ஆந்திராவில்
உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் Nidadavole என்கிற ஊரில் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
இரண்டாம் தேதி பிறந்தவர் நடிகை கவுதமி.
விசாகப்பாட்டினம்
GITAM கல்லூரியில் படித்தவர், அவருடைய பதினெட்டவது வயதில் ரஜினிகாந்த், ஹேமமாலினி நடித்த
அந்த கானுன் இந்திப் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். இந்தப் படம்
1983ல் வெளியானது.
அதன் பிறகு
1987ல் அவரது உறவினர் தயாரித்த Dayamayudu என்கிற தெலுங்கு படத்தில்
கதாநாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் காந்திநகர் ரெண்டாவது வீதி, சீனிவாச கல்யாணம்
என இரண்டு தெலுங்கு படங்கள், எலு சுட்டின கோடு என்கிற ஒரு கன்னடப் படம் என மூன்று படங்களில்
நடித்திருந்தார் இவர்.
1988 ஆம் ஆண்டு
ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதே ஆண்டில்
வெளியான ராமராஜன் நடித்த எங்க ஊரு காவக்காரன் படம் அவருக்கு நல்ல குடும்ப பாங்கான முகம்
கொண்ட நடிகை என்கிற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
1989 ஆம் ஆண்டில்
அவர் நடித்த 19 படங்கள் வெளியானது. அதே போல 1990ல் 18 படங்களும், 1992ல் 16 படங்களும்
என 1988 முதல் 1998 வரை பத்து ஆண்டுகளில் 107 படங்களில் நடித்தார்.
ரஜினியுடன்
நடித்த குருசிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், கமலுடன் நடித்த அபூர்வ சகோதரர்கள்,
தேவர்மகன் படங்கள் வெற்றிகரமாக ஓடின.
இவர் நடித்த
படங்கள் வெற்றிகரமாக ஓடிய போது, தமிழில் பிசியாக இருந்த நேரத்தில் பல தெலுங்கு பட வாய்ப்புகளும்,
தெலுங்கில் பிசியாக இருந்த போது பல தமிழ்பட வாய்ப்புகளும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு
குவிந்தன. என்னற்ற படங்களை அப்படி இழந்தவர் இவர். தமிழில் அப்போது இருந்த அனைத்து முன்னணி
நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தவர் இவர்.
மலயாளத்தில்
மம்மூட்டியுடன் துருவம், மோகன்லாலுடன் அப்துல்லா, அரவிந்தசாமியுடன் டாடி என பல படங்களில்
நடித்துள்ள இவர் கன்னடத்தில் Elu Suttina Kote, Chikkejamanru மற்றும் Cheluva பொன்ற
படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் தனக்கென
ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்தார்.
Pyar Hua chori chori, Janata ki Adalat, Haiwan, Admi, Appoo Raja, Trimurti,
Dhaal, என பல படங்கள் அவரது திறமைக்கு சான்றாக அமைந்தன.
இமேஜ் பற்றி
கவலைப் படாத நடிகை இவர். இளம் பருவத்திலேயே தர்மதுரை படத்தில் வயதான தோறத்தில் நடித்திருக்கிறார்.
பட்டத்து ராணி படத்தில் வயதான விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்தார். ஜென்டில்மேன் படத்தில்
சிக்கு புக்கு ரயிலே என்கிற ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடினார்.
1990 ஆம் ஆண்டு
’நம்ம ஊரு பூவாத்தா’ படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இவர்,
1991 ஆம் ஆண்டு ’நீ பாதி நான் பாதி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது,
மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பெற்றார்.
தொழிலதிபர்
சந்தீப் பாட்டியா என்பவரை 1998 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கவுதமி. இவர்களுக்கு
1999 ஆம் ஆண்டு சுபலட்சுமி என்கிற மகள் பிறந்தாள். திருமணம் ஆன இரண்டாவது ஆண்டே இருவருக்கும்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இவர் கடைசியாக
நடித்த மகேந்திரனின் சாசனம் என்கிற படம் 2006–ல் வெளியானது. அதன் பிறகு சினிமாவை விட்டு
ஒதுங்கினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
சின்னத்திரையிலும்
முத்திரை பதித்த இவர், கமல் நடித்த தசாவதாரம் படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி
சிறந்த காஸ்டியூம் டிசைனருக்கான விஜய் டிவி விருதும் பெற்றார்.
சில வருடங்களுக்கு
முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் இவர். அதில் இருந்து அவர் மீள்வதற்கு கமல்
உறுதுணையாக இருந்தார். தற்போது கமலுடன் வாழ்ந்து வருகிறார் கவுதமி.
என் வாழ்க்கையின்
தூண் என்பதை விட அதை விடவும் மேலானவர் கமல்ஹாசன் என்கிறார் கவுதமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக