செவ்வாய், 25 அக்டோபர், 2022

நடிகர் பி.பி.ரங்காச்சாரி வாழ்க்கை வரலாறு

தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமை சேர்த்த பழம்பெரும் கலைஞர்களில் மறைந்த பி.பி.ரங்காச்சாரி என்பவரும் ஒருவர். இவரு யாருன்னா... அந்த காலத்துல புகழ்பெற்ற சி.கன்னையாவின் நாடகக் குழுக்களில் ராஜபார்ட்டுகளாக நான்கு பேர் புகழ்பெற்றிருந்தார்கள். அவுங்க எஸ்.ஜி.கிட்டப்பா, மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி, சி.வி.வி.பந்துலு,  இந்த பி.பி.ரங்காச்சாரி. 

அந்த காலத்துல இவுங்க நடிக்கிற நாடகத்துக்கு அதாவது என்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை சொல்றேன்... அதாவது ஒரு பவுன் 50 ரூபாய் விற்ற காலத்தில் கன்னையா அவர்களின் நாடகக் கம்பெனியின் ஓவியருக்கு ஊதியம் ரூபாய் ஆயிரம்... இசையமைப்பாளருக்கு ரூபாய் ஐந்நூறு... உணவு, உடை முதலிய எல்லாம் இலவசமாகக் கொடுத்து மேற்கண்ட ஊதியத்தையும் கொடுத்து... பம்பாயிலிருந்து  தேர்ந்த நிபுணர்களை வரவழைத்துக் காட்சி அமைப்பிலும், இசையமைப்பிலும் புதுமைகளைப் புகுத்தி நடத்துற நாடகத்த பாக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவாங்க... இந்த சங்கீதக் கலைமாமணிகள் ஒருசேர நின்று போட்டி போட்டுக்கொண்டு இசை மழை போழியிரத பார்த்து அசந்து போவாங்க... 

அப்படி தனது பாட்டால் மக்களை மயக்கிய பி.பி.ரங்காச்சாரி அவர்களின் சொந்த ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள திருவந்தநல்லூர். சின்ன வயதில் இருந்தே இசையும் பட்டும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். இசையாலேயே வளர்ந்தார். கதா கலாச்சபங்களில் பின்பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அவரது திறமையைப் பார்த்த நாடக ஆசிரியர் கண்ணயா நாயுடு, தனது நாடக கம்பெனிக்கு அழைத்து வந்தார். 

தொடர்ந்து கண்ணையா அவர்களின் நாடக்குழுவில் நடித்து புகழ்பெற்ற பி.பி.ரங்காச்சாரி, சினிமா உலகினரையும் கவனத்தையும் ஈர்த்தார்.  பேசும் சினிமா வந்த பிறகு அதில் நடிக்க அனுபவமும், திறமையும், நல்ல குரல்வளமும் உள்ள நடிகர்கள் அப்போது தேவைப்பட்டனார். டி.சி. வடிவேலு நாயக்கர் நாடக துறையில் இருந்து சினிமாவுக்கு சென்றதால், பி.பி.ரங்காச்சாரியின் திறமையை அறிந்து தனது காலவா ரிஷி படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தார். 

காளிதாஸ் படத்தில் நாயகன் வெங்கடேசன் தெலுங்கிலும், நாயகி டி.பி.ராஜலட்சுமி தமிழிலும் பேசி நடித்திருந்தனர். இருமொழிகளில் அந்தப் படம் உருவானதால் அது முழுக்க முழுக்க தமிழ்ப் படம் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தது. அதனால், முழுக்க முழுக்க அனைவரும் தமிழ் மொழியில் பேசி நடிக்க வேண்டும். முழுநீள தமிழ்ப் படமாக உருவாக்க வேண்டும் என்று பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனைப் பற்றிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட பம்மல் சம்பந்தம் முதலியார் கதையை வாங்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றார், இயக்குநர் டி.சி. வடிவேலு நாயக்கர். 

கதைக்கு தகுந்த நடிகர்களே தேவை என்பதால் பி.பி.ரங்காச்சாரியுடன் வி. எஸ். சுந்தரேச ஐயர்,  டி.ஆர்.முத்துலட்சுமி என சிலரை தேர்வு செய்து பம்பாய்க்கு அழைத்து சென்று நடிக்க வைத்தார், டி.சி.வடிவேலு நாயக்கர். பம்பாய் சாகர் கம்பெனி தயாரித்த இந்தப் படத்தில் நாரதர் வேடத்தில் பி.பி.ரங்காச்சாரி  நடித்தார். 

“காலவா” படத்திற்கு பிறகு  மூன்றாண்டுகள் ஓடிய எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த “ஹரிதாஸ்”, “அம்பிகாபதி”, “ஆராய்ச்சி மணி”, “சிவகவி”, “ஜெகதலப்ரதாபன்”, “மதனமாலா”, “திருமழிசை ஆழ்வார்”, “சுதர்ஸன்”, “தூக்கு தூக்கி”, சேதுபந்தம், கலையரசி, சைந்தர கீசகா வாதம், மோகினி ருக்மங்கடா என்று பல  படங்களில் நடித்தார், பி.பி.ரங்காச்சாரி. கதாநாயகனாக அறிமுகமானாலும், தனக்கு கிடைத்த எல்லா பாத்திரங்களிலும் பிரகாசித்தார், ரங்காச்சாரி. 

அம்பிகாபதி திரைப்படத்தில் இளவரசியின் தந்தையாக நடித்த ரங்காச்சாரி கம்பீரத் தோற்றத்துடன் கூடிய சோழ மன்னனாக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவர் வசனம் பேசும் கட்சியில் படம் பார்க்கிறவர்களுக்கு வேதனையும் பச்சாதாபமும் சூழ்ந்து கொள்ளும். அந்தளவுக்கு சோழ மன்னனின் வேதனையை வெளிப்படுத்தி இருப்பார். 

1936 ஆம் ஆண்டு வெளியான பாதுகா பட்டாபிரகம் எனும் திரைப்படத்தில் தசரதராக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அன்றைய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் அதே ஆண்டு வெளிவந்த சந்திரகாசன் என்ற திரைப்படத்தில் முந்தைய படத்திற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட வில்லன் வேடன் ஏற்றும் நடித்தார். இப்படி ஒரு வருடத்தில் வேறுபட்ட இரு வேடங்கள் ஏற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதன் மூலம் மிகச் சிறந்த குண குணச்சித்திர நடிகராக திரை உலகில் அனைவராலும் பாராட்ட பெற்றார். 

கே ராம்நாத், இயக்குனர் முருகதாசா, கலை இயக்குனர் சேகர் ஆகியோர் இணைந்து கார்த்திகேயா ஃபிலிம் ஸ்டுடியோ என்ற ஸ்டூடியோவை தொடங்கி சுந்தரமூர்த்தி நாயனார் என்கிற படத்தை 1937 ஆம் ஆண்டு தயாரித்தனர். இதில் ரங்காச்சாரி வேதியர் பாத்திரத்தில் நடித்தார். கலை அம்சத்தில் சிறந்த படமாக விளங்கினாலும் வசூலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 

கற்புக்கரசி திரைப்படத்தில் இவர் நடித்த மகாமுனிவர் பாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்த்தது. இதைத்தொடர்ந்து வரிசையாக இரண்டு மூன்று படங்களில் முனிவர் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். 1957ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி படமான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம் ஜி ஆர் இளவரசனாக நடித்தார். அதில் இளவரசனின் தந்தையாகவும் காவேரிப்பட்டினம் மன்னராகவும் ரங்காச்சாரி நடித்தார். இதுவே இவருக்கு கடைசி திரைப்படமாகும். 

நடிப்பது மட்டுமின்றி பாடுவதிலும் சளைத்தவர் அல்ல ரங்காச்சாரி. இவருடைய பாட்டுக்கு ஒரு காலத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன் கோரஸ் குரல் கொடுத்துள்ளார். 

1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி தன்னுடைய 62 ஆவது வயதில் பிபி ரங்காச்சாரி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக