செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழ் சினிமாவின் முதல் ‘ஆக்‌ஷன் ஹீரோயின்’ கே.டி.ருக்மணி

கே.டி.ருக்மணி அம்மாவுக்கு சொந்த ஊரு கடலூர். அவுங்க அப்பா பேரு தங்கவேலு, அம்மா பேரு தனபாக்கியம். பொறந்த ஊரின் முதல் எழுத்தையும், அப்பா பேரின் முதல் எழுத்தையும் இன்ஷியலா வச்சிக்கிட்டாங்க... கே.டி.ருக்மணி அம்மாள்.  அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அம்மாவுக்கு இவர் துணை. இவருக்கு அம்மா துணை. கோடை கால கோயில் திருவிழா நாடகங்கள் அவருக்குள் இருந்த கலையுணர்வை உசுப்பி விட்ருச்சு. எந்த நாடகம் பார்த்து வந்தாலும், அந்த நாடகத்தின் வசனங்கள் அப்படி ஏற்ற இரக்கத்தோடு பேசுவார்ன்னா பார்த்துக்குங்களேன்... டான்ஸம் ஆடுவாங்க...  


அவருக்குள் இருக்கிற அந்த திறமை வருஷா வருஷம் பட்டை தீட்டப்பட்டுக்கிட்டே வந்திருக்கு. அம்மா படுற கஷ்டத்தை பார்த்த போது, நாமும் நாடகத்தில் நடித்து அம்மாவுக்கு உதவலாமே என்று அவருக்கு தோன்றியது. மகளோட திறமையை அறிந்த அம்மா, மக்களோட ரசனையை அறிந்த அம்மா மகள் நடிக்கிறதுக்கு சப்போட் பண்ணிருக்காங்க... 


ராஜாம்பாள் நாடக குழு, சச்சிதானந்தம் பிள்ளை நாடகக் கம்பெனி, பாலாம்பாள் நாடகக் கம்பெனி, சிந்தாதிரிப்பேட்டை கந்தசாமி முதலியார் கம்பெனி, டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடகக் குழு என புகழ் பெற்ற குழுக்களின் பிரதான நடிகையாக மாறினார், ருக்மணி. 


அரிச்சந்திரன், வள்ளித் திருமணம், கோவலன், மனோகரா என எண்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் பல நூறு மேடைகளில் தோன்றினார். தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் சிங்கப்பூர், பினாங்கு என பல நாடுகளுக்கும் கடல் கடந்து சென்றார். 


ருக்மணியின் திறமையைப் பார்த்த இயக்குனர் ராஜா சாண்டோ தனது பேயும் பெண்ணும், பாரிஜாத புஷ்பகரணம் போன்ற மௌனப் படங்களில் நடிக்க வைத்தார். மீண்டும் தனதுமேனகாபேசும் படத்தில் ருக்மணிக்கு நூர்ஜகான் வேடம் கொடுத்து அழகு பார்த்தார். 


1937 ல் வெளிவந்தமின்னல்கொடியில் அதிரடி நாயகியாக அறிமுகமானார். வசதி படைத்தவர்களிடமிருந்து அதிரடியாகப் பணம் மற்றும் பொருளைப் பறித்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவும் லேடி ராபின்ஹூட் வேடம். இந்தப் படத்தில் முதல் முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு நடித்தார். அதுவரை யாரும் அப்படி நடித்ததில்லை. ஆக்சன் காட்யில் பங்களாவில் இருந்து குத்தித்து சண்டைப் போட்டார். தமிழ் சினிமாவின் முதல்ஆக்‌ஷன் ஹீரோயின்என்ற புகழும் அவருக்கு கிடைத்தது. 


1939ல்வீர ரமணிபடம் வெளியானபோது பெண் ஒருவர், ஆண் உடையில் வாயில் புகையும் சிகரெட்டுடன் தோன்றும் போஸ்டரா என்று  பெரும் பேச்சாக அன்றைக்கு மாறியது. குதிரை சவாரி... பைக் சவாரி.... பாய்ந்து அடிப்பது.... துள்ளி குதிப்பது... ஓங்கி உதைப்பது என ஆக்ஷனில் வேற ;ஏவல் காட்டினார் ருக்மணி 


வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக மட்டுமல்லாமல் பால்ய விவாகத்துக்கு எதிராகவும் குரலெழுப்பிய படம்ஜயக்கொடி’. இப்படம் 1940ல் வெளியானது. எங்கெங்கெல்லாம் வரதட்சணை வலிந்து கேட்கப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் உள்ள மாப்பிள்ளைகள் ஜயக்கொடியால் என்ன நெலமைக்கு ஆலவாங்க தெரியுமா? அப்பவே புரட்ச்சிகரமான பாத்திரத்துல நடிச்சவுங்க ருக்மணி அம்மா. 


இதே வருஷத்துலதிருமங்கை ஆழ்வார்’; அந்தப் படத்துல அடக்க ஒடுக்கமான பெண்வேடம். கே.டி.ருக்மணி தன் முத்திரையை அழுந்தப் பதித்த மற்ற படங்களில்தூக்குத் தூக்கி’, ‘மனோகரா’, ‘சாமூண்டீஸ்வரி’, ‘பஸ்மாசர மோகினி’, ‘சாந்தா’, பாக்கியலீலா, பக்தா குமரன், பொன்னருவி என சொல்லிகிட்டே போகலாம். ஆனால், அவர் கடைசியாக நடிச்சது, சி.வி.இராமன் இயக்கத்தில்பொன்னுருவி’. 1947ல் வெளியான இப்படம். அதுக்கு பிறகு என்ன காரணத்தினாலேயே அவுங்க நடிக்கிறத நிறுத்திப்புட்டாங்க. 


கே.டி.ருக்மணியின் கணவர் பெயர் கணேசன். அவரும் ஒரு நல்ல ரசிகராக, கலைஞராக இருந்தார்.  


நாடகம் மற்றும் திரையுலகில் தன்னிகரில்லா நடிகையாகத் திகழ்ந்தவர். தன் இறுதிக் காலத்தில் மிகுந்த துன்பங்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலையில்தான் இருந்திருக்கிறார். 1986ல் கே.டி.ருக்மணி உடல்நலக் கோளாறு காரணமாகத் தன் 72 ஆம்வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக