இந்திய சினிமாவில் ஒளிப்பதிவுத் துறையில் புதுபுது யுக்திகளை கடைபிடித்து பல சாதனைகளைப் படைத்தவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்தி ஆறாம் தேதி சந்திரமௌளி – சாந்தா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்.
பாலக்காடு சேர்ந்த இவர் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான். இவரது ஒன்பதாவது பிறந்த நாளுக்கு இவரது தாத்தா 'பிரெளனி' கேமரா ஒன்று பரிசளித்தார். அது இவரது புகைப்படத் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. இவர் சென்னை திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில்
சேர்ந்து படிக்க தூண்டுகோலாக அமைந்தது அந்தக் காமிராதான் என்று சொன்னால் மிகையாகாது
திரைப்படக் கல்லூரியில்
படித்த பின்பு இவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் பாவ புண்ணியம் என்ற திரைப்படம்
இப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது இப்படம்
என்று மட்டுமல்ல இவர் ஆரம்பத்தில் பணியாற்றிய பல படங்களின் நிலை இதுதான்
.
1982 –ல் நன்றி மீண்டும் வருக படத்தில் கவனத்தை ஈர்த்த இவர், தொடர்ந்து வா இந்தப் பக்கம், ஒரு வாரிசு உருவாகிறது, போன்ற பல விததியாசமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் என்றாலும்
இவருக்கு திரைத்துறையில் அங்கீகாரத்தைத் தேடித் தந்த படம் என்றால் அது பிரதாப்
பொத்தான் இயக்கத்தில் உருவான மீண்டும்
ஒரு காதல் கதை படம்தான் அந்தப்
படத்தைப் பார்த்துவிட்டுத்தான் பாசில் தான் இயக்கிய பூவே பூச்சுடவா படத்தில் இவருக்கு வாய்ப்புத் தந்தார் அப்படம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது . அதன் பிறகு வெளியான மணிரத்னம் இயக்கிய மௌனராகம் இவரது புகழை உயர்த்தியதோடு, விமர்சகர்களின் பாராட்டுக்களையும்
பெற்று தந்தது.
மணிரத்தினத்துடன் இணைந்து நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே என பல படங்க ளில் பணியாற்றிய இவர் நாயகன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை 1988 ஆம் ஆண்டில் பெற்றார்
கமலுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் ஆகிய படங்களில் பணியாற்றிய இவர், இயக்கிய முதல் படம் விக்ரம் கதாநாயகனாக நடித்த மீரா. அதைத் தொடர்ந்து கமல் தயாரித்து, நடித்த குருதிப்புனல்' படத்தை இயக்கி, தான், ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிருபித்தவர் இவர் . இந்தப் படம் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இவர் இயக்கிய இன்னொரு படம் புதுமுகங்கள் நடித்த வானம் வசப்படும் . இந்தியாவில் டிஜிட்டல் கேமிராவில் படமாக்கப்பட்ட முதல் படம் இது
படத்தின் கதையை முழுவதும்
கேட்காமல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொள்வதில்லை என்பதைக் கொள்கையாக
வைத்திருக்கும் இவர் அஜித் நடித்த முகவரி, விஜய் நடித்த குஷி, உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இதுவரை 35 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் ஒளிப்பதிவு செய்த
முதல் இந்திப் படம் பால்கி இயக்கத்தில் அமிதாப்பாச்சன் நடித்த ‘சீனி கம். அதைத் தொடர்ந்து அமிதாப் நடித்தா பா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர் தற்போது
அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ஷ்மிதாப் இந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு
செய்கிறார் . ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பிரமாணட படமான ஐ, மணிரத்னம் இயக்கி வரும் ஒகே கண்மணி ஆகிய படங்கல் இவர் இப்போது பணியாற்றி வரும் தமிழ்ப் படங்கள்
இந்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசு, கேரள அரசு, ஆந்திர அரசு விருதுகள், என பல விருதுகள் பெற்றிருக்கும் இவர் வீட்டில் இருந்தால் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் தூங்கமாட்டாராம் .
தமிழகத்தின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்கள்
பட்டியலில் இடம்பெற்றுள்ள கே.வி.ஆனந்த, கே.வி.குகன், திரு. ராம்ஜி, எம்.எஸ்.பிரபு, பெளசியா, அர்விந்தகிருஷ்ணா, பாலசுப்பிரமணியெம், நீரவ் ஷா, மகேஷ் முத்துசாமி, வின்சென்ட், செழியன், சஞ்சய், துவாரகாநாத் ஆகிய பலரும் இவரது சீடர்களே
பி.சி.ஸ்ரீராமின் மனைவி பெயர் சீதா. இவர்களது மகன் ஆஸ்திரேலியாவில் இயக்குனர் கோர்ஸ் படித்திருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த இவரது மகள் ஸ்வேதா அண்மையில் ஒரு விபத்தில் காலமானார்.
ஒளிப்பதிவில் உலக சினிமாவின் உன்னதத் திறத்தை தமிழ் திரைக்கு கொண்டு வந்த அற்புதச் சிற்பியான எளிமையும் சுறுசுறுப்பும்தான் அவரது அடையாளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக