வியாழன், 3 நவம்பர், 2022

நடிகை ஆர்.பி.லட்சுமிதேவி

வட சென்னையில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் ஆர்.பி.லட்சுமிதேவி. மௌனப் படக் காலத்தில் இயக்குநர் சி. வி. ராமனால் திரையுலகிற்கு அறிமுகமானார். A.நாராயணன் தயாரித்த ஸ்ரீநிவாச கல்யாணம் 1934ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் நடித்தார். பின்னர் "ஸ்டன்ட்" நடிகையாக பம்பாயில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். 

தர்மபத்தினி, டேஞ்சர் சிக்னல், தஞ்சாவூர் ரௌடி, ஆனந்த ஆஸ்ரமம், துபான் குயின், பிரேமபந்தம், மலைமங்கை, வீர வனிதா என பல படங்களில் நடித்தார். 1940 ஆம் ஆண்டில் வெளியான ஜயக்கொடி படத்தில் கே. டி. ருக்மணிக்கு பின்னணி பாடியுள்ளார், ஆர். பி. லட்சுமிதேவி. 

மெரினாவில் குதிரை சவாரி செய்யும் பழக்கம் உடைய லட்சுமி தேவி,  ஐம்பதுகளின் தொடக்க ஆண்டுகளிலேயே '70, லாயிட்ஸ் சாலை' என்ற இலக்கம்கொண்ட பங்களாவில் வசித்தார். பிறகு கோபாலபுரம் கணபதி காலனிக்கு  குடிபெயர்ந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக