸ்கார்
நாயகன் ரகுமானுக்கும் ஒரு பந்தம்
இருக்கிறது
தனது பதிமூன்றாவது வயதில் ரகுமான் ஒரு
இசைக் குழுவைத் தொடங்கியபோது குத்துவிளக்கேற்றி அந்த இசைக் குழுவைத் துவக்கி
வைத்தவர் இவர்தான்
எண்ணற்ற மேடைக் கச்சேரிகளில் பங்கு
பெற்றுள்ள இவரது இசைப்பயணம் கடந்த நாற்பத்தி
ஐந்து ஆண்டுகளாக தொடர்கிறது
இசைதான் எனது மூச்சு ஆகையால் ஆகையால் என்
இசைப்பயணம் எனது இறுதி மூச்சு வரை தொடரும் என்கிறார் இந்த இசைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக