செவ்வாய், 21 ஏப்ரல், 2015

ராஜ வம்சத்தில் பிறந்த லதா

எம்.ஜி.ஆர் அறிமுகப் படுத்தியதால்  ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் லதா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட  லதாவின் இயற்பெயர் நளினி. இராமநாதபுரம் ராஜ வம்சத்தில்  1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி பிறந்த  லதாவின்  தந்தை சண்முக ராஜேஸ்வர சேதுபதி. தாயார் லீலாராணி. நடிகை ஸ்ரீபிரியாவை மணந்து கொண்டுள்ள ராஜ்குமார் சேதுபதி லதாவின் தம்பி

தேவ் ஆனந்த் அறிமுகமான இந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கமலா கோட்னீஸ் இவரது பெரியம்மா ஏராளமான இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். அவர்.

இவர் சென்னையில் உள்ள ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தார். சிறு வயதிலேயே வானொலியில் பாடல் கேட்டதும் இவர்  நடனம் ஆடத்  துவங்கி விடுவதைப் பார்த்த இவரது பெரியம்மா, பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி இவர்  நடனம் கற்க ஏற்பாடு செய்தார் .

கிருஷ்ணகுமார் மாஸ்டரிடம் 'கதக்' நடனமும் கற்றுக் கொண்ட இவர் பள்ளி படிப்பிலும் முதன்மையான மாணவியாக இருந்திருக்கிறார்.

பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் பங்கு கொள்லும் இவர்  பத்தாம் வகுப்பு படிக்கும்போது தியாகராய நகர் ராமாராவ் கல்யாண மண்டபத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்  இந்த விழாவை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர்தான் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நாடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுப்பவர். நாடகத்தில் எடுத்த புகைப்படங்களை ஆர்.எஸ்.மனோகரிடம் கொடுப்பதற்கு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றபோது அந்தப் படங்களுடன் இவரது படமும் இருந்திருக்கிறது.

அப்போது ஆர்.எஸ்.மனோகருடன் இருந்த எம்.ஜி.ஆர் யதேச்சையாக இவரது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, "என்னுடன் நடிப்பதற்கு ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பார்களா?' என்று மனோகரிடம் கேட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து  ஆர்.எஸ்.மனோகரே இவரது வீட்டுக்கு வந்து இவரது அம்மாவிடம் பேசினார் ஆனால் இவரது  அம்மா சம்மதிக்கவில்லை. "சரி நீங்களே வந்து எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு வந்து விடுங்கள்' என்று .   மாம்பலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு இவரை அழைத்துச் சென்றார் ஆர்.எஸ்.மனோகர்

அங்கு "சினிமாவில் நடிக்க விருப்பமா?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது "எனக்கு ஆசைதான். ஆனால் அம்மாவுக்கு விருப்பமில்லையே?' என்றாராம் இவர்

அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று  சொன்ன எம்.ஜி.ஆர். இவரது
அம்மாவின் சம்மதத்தை வாங்கி விட்டார்
.
 எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிக்க இவர்  ஒப்பந்தம் செய்யப் பட்டவுடன் இவருக்கு எல்லா பயிற்சிகளும் ஆரம்பமானது. பள்ளிக்குச் செல்வதுபோல் தினமும் காலை ஒன்பது மணிக்கு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகம் சென்ற இவருக்கு சோப்ரா மாஸ்டர், புலியூர் சரோஜா போன்ற நடன இயக்குநர்கள்  நடனப் பயிற்சி அளிக்க  பி.டி.சம்பந்தம், நடிகை ஜி.சகுந்தலா ஆகியோர் வசனம் பேசுவது தொடர்பாக பயிற்சியளித்தார்கள்  

படப்பிடிப்பிற்கு முன் நளினி என்கிற இவரது இயற் பெயரை  சினிமாவுக்காக "லதா" என்று மாற்றினார் எம்.ஜி.ஆர்.

1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்து இயக்கி தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானது   இந்த படத்தின் வெற்றி யைத் தொடர்ந்து  உழைக்கும் கரங்கள்,    பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், மீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நவரத்தினம், உரிமைக்குரல் என பதினாறு படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார்.இவர்

எம்.ஜி.ஆர். பிக்சர்சில் ஆரம்பத்திலேயே ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டதால், தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த இவரது  அந்த ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன்பே தளர்த்தி வேற்று மொழிப் படங்களில் நடிக்க நல்ல வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்று இவருக்கு  அனுமதியளித்தார். எம்ஜிஆர்

அதைத் தொடர்ந்து நாகேஸ்வரராவுக்கு ஜோடியாக "அந்தால ராமுடு' என்ற தெலுங்குப் படத்திலும்  கிருஷ்ணம் ராஜூவுக்கு ஜோடியாக "காந்தி புட்டின தேசம்' என்ற படத்திலும் நடித்த இவருக்கு . சிறந்த புதுமுக நடிகைக்கான மாநில அரசின் விருதை  "காந்தி புட்டின தேசம்' படம் பெற்றுத் தந்தது .

என்.டி.ராமராவ், சோபன் பாபு என்று தெலுங்கில் அப்போது முன்னணியில் இருந்த அத்தனை தெலுங்கு நாயகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் .

கன்னடப்படவுலகின் டாப் ஹீரோக்களான ராஜ்குமார், ஸ்ரீநாத் ஆகியோர் உட்பட அனைத்து கன்னட நடிகர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்

தமிழ்,தெலுங்கு கன்னடம் மலையாளம் என . எல்லா தென்னிந்திய  மொழிகளிலும்  நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர்  சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே படம் "சிவகாமியின் செல்வன்'

அடுத்த தலைமுறை நட்சத்திரங்களான ரஜினிகாந்த்துடன் "ஆயிரம் ஜென்மங்கள்', "சங்கர் சலீம் சைமன்' போன்ற படங்களிலும் கமலுடன் "நீயா' "வயநாடான் தம்பான்' போன்ற படங்களிலும் நடித்த இவர்  ஜெய் கணேஷ், விஜயகுமார், ஸ்ரீகாந்த் போன்ற கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்  ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர்  பிரதான வேடத்தில் நடித்த "வருவான் வடிவேலன்' வெள்ளிவிழாப் படமாக அமைந்ததால் மீண்டும் படங்களில் பிசியாகி நடிக்க ஆரம்பித்தார்  இவர்
சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்துள்ள இவர், சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது ,கலைமாமணி விருது ஆந்திர மாநில அரசின் நந்தி  விருது பிலிம்பேர் விருது எனப்  பல  விருதுகளைப்  பெற்றுள்ளார்.

1970 முதல் 1980 வரை பிசியான  நடிகையாக விளங்கிய இவர் சிங்கப்பூர் தொழில் அதிபர் சபாபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் சபாபதி, சிங்கப்பூரில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் கணவருடன் அங்கே போன இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். இருவருமே லண்டனில்தான் படித்தார்கள். மூத்த மகன் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட, அடுத்த மகன் மும்பையில் பணியாற்றுகிறார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  "பொண்ணு விளையும் பூமி'.. படத்தில் குஷ்புவின் தாயாராக  நடித்த இவர்  அதைத் தொடர்ந்து "ரெட்டை ஜடை வயசு', "பத்தினிப் பெண்' "புதுக்குடித்தனம்' என்று பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்

தொலைக் காட்சிக்காக  இவர் முதன் முதலாக நடித்தது இவருக்கு மிகவும் பிடித்த இயக்குனரான கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்' தொடரில். அதில் மண்டோதரி வேடத்தில் நடித்த.இவர்  தொடர்ந்து ராதிகாவின் "சித்தி', "செல்வி', "அரசி' என்று பல மெகா சீரியல்களில்  நடித்துள்ளார். பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பில் இவர்  நடித்த "கஸ்தூரி' தொடர் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பானது.


திரையுலகில் நீண்ட காலமாக இருந்தும் எந்தப் பிரச்னையிலும் எப்போதும் சிக்காதவர் என்பது இவருக்குள்ள தனிக் சிறப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக