கோயம்பத்தூரில் 1954
ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
3 ஆம் தேதி,
சுப்பையா மற்றும்
நாதாம்பாள் தம்பதியருக்கு
மூத்த மகனாகப்
பிறந்தவர் சத்யராஜ்.
அவருக்குப் பெற்றோர்
வைத்த பெயர்,
ரெங்கராஜ். இவருக்கு
இரண்டு இளைய
சகோதரிகள் உள்ளனர்.
கோவை அரசு கலை
கல்லூரியில் தாவரவியலில்
இளங்கலைப் பட்டம்
பெற்ற இவர்,
படிக்கும் போதிலிருந்தே
எம்.ஜி.ஆரின் ரசிகனாகவும், சினிமா மீது ஆர்வம்
உள்ளவராகவும் இருந்து
வந்திருக்கிறார்.
அன்னக்கிளி படப்பிடிப்பை நேரில்
பார்த்த போது,
அதன் கதாநாயகன்
சிவக்குமார் மற்றும்
தயாரிப்பாளர் திருப்பூர்
மணி இருவரிடமும்
சென்று திரையுலகில்
நுழைய வேண்டுமென்ற
ஆர்வத்தை, அவர்களிடம்
தெரிவித்திருக்கிறார். அவர்கள் உதவியால்,
கோமல் சாமிநாதன்
அவர்களின் நாடகக்
குழுவில் நடிப்பு
பயிற்சி பெற
வாய்ப்பு பெற்றிருக்கிறார்.
சத்யராஜ் சினிமாவில்
வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு முறை இயக்குநர் இமயம் பாரதிராஜாவை பார்க்க அவரது
ஜெமினி காம்ளக்ஸ் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். உதவியாளர்களுடன் இருந்த
பாரதிராஜா, சத்யராஜை மேலும் கீழுமாக பார்த்திருக்கிறார்.
சத்யராஜின் உயரம்,
உடம்பு, முக அமைப்பு பல் ஆகியவற்றை கூர்ந்து பார்த்தவர், ஹீரோவா... சினிமாவுக்கு டிரைப்பன்றியா...
என்று கேட்டவர், பிறகு போங்க நான் சொல்லிவுடுறேன்... என்று திருப்பி அனுப்பி
இருக்கிறார்.
சத்யராஜ் சென்ற பிறகு
தனது உதவியாளர்களிடம், இந்த ஆளெல்லாம் பைட்டிங்குக்குத்தான் லாயக்கு... ஹீரோவா
நடிக்கனுமாம் என்னப்பா... இது என்று சொல்லி இருக்கிறார்.
பாரதிராஜா சொன்னது
போலவே டி.என்.பாலு இயக்கிய சட்டம் என் கையில் படத்தில் பைட்டிங் சீனில் நடித்து
சினிமாவில் அறிமுகமானார், சத்யராஜ்.
அதன் பிறகு பல
படங்களில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, எந்த பாரதிராஜா அவரை ஹீரோவா ஏற்க
மறுத்தாரோ, அதே பாரதிராஜா, தனது முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சியில் நையாண்டி,
லொள்ளு பேசி நடித்த சத்யராஜைப் பார்த்து அசந்து போய் அவரை தனது அடுத்தப் படமான
கடலோரக் கவிதைப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்து காதலிக்கவும் வைத்தார்....
அதன்
பிறகு கடமை
கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம்,
வேதம் புதிது,
சின்ன தம்பி
பெரிய தம்பி,
பூவிழி வாசலிலே,
அண்ணாநகர் முதல்
தெரு, ஜீவா,
புதிய வானம்,
சின்னப்பதாஸ், தாய்
நாடு, வாத்தியார்
வீட்டுப் பிள்ளை,
உலகம் பிறந்தது
எனக்காக, நடிகன்,
புது மனிதன்,
பிரம்மா, திருமதி
பழனிச்சாமி, தெற்குத்
தெரு மச்சான்,
பங்காளி, உடன்
பிறப்பு, ரிக்க்ஷா
மாமா, ஏர்போர்ட்,
கட்டளை, வால்டர்
வெற்றிவேல், அமைதிப்படை,
வில்லாதி வில்லன்,
மாமன் மகள்,
சேனாதிபதி, பகைவன்,
கல்யாண கலாட்டா,
மலபார் போலீஸ்,
புரட்சிக்காரன், அசத்தல்,
மாறன், மிலிட்டரி,
ஜோர், இங்கிலீஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், கோவை
பிரதர்ஸ், பெரியார்,
ஒன்பது ரூபாய்
நோட்டு, என
பல படங்களில்
கதாநாயகனாக நடித்தார்.
இரண்டு தெலுங்கு படம்
ஒரு மலையாளப்
படம், சென்னை
எக்ஸ்பிரஸ் என்கிற
இந்திப் படம்
என பிற
மொழிகளில் துணை
கதாப்பாத்திரங்களில் நடித்த
இவர், தமிழிலும்
நண்பன், தலைவா,
வருத்தப்படாத வாலிபர்
சங்கம், ராஜாராணி
போன்ற பல
தமிழ்ப் படங்களில்
அப்பா வேடங்களில்
நடித்துள்ளார். தற்ப்போதும்
இசை உட்பட
அரை டஜன்
படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ‘வில்லாதி வில்லன்’ என்கிற
திரைப்படத்தை இயக்கி
இயக்குனராகவும் முத்திரைப்
பதித்திருக்கிறார்
தனக்காக ஒரு படம்
கூட தயாரித்து
நடிக்கத இவர்,
தனது மகன்
சிபிராஜின் வளர்ச்சிக்காக
தனது தாயார்
பெயரில் நாதாம்பாள்
பிலிம் பேக்டரி
என்கிற பட
நிறுவனததை துவங்கி
பிரபு சாலமன்
இயக்கத்தில் லீ’
என்கிற படத்தை
தயாரித்தவர், தற்போது
நாய்கள் ஜாக்கிரதை
என்கிற படத்தையும்
மகனுக்காக தயாரித்து
வருகிறார்.
எம்.
ஜி. ஆரின்
தீவிர ரசிகர்
இவர். அதை
புரிந்து கொண்ட
எம்.ஜி.ஆர். இவருக்கு,
அவர் உடற்பயிற்சி
செய்யும் கர்லாக்கட்டையை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அண்ணாவின் மீது மரியாதை
கொண்டவர் இவர்.
புரட்சிக்காரன் படத்தில்
அண்ணாவின் பேட்சை
கையில் கட்டிக்கொண்டு
நடித்திருப்பதை தனது
பாக்யமாக கருதுகிறார்.
பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுத்திருக்கும் இவர் பெரியார் படத்தில்
நடித்ததற்காக சம்பளம்
எதுவும் வாங்கவிலலை.
இதனால் பெரியார்
அணிந்த மோதிரத்தை
பரிசாக பெற்றிருக்கிறார் இவர்.
இயக்குனரும்,
நடிகருமான மணிவண்ணன்,
இவருடன் பி.யூ.சி
படிக்கும் போது,
சக மாணவனாக
இருந்தவர். அவருடன்
இணைந்து பல
படங்களை வெற்றிப்
படமாக கொடுத்தவர்
இவர்.
தயாரிப்பாளர் திருப்பூர் மணியிடம்
புரொடக்ஷன்
மேனஜராக வேலை
செய்திருக்கிறார் இவர்.
இவர் நடித்த
வண்டிச்சோலை சின்னராசு
உட்பட பல
படங்களை தயாரித்திருகிறார் அவர்.
இவரிடம் மேனஜராக
இருந்த ராஜ்
பிலிம்ஸ் ராமநாதன்
இவரை வைத்து
'நடிகன்', 'வாத்தியார்
வீட்டுப்பிள்ளை, வள்ளல்,
திருமதி பழனிச்சாமி,
தோழர் பாண்டியன்
போன்ற பல
படங்களை தயாரித்தவர்.
தமிழக அரசின் கலைமாமணி
விருது, தமிழக
அரசின் எம்.ஜி. ஆர்
விருது, வேதம்
புதிது’ படத்தில்
நடித்தற்காக சிறந்த
நடிகருக்கான ஃபிலிம்ஃபேர்
விருத, பெரியார்’
படத்திற்காக ‘பெரியார்
விருது’, ‘ஒன்பது
ருபாய் நோட்டு’
படத்திற்காக ‘விஜய்
விருது,
நண்பன்’ படத்தின்
சிறந்த துணைக்
கதாபாத்திரத்திற்கான ‘விஜய் விருது,
சத்தியபாமா பல்கலைக்கழகம்
வழங்கிய ‘கௌரவ
டாக்டர் பட்டம்’
என ஏராளமான
விருதுகளும் பாராட்டுகளும்
பெற்றவர் இவர்.
சினிமாவில் நிலையான ஒரு
இடத்தைப் பிடித்த
பிறகே திருமணம்
செய்து கொள்வது
என்ற எண்ணத்தில்
இருந்த இவரின்
முடிவை குடும்பத்துப்
பெரியவர்கள் மாற்றினார்கள். அதனால்,
தனது 25-வது
வயதில் உறவுப்
பெண் மகேஸ்வரி
என்பவரை திருமணம்
செய்து கொண்டார்.
இவர்களுக்கு
சிபிராஜ் என்கிற
மகனும், திவ்யா
என்ற மகளும்
உள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு ஐஸ்கிரீம்
கடை,
பழைய இரும்பு
வியாபாரம் கடை,
'உயர் ரக
விதைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற
வியாபரம் செய்து
கொண்டே, சினிமா
நடிப்பு முயற்சியிலும்
ஈடுபட்டவர் இவர்.
தகடு தகடு என்றும்,
என் கேரக்டரையே
புரிஞ்சுக்க மாட்டேங்கிறீயே என்றும் எதிர்மறை கதாபாத்திரத்தில் வசனம் பேசி நடித்தாலும்
உள்ளத்தில் தங்க
குணம் படத்தவர்.
தமிழ் உணர்வாளராக,
பகுத்தறிவு சிந்தனையாளராக, தமிழர் நலனில் அக்கறையுள்ளவராக வாழ்பவர் இந்த புரட்சி
தமிழன் சத்யராஜ்
என்பது இந்த
தமிழ் நிலம்
அறியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக