வியாழன், 3 நவம்பர், 2022

நடிகர் எம்.டி.பார்த்தசாரதி வரலாறு

தமிழ் சினிமா வரலாறு - 40

===================


சினிமா பேச ஆரம்பித்த பிறகு நடிப்பதற்கும், பாடுவதற்கும் தகுதியுள்ள பலர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர். அவர்களில் ஒருவர் எம்.டி.பார்த்தசாரதி. 

1910 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்த பார்த்தசாரதி படிப்போடு இசையையும் முறையாக பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் "சங்கீத பூஷணம்" பட்டம் பெற்றவர். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்த காலத்தில் பொன்னையா பிள்ளை (தஞ்சாவூர் நால்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மற்றும் வயலின் கலைஞர் மற்றும் சங்கீத கலாநிதி டி.எஸ். சபேச ஐயர் அங்கு கற்பித்தார். 

1930 களின் முற்பகுதியில் தனது படிப்பை முடித்த பிறகு, பார்த்தசாரதி சென்னைக்குச் சென்றார். தமிழ் பேசும் படலம் வளராத தொடங்கிய காலம் அது. பெரும்பாலான பேசும் புராண இதிகாசங்களின் கதைகளுடன் தயாரிக்கப்பட்டது. நடிகர்கள் மேடையில் இருந்தும், கர்நாடக இசை உலகில் இருந்தும் வந்தவர்கள். கர்நாடக இசையில் சிறந்த பயிற்சி பெற்ற பார்த்தசாரதி பேசும் படத்தில் எளிதாக இடம் பிடித்தார்

பிரபல மேடை நாடக தயாரிப்பாளர் பம்மல் சம்பந்த முதலியாரின் அமெச்சூர் குழுவின் நாடகத்தில் பார்த்தசாரதி நடித்தபோது, ​​பிரபல மேடை நடிகரும் எழுத்தாளருமான வடிவேல் நாயக்கர் அவரைக் கண்டார். சினிமாவில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்தார். அதன் பிறகு சேலம் ஏஞ்சல் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பத்மநாபன் இயக்கிய  திரௌபதி வஸ்த்ராபஹரணம் படத்தில் யுதிஷ்டிராவாக நடித்தவர், அதே 1934 ஆம் ஆண்டில் உருவான சக்குபாய் படத்திலும், ஸ்ரீனிவாச கல்யாணம் படத்திலும் நடித்தார். 

ஆர்.பத்மநாபன் இயக்கிய கருட கர்வ பங்கம் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் எம்.எஸ்.மோஹனாம்பாள் உட்பட பலர் நடித்தனர். 1937 ஆம் ஆண்டு வெளியான சேது பந்தனம், மற்றும் தருமபுரி ரகசியம் படங்களில் நடித்தவர், அதன் பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு இசையின் மீது கவனம் செலுத்தினார். 

முதலில் திருச்சி வானொலியில் ஒரு பணியாளர் கலைஞராக வேலை பார்த்தவர, அங்கு வானொலி நாடகங்களில் நடிகராக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு பெங்களூர் வானொலியில் சில ஆண்டுகள் வேலை செய்தார். தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்தான் அவரை  ஜெமினி பேனருக்கு இன்ஹவுஸ் மியூசிக் டைரக்டராக அழைத்தார். வாசனின் அழைப்பை ஏற்று வந்தவருக்கு 1941ஆம் ஆண்டு வெளியான மதனகாமராஜன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. வி. வி. சடகோபன், கே. எல். வி. வசந்தா, என். கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை பி.என்.ராவ் இயக்கினார். 

மதனகாமராஜன் படத்தை தொடர்ந்து நந்தனார், தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, ஞான சௌந்தரி, சந்திரலேகா, அவ்வையார், நம் குழந்தை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இதில் நந்தனார், தாசி அபரஞ்சி, சந்திரலேகா, அவ்வையார் எல்லாம் என்ன மாதியான படம்... எவ்வளவு  பாட்டு.... பாட்டு எல்லாம் எவ்வளவு பெரிய ஹிட்டு.... 

1941ல் இசையமைக்க ஆரம்பித்தவர் 1955 வரை இசையமைத்தார். அவருடன் எஸ்.ராஜேஸ்வரராவ் என்கிற இசையமைப்பாளரும் சில படங்களில் கூடவே இருந்து இசையமைத்தார். இருப்பினும் அவருக்கு புற்றுநோய் வந்தது. நோயின் தீவிரம் காரணமாக 1963ஆம் ஆண்டு காலமானார். 

சிறந்த இசை சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.டி .பார்த்தசாரதி நம்ம கிட்ட இல்லேன்னாலும், அவரது இசை மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான எம்.டி .பார்த்தசாரதி நாம் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதரே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக