இந்தியாவில் உள்ள இசை
ரசிகர்கள் அனைவரையும் ஒரு சேரக் கவர்ந்த பிரபல பாடகரான யேசுதாஸ். கேரளாவில் உள்ள
கொச்சியில் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி அகஸ்டின் ஜோசப், ஆலிஸ்குட்டி தம்பதியினருக்கு மகனாக
பிறந்தவர்.
இவரது தந்தை அனைவரும் அறிந்த கர்நாடக இசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப் பயிற்சியை
தந்தையிடமே கற்ற யேசுதாஸ்
பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகடாமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சிறிது காலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம்
பயின்ற பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார்
உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில்
சேர்ந்த யேசுதாஸ், நிதிப் பற்றாக் குறையால்
பாதியிலேயே வெளியேறினானாலும் , அக்கல்லூரியில்
பயின்ற காலத்தில் அங்கு ஆசிரியாராக இருந்த செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் நன்மதிப்பைப் பெற்றவரக இவர் இருந்தார் .
இசையுலகில் அப்போது
பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், இவரது திறமையை கண்டு, 1961 ஆம் ஆண்டு ‘கால்பாடுகள்’ என்ற மலையாளப் படத்தில்
‘’ஜாதி பேதம் மதத்து வேஷம் ஏதுமில்லா இடம்
பாரதம்’’ என்கிற பாடலைப் பாடும் வாய்ப்பை கொடுத்தார். இவர் பாடிய இந்த முதல் பாடல் அப்போது சென்னையிலிருந்த பரணி
ஸ்டுடியோவில் பதிவானது. இந்தப் படம்
வெளியாகும் முன்பே வி.தட்சிணாமூர்த்தி இசையில் இவர் பாடியிருந்த படமான ‘வேலுத்தம்பி தளவாய்’ திரைக்கு வந்தது
இவரை தமிழில்
அறிமுகம் செய்தவர் இயக்குனரும், நடிகரும், இசையமைப்பாளருமான வீணை எஸ்.பாலசந்தர். அவர் இயக்கிய ‘பொம்மை’ படத்தில் ‘’நீயும் பொம்மை நானும் பொம்மை’’ என்கிற பாடல்தான் இவர் தமிழில் பாடிய முதல் பாடல் ஆனால் . இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, இவர் பாடிய
இன்னொரு படமான ‘கொஞ்சும் குமரி’ படம் திரைக்கு வெளி வந்தது
இந்தியில் இவர் பாடிய முதல் படம் ஜெ ஜவான் ஜெ கிசான் ஆனால் மலையாளம் தமிழ்
போல இந்தியிலும் இவர் இரண்டாவதாக பாடிய சோட்டி சி பாத் திரைப்படம்தான் முதலில்
வெளியானது
தொடர்ந்து பல தமிழ் பாடல்களை இவர்
பாடி இருந்தாலும் இவரை திரும்பிப் பார்க்க வைத்த பாடல் ‘உரிமைக்குரல்’ படத்தில் இடம்
பெற்ற “விழியே கதையெழுது” என்ற பாடலாகும்
பிறகு எம்.ஜி.ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க”
திரைப் படத்தில்
அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.இவர்
அதில் இவர் பாடியிருந்த “போய் வா நதியலையே”
மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” ஆகிய பாடல்கள் மறக்க
முடியாத பாடல்கள்.
‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில்,
“இந்த பச்சைக்கிளிகொரு”,
‘டாக்டர் சிவா’ படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும்
பிரபலமாக்கியது.
‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’, ‘நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்’,
‘பூவே செம்பூவே’, ‘தென்பாண்டி தமிழே’, ‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘பூங்காற்று புதிதானது’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘செந்தாலும் பூவில்’, ‘கல்யாண தேன்நிலா’, ‘அதிசய ராகம்’ என இவர் பாடிய பாடல்கள் இன்றளவும் இசை ரசிகர்கள் நெஞ்சில்
ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு,
வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி,
இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 70,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள ஒரே சாதனையாளர் இவர்.
2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார் இவர்
இசையுலகில் கே.ஜே. யேசுதாஸின் பங்களிப்பை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ” மற்றும் “பத்ம பூஷன்” ஆகிய “விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ள இவர், மாநில அளவில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய அரசு விருதுகளை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார்.
சாகித்திய அகாதமி விருது, சங்கீத கலா சிகாமணி
விருது, கௌரவ டாக்டர்
பட்டம்’, இசைப் பேரறிஞர்
விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இவர், தனது குருநாதர்
செம்பை வைத்யநாத பாகவதருக்கு பாலாக்காட்டில் சிலையை நிறுவி ஆராதனை செய்து
வருகிறார்
திரையிசைத் தவிர, கர்நாடக இசைக் கச்சேரிகளையும்
தொடர்ந்து நடத்தி வரும் இவர், சமயப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய பல இசைத் தொகுப்புகளையும்
வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்தும்
இருக்கிறார்.
வினோத் விஜய் விஷால் என் இவருக்கு மூன்று
மகன்கள் உள்ளனர். இதில் இவரது இரண்டாவது மகனான் விஜய், தனது தந்தையின் வழியில் திரைப்படப் பாடகராக விளங்குகிறார்.
1971ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது கேரளா முழுவதும் தனது
இசைக்குழுவுடன் இசைக் கச்சேரி நடத்தி அதன் மூலம் வசூலான தொகையை பாரதப் பிரதமரின்
தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் இவர்
இவர் இசை நிகழ்ச்சி நடத்தாத நாடுகளே இல்லை என்னும்
அளவிற்கு உலகம் முழுவதும் பரந்து இசை நிகழ்ச்சிய இவரை பல உலக நாடுகள்
கவுரவப்படுத்தி யுள்ளன
இசையுலகில் இவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளை வேறு
எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது
இருப்பினும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற
கண்ணதாசனின் வரிகளிக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளவர்தான் யேசுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக