வெள்ளி, 28 அக்டோபர், 2022

நடிகர் சி.வி.வி.பந்துலு வாழ்க்கை வரலாறு

நாடக உலகில் பெரும் புகழோடு இருந்து அப்படியே தமிழ் சினிமாவிலும் வெற்றிக் கொடியை பறக்கவிட்டவர்கள் பலர் இருந்துள்ளார்கள். அவர்களில் புகழ்பெற்ற கண்ணையா நாடகக் குழுவில் ராஜபார்ட்ஆக விளங்கிய சி.வி.வி. பந்துலு என்பவரும் ஒருவர். 

கண்ணையாவின் நாடகக் குழுவில் முக்கிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜி. கிட்டப்பா, திருச்சியில் நடந்த 460 வது நாடகத்தின் போது விலகி விட்டார். அதுவரையில் அந்த நாடக குழுவில் நாரதராக நடித்து வந்த பந்துலுவுக்கு முக்கிய வேடங்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. தசாவதாரத்தில் ராமர், கிருஷ்ணன், மோகினி, ராமானுஜர் வைபவத்தில் ராமானுஜர், பகவத் கீதையில் கிருஷ்ணன் 
 என முக்கிய கதைப்பாத்திரங்களில் நடிக்க பந்தலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 1800 நாடகங்களில் அங்கு நடித்திருக்கிறார்.  தென்னகம் எங்கும் அவர் பிரபலம். 

தென்னகம் முழுவதும் பிரபலமாக இருப்பவரை சினிமா சும்மாவிடுமா? சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனியரால் கல்கத்தா பயணியர் பிலிம் ஸ்டுடியோவில் உருவான கிருஷ்ணலீலா என்கிற தமிழ்ப் படத்தில் சி.எஸ்.ஜெயராமன், சி.எஸ்.ராமண்ணா, எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார். பி.வி.ராவ் இயக்கிய அந்தப் படத்தை தொடர்ந்து அதே கம்பெனி அதிக பொருட்செலவில், ஆர்.பத்மநாபன் இயக்கத்தில் துரௌபதி வஸ்திராபகரணம் என்கிற படத்தை தயாரித்த போது அந்தப் படத்திலும் நடித்தார், சி. வி. வி. பந்துலு. அதிக பொருட் செலவுடன் ஐம்பது பாடல்களுடன் வெளியான அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம் ஆகியோரின் நடிப்பும் பாடலும் இடம்பெற்றிருந்தது. 

அதன் பிறகு தூக்குத் தூக்கி, உஷா கல்யாணம், மீராபாய், நந்தகுமார், ஆனந்த ஆஸ்ரமம், சதி மகானந்தா, விக்ரம ஊர்வசி, ஹரிஹரமாயா, உத்தமபுத்திரன், கங்காவதார், கிருஷ்ணபிடாரன், ராஜசூயம், உத்தமி, பக்த துளசிதாஸ், நவஜீவனம், ஸ்ரீ லட்சுமி விஜயம், மச்சரேகை, ராஜ விக்கிரமா, இதய கீதம், ஏழை உழவன், தர்ம தேவதா, சத்யசோதனை,  சௌதாமினி, மோகனசுந்தரம், வன சுந்தரி, கல்யாணம் பண்ணிப்பார்,  தாய் உள்ளம், பணக்காரி, செல்லப்பிள்ளை, குணசுந்தரி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, புதுமைப்பித்தன், மாயா பஜார், ராஜராஜன், செஞ்சி லெட்சுமி, பாகப்பிரிவினை, தாயில்லா பிள்ளை,  பட்டினத்தார், அத்தை மகள், நடு இரவில், சாரங்கதரா, கொஞ்சும் சலங்கை, ‘கல்யாணம் பண்ணிப்பார்’ போன்ற 50-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரைக் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கப்பெறவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக