ஸ்ரீவைகுண்டத்தில் 1918 அம ஆண்டு துரைசாமி பிள்ளைக்கும் ஜானகி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தவர், எஸ்.டி.சுப்புலட்சுமி. சிறுவயதிலிருந்தே அவருக்கு பாட்டின் மீது ஆர்வம். அதுவும் மேடை நாடகங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார். குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர் கர்நாடக இசை மற்றும் நடனம் கற்றுக்கொண்டார். அவளுடைய பெற்றோர்கள் அவளைப் பல்வேறு ஒப்பனைகளில் புகைப்படம் எடுத்து பல நாடக நிறுவனங்களுக்குக் காட்டினார்கள். மேடை நாடகங்களில் குழந்தை நடிகையாகத் தொடங்க இது அவருக்கு உதவியது. மேடை நாடகங்களில் நடித்து வளர்ந்து, எம்.கே.தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பிரபல கலைஞர்களுடன் பல நாடகங்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்றார்.
M. K. தியாகராஜ பாகவதருடன் அவர் நடித்து மிகவும் பிரபலமான ஒரு நாடகம் பவளக்கொடி. அந்த நாடகம் சினிமாவாக உருவான போது நாடகத்தில் நடித்த அதே அல்லி பாத்திரத்தில் நடித்தார், எஸ்.டி.சுப்புலட்சுமி. அந்தப் படத்தில் அவர்க்கு சம்பளம் இரண்டாயிரம். அவருடன் அந்தப் படத்தில் அறிமுகமான எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 700 சம்பளமும் என்றால் பார்த்துக் கொல்லங்களேன்...
மறுபடியும் கே. சுப்பிரமணியம் இயக்கிய நவீன சாரங்கதாரா படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து எஸ்.டி.சுப்புலட்சுமி, அந்தப் படம் முடியும் போது, இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் வாழ்க்கைத் துணையாகவும் இணைந்தார். அதன் பிறகு நவீன சேதாரம், பக்த குசேலா, உஷா கல்யாணம், பாலயோகினி, மிஸ்டர் அம்மாஞ்சி, தியாக பூமி, கௌசல்யா கல்யாணம், பக்த தேசா, அனந்தசயனம்
, பர்த்ருஹரி, மானசம்ரட்சணம், விகடயோகி, கச்சதேவயானி, அந்தமான் கைதி, பணம், தூக்கு தூக்கி, துளி விஷம், குலேபகாவாலி,மாதர்குல மானிக்கும், ராஜராஜன், ராணி லலிதாங்கி, சம்பூர்ண ராமாயணம், கடவுளின் குழந்தை, சிவகாமி, பட்டினத்தார் என 1934 முதல் 1970 வரை அவரது திரைப் பயணம் நிகழ்ந்தது.
கே. சுப்ரமண்யம் - எஸ்.டி.சுப்புலட்சுமி தம்பதியர் பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டனர். 1950களில் நடுவில் எஸ்.டி.சுப்புலட்சுமி மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது எம்.கே.தியாகராஜ பாகவதரும் பட வாய்ப்புகளை இழந்திருந்தார். எம்.கே.டி., எஸ்.டி.எஸ் ஜோடி இணைந்து பவளக்கொடி, வள்ளி திருமணம், ஹரிதாஸ் போன்ற நாடகங்களில் நடித்தனர். அவர்களது நாடகங்களில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் ஆர்மோனியம் வாசித்தார்.
எஸ்.டி.சுப்புலட்சுமி பின்னாட்களில் கல்யாணப் பரிசு, பட்டணத்தில் பூதம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்துள்ளார். தன் கடைசிக் காலத்தில் கதாகலாட்சேபம் செய்து வந்தார். கே.சுப்ரமண்யம் இறந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1987ஆம் ஆண்டு எஸ்.டி. சுப்புலட்சுமி இறந்தார். இசைக் கச்சேரிகள் நடத்திவரும் அபஸ்வரம் ராம்ஜி இத்தம்பதியரின் ஒரே மகன். அந்த கலைமகளின் மகன் உருவிலும் அவரது கலைப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக